பழமொழிகளில் ‘வழி’

This entry is part 5 of 40 in the series 1 ஏப்ரல் 2012

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com வழி என்ற சொல்லிற்குப் பாதை, நெறி, தீர்வு என்ற பொருள்கள் வழக்கில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஒருவர் தனது நண்பரிடம், ‘‘நான் என் வழியில் போறேன். நீங்கள் உங்க வழயில போங்க’’ என்றும், ‘‘என் வழியில குறுக்கிடாதீங்க’’ என்றும் கோபத்துடன் கூறும்போது வழி என்பதற்குப் பாதை, நெறி என்ற பொருள் புலப்படுகின்றது. ‘‘ஒரு வழியும் புலப்படவிலலை’’ என்று கவலையுடன் கூறும்போது, ‘தீர்வு, முடிவு’ […]

‘புதுப் புனல்’ விருது பெறும் ம.ந.ராமசாமி

This entry is part 4 of 40 in the series 1 ஏப்ரல் 2012

>>> லிப்ஸ்டிக் அணிந்த பெண்மணி >>> ம.ந.ராமசாமிக்கும் எனக்குமான நட்பு பல பத்தாண்டுகள் கடந்தது. ஒருவகையில் பழம் திரைப்படங்களின் காதல் காட்சி போல என இதை, இந்த நட்பைச் சொல்லிவிடலாம். கறுப்பு வெள்ளைத் திரைப்படங்களில் டமாலென்று அவனும் அவளும் மோதிக்கொண்டு சண்டைவெடிக்கும். பிறகு மெல்ல அவனைப் பார்க்க அவளுள் வெட்கம் பூசிய சந்தோஷம் வரும். ம.ந.ரா. எனக்குப் பரிச்சயம் ஆனபோது எனக்கு அவர்மீது பல கடுமையான விமரிசனங்கள் இருந்தன. சில இன்னும் இருக்கின்றன. அவரது பெரும்பாலான கதைகள் […]

கம்பனின் சகோதரத்துவம்

This entry is part 1 of 40 in the series 1 ஏப்ரல் 2012

ஹாங்காங்கில் மார்ச் 17ஆம் தேதி நடந்த இலக்கிய வட்டத்தின் போது பேசியது. சித்ரா சிவகுமார் உலகம் யாவையும் தாமுள வாக்கலும், நிலை பெறுத்தலும், நீக்கலும் நீங்கலா, அலகிலா விளையாட்டு உடையார் – அவர் தலைவர், அன்னவர்க்கே சரண் நாங்களே. கம்பனின் கடவுள் வாழ்த்துடன் கம்பன் பற்றிய என் கருத்தினை உங்கள் முன் வைக்க முயற்சிக்கிறேன். பள்ளி நாட்களிலும் கல்லூரியிலும் கம்பன் பற்றி என் ஆசிரியர்கள் மிகச் சீரிய முறையில் அறிமுகப்படுத்தினர் என்றே சொல்ல வேண்டும். பாடல்களின் பொருளை […]

இறையன்பு எழுதிய “ஓடும் நதியின் ஓசை”- விமர்சனம்

This entry is part 33 of 42 in the series 25 மார்ச் 2012

இறையன்பு அவர்களின் பேச்சை நேரிலோ டிவியிலோ பார்த்திருக்கிறீர்களா? அருவி போல் தங்கு தடையின்றி அழகிய தமிழில் பேசுவார். அதே போல் தான் உள்ளது அவர் எழுத்தும். நல்ல பேச்சாளர் நல்ல எழுத்தாளர் ஆகவும் உள்ளதை காணும் போது ஆச்சரியமாக உள்ளது. இறையன்பு எழுதிய “ஓடும் நதியின் ஓசை” கட்டுரை தொகுப்பை சமீபத்தில் வாசிக்க முடிந்தது. துவக்கத்திலேயே இவ்வாறு சொல்கிறார் எழுத்தாளர்: “சுய முன்னேற்றத்தில் எனக்கு உடன்பாடு இல்லை ஜடா முனிவரை போல் அமர்ந்து அறிவுரை கூறவும் எனக்கு […]

நீலகேசி காட்டும் உயிர்ஓர்மை (அல்லது) முக்கூட்டு மருந்து

This entry is part 29 of 42 in the series 25 மார்ச் 2012

இணைப்பேராசிரியர், மா. மன்னர்கல்லூரி(த), புதுக்கோட்டை. ஒற்றுமை என்பது உலக ஒற்றுமை, நாட்டின் ஒற்றுமை, இனத்தின் ஒற்றுமை, குழுவின் ஒற்றுமை என்று பகுக்கப் பகுக்க சிறுபிரிவாய் குறுகும் தன்மையை உடையது. இச்சிறு சிறு பிரிவுகள் ஒன்றாக்கப் பெற்றால் மட்டுமே உலக ஒற்றுமை என்பது பெறப்படும். ஆனால் இனத்தால், மொழியால், நிறத்தால் பாகுபட்டு நிற்கும் சமுகத்தை எவ்வளவுதான் ஒன்றிணைத்தாலும் அது தன்னுடைய இயல்பான பிரிதலை நோக்கியே செல்லும். இந்தப் பிரிதலைத் தடுத்து ஒற்றுமையை நிலைநாட்ட இந்தியத் தத்துவங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிதான் […]

உஷாதீபனின் “தனித்திருப்பவனின் அறை” சிறுகதைத் தொகுப்பிற்கு எழுத்தாளர் திரு நரசய்யா அவர்கள் அளித்துள்ள முன்னுரை

This entry is part 27 of 42 in the series 25 மார்ச் 2012

உஷாதீபனின் கதைகளில் காணப்படும் மனிதாபிமானம் ஆசிரியரின் மன நிலையைக் காட்டுகிறது. சிறுகதைகளில் ஆளப்படும் சில சிறந்த யுக்திகளை அவர் கையாண்டிருப்பது மெச்சத்தக்கதாக உள்ளது. சுருங்கச் சொல்லித் தாம் ஸ்ருஷ்டித்திருக்கும் கதாபாத்திரங்களை படிப்பவர் மனதில் உணர்ச்சி பொங்க வைத்திருக்கிறார் என்பது உண்மை. எட்கர் ஆலன் போ சொன்ன கருத்தான “சிறுகதை என்பது அரை மணியிலிருந்து ஒரு மணி அல்லது இரண்டு மணி அவகாசத்துக்குள் ஒரே மூச்சில் படித்து முடிக்க்க் கூடியதாக இருக்க வேண்டும். அது தன்னளவில் முழுமை பெற்றிருக்க […]

பழமொழிகளில் அளவுகள்

This entry is part 9 of 42 in the series 25 மார்ச் 2012

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com பழந்தமிழகத்தில் பல்வேறுவிதமான அளவுகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. நீட்டலளவை, நிறுத்தல் அளவை, முகத்தலளவை உள்ளிட்ட அளவுகளுக்குப் பல்வேறுவிதமான பெயர்கள் வழக்கத்திலிருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனித்தனிப் பெயர்களால் வழங்கப்பட்டு வந்தது. இவ்வளவுப் பெயர்கள் நம் முன்னோர்களின் கணக்கியலறிவிற்குச் சான்றாக அமைந்துள்ளன. இவ்வாறு வழங்கி வந்த அளவுப் பெயர்களைப் பழமொழிகளில் அமைத்து நமது வாழ்விற்குரிய பண்பாட்டு நெறிகளை நமது முன்னோர்கள் எடுத்துரைத்துள்ளனர். அளத்தல் நமது முன்னோர்கள் ஒவ்வொரு […]

சங்க கால சோழநாட்டு ஊர்கள்

This entry is part 5 of 42 in the series 25 மார்ச் 2012

ப.செந்தில்குமாரி முனைவர்ப் பட்ட ஆய்வாளர், அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி) கும்பகோணம்   சங்க காலத்தமிழகம் அரசியலால் சேர, சோழ, பாண்டிய vஎன மூவேந்தர்களின் பெருநாடுகளாகவும், சிறு குறுநிலங்களாகவும், பிளவுண்டு கிடந்தது. ஆனால் மொழியாலும், பண்பாட்டாலும் தமிழர்கள் ஒன்றுபட்டிருந்தனர். இந்த மூன்று பெருநாடுகளிலும் வாழ்ந்த புலவர்கள், மூவேந்தர்களையும் பாடிப் பரிசில் பெற்று வாழ்ந்ததை சங்க இலக்கியங்கள் எடுத்தியம்புகின்றன.   சங்க இலக்கியம் பாடியவர்களில் பெயர் தெரிந்த புலவர்களாக 473 பேர் காணப்படுகின்றனர். இவர்களுடன் சேர, சோழ, பாண்டிய, […]

இலக்குமி குமாரன் ஞானதிரவியம் படைப்புகளில் குடும்பத்தலைவி சித்திரிப்பு

This entry is part 4 of 42 in the series 25 மார்ச் 2012

சி. இளஞ்சேரன் முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் பள்ளி தமிழ்ப்பல்கலைக் கழகம் தஞ்சாவூர் இலக்குமி குமாரன் ஞானதிரவியம் சிறுகதைகள், கவிதைகள், நாவல் போன்ற படைப்புகளை அளித்து வரும் தஞ்சை மண் சார்ந்த படைப்பாளி ஆவார். இவரின் படைப்புகளில் குடும்பம் சார்ந்து அமைகின்ற குடும்பத்தலைவி சித்திரிப்பு முறை கவனிக்கத்தக்கதாக உள்ளது. இவரின் சிறுகதைகளில் இடம் பெறும் குடும்பத்தலைவியர் இயல்பான,குறும்பு இழையோடுகிற பாத்திரங்களாகப் படைக்கப் பெற்றுள்ளனர். திருமணமான பெண் ஒரு குடும்பத்தின் தலைவியாக அமைந்து அக்குடும்பத்தை நிர்வாகம் செய்யக் […]

வைரமுத்து படைப்புகளில் வாழ்வியல் சடங்குகள்

This entry is part 2 of 42 in the series 25 மார்ச் 2012

ந.லெட்சுமி முனைவர் பட்ட ஆய்வாளார், தமிழ்த்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சி 2. முன்னுரை : மானிடச் சமூகம் தன்னை நெறிப்படுத்திக் கொள்ளவும், தங்களது வாழ்வினை நலம் நிறைந்த வாழ்வாகவும், வளம் நிறைந்த வாழ்வாகவும் மாற்றிக் கொள்ள பல்வேறு சடங்குகளைச் செய்து வந்தனர். மனித வாழ்வில் நடைபெறும் செயல், பழக்கம், சடங்கு இம்மூன்றும் வெவ்வேறு வளர்ச்சிப் படியிலுள்ள செயலாகும். வைரமுத்து படைப்புகளில் சடங்குகள் பற்றிய ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். சடங்கு பெயர்க்காரணம் நாடோடிகளாகத் திரிந்த […]