ஸ்ரீ கிருஷ்ண ஆலனஹள்ளியின் வனக்கோயில் (தமிழில் ராஜேஸ்வரி கோதண்டம்.) நூல் பார்வை

This entry is part 1 of 42 in the series 25 மார்ச் 2012

மொழிபெயர்ப்பு நூல்களின் தேவை அதிகமான காலகட்டம் இது. ஒவ்வொரு மொழிபெயர்ப்பு நூலும் தான் சார்ந்த மண்ணின் மணத்தையும். தன்  மொழி வளத்தையும் சுமந்து வந்து நமக்கு அந்த மண்ணை நுகரச் செய்யும் அழகான முயற்சி.அந்த முயற்சியில் மிகச் சிறப்பாகச் சாதித்துவரும் திருமதி ராஜேஸ்வரி கோதண்டம் அவர்களின் அருமையான நடையில் வெளிவந்துள்ள நூல் “ வனக்கோயில்”. ஸ்ரீ கிருஷ்ண ஆலனஹள்ளியின்  “ அடவி” என்ற  கன்னடப் புதினத்தைத் தமிழில் வனக்கோயில் என்ற பெயரில் மொழியாக்கம் செய்துள்ளார். இவர் கிட்டத்தட்ட […]

இலக்குமி குமாரன் ஞானதிரவியம் படைப்புகளில் கிராம சமுதாயம்

This entry is part 31 of 36 in the series 18 மார்ச் 2012

சி. இளஞ்சேரன் முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் பள்ளி தமிழ்ப்பல்கலைக் கழகம் தஞ்சாவூர் கிராம சமுதாயம் என்பது இயற்கையோடு இயைந்த சமுதாயமாகவும், மனிதர்களின் மகிழ்ச்சிக்கும், அமைதிக்கும் குறைவில்லாத சமுதாயமாகவும் விளங்குவதாக இலக்குமி குமாரன் ஞானதிரவியம் தன் படைப்புகளில் கண்டுள்ளார். இளமைக்காலத்தில் இவருக்குக் கிராம வாழ்க்கை வாய்த்திருக்கிறது. இதன்காரணமாக தன் இளமைக்கால கிராம வாழ்க்கை நினைவுகளை அவர் தன் படைப்புகளில் அசைபோட்டுப் பார்க்கிறார். “காட்டுத்தரிசில் ஆட்டை மடக்கிவிட்டு நாவல், இலந்தை, பலா, ஈச்சை, கலாக்காய், பாலா எனக் […]

வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து -3 “காம சூத்ராவைக் கடந்துவா” –

This entry is part 26 of 36 in the series 18 மார்ச் 2012

எத்தனை இயல்பாய் இருக்கிறது இரவெல்லாம் புணர்ந்த இந்த உலகம் ’ காமக்கடும்புனல்’ கவிதைத் தொகுப்பிலுள்ள மகுடேஸ்வரனின் கவிதை வரிகள். காமம் எத்தனை இயல்பான ஒன்று. ஆனால், அது குறித்து இந்த உலகம் எத்தனை பாசாங்கு செய்கிறது என்பதை மிக நேர்த்தியாகச் சுட்டும் வரிகள். உலகில், உயிரினம் தோன்றிய போதே உருவான உணர்வு பசியும் காமமும் தான். ஆம்.காமம் என்னும் இச்சை மட்டும் இல்லாதிருந்திருந்தால் இனப்பெருக்கம் குறித்து எந்த உயிரினமும் கவலைப்பட்டிருக்க வாய்ப்பில்லை. இவ்வுலக இயக்கத்தின் தொடர்ச்சியை உறுதிப்படுத்த […]

வளவ. துரையனின் நேர்காணல் – 2

This entry is part 25 of 36 in the series 18 மார்ச் 2012

வினாத் தொகுப்பு——–பாரதி இளவேனில் [அன்பாதவன்] இரண்டாம் பகுதி அண்ணா—பெரியார் குறித்தெல்லாம் கவியரங்கக் கவிதைகள் வாசித்தவர் வாழ்வில்” வைணவ விருந்து” எப்படி? ஒரே வரியில் பதில் சொல்லித் தப்பித்து விடலாம். “எல்லாம் தமிழில்தானே இருக்கிறது”. ஓரளவுக்கு இது உண்மை என்றாலும் மாற்றம் என்ற சொல்லைத் தவிர எல்லாம் மாறக் கூடியவைதானே? கண்ணதாசன் கூறியது நினைவுக்கு வருகிறது “ மாற்றம் என்பது மானிடத் தத்துவம் “. நான் இலக்கியத்தில் புகுந்தபோது ஈர்த்தவை திராவிட இயக்கமும், பகுத்தறிவும், இறை மறுப்பும்தான். வளவனூர் […]

‘சாதனை அரசிகள்’ தேனம்மை லெக்ஷ்மணனின் கட்டுரைத் தொகுப்பு – ஒரு பார்வை

This entry is part 24 of 36 in the series 18 மார்ச் 2012

தன் வலிமை, அறிவு, திறமை, ஆற்றல் இவற்றை வெளிப்படையாக உலகறிய நீரூபிக்கும் பெண்கள் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப்படுகிறார்கள். உழைப்பும் முயற்சியும் சேராமல் வெற்றி எளிதாக வாய்த்திடுவதில்லை. போற்றப்படும் எல்லாப் பெண்களின் வெற்றிக்கும் காரணிகளாக அவை இருப்பதை மறுக்கவே முடியாது. சிலருக்கு சாதகமான சூழல்கள், குடும்பம் மற்றும் நட்புகளின் ஆதரவு, தட்டத் தட்டத் திறக்கும் வாய்ப்புகள் இவற்றால் ஓடும் களம் அதிக மேடு பள்ளங்களற்று அமைகின்றன. சிலருக்கோ முட்களும், கற்களும், தடங்கல்களும் நிறைந்ததாக இருக்கின்றன. ஒவ்வொரு கட்டத்திலும் புயலின் […]

அரிநெல் – பிச்சினிக்காடு இளங்கோ

This entry is part 15 of 36 in the series 18 மார்ச் 2012

ஐயன் வள்ளுவனின் இரட்டை வரிக் குறள்கள் சொல்லும் ஆயிரம் கருத்துகள் போல, ஔவைப்பிராட்டி திருவாய் மலர்ந்தருளிய ஒற்றைவரி ஆத்திச்சூடி சொல்லும் ஆயிரம் தத்துவங்கள் போல, சுருங்கச் சொல்லி விளங்கச் செய்யும் உத்தி மிக எளிதாக மக்கள் மனதில் பதியச் செய்யும் சிறந்ததொரு கலை. அந்த வகையில் நவீன கவிதைகள் அதுவும் ந்றுக்கென்று ஒரு சில வார்த்தைகளில் ஆழ்ந்த கருத்துகளைச் சொல்லி சுருக்கென்று உரைக்கச் செய்யும் கவிதைகள் இன்றைய நவீன அவசர உலகத்தின் வாசகர்களுக்கு சிறந்த விருந்துதான்! கவிஞர் […]

வனவாசம் -கண்ணதாசன் புத்தக விமர்சனம்

This entry is part 14 of 36 in the series 18 மார்ச் 2012

வனவாசம் – வானதி பதிப்பகம் மூலம் 37 பதிப்புகள் வெளியாகி, பின் 2010 முதல் கண்ணதாசன் பதிப்பகத்தால் தொடர்ந்து வெளியிடப்படும் புத்தகம். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் கண்ணதாசன் தி.மு.க மீது ஈர்க்கப்பட்டதில் துவங்கி, அந்த கட்சியில் அவர் இருந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை அலசி, பின் அவர் கட்சியிலிருந்து வெளிவருவதுடன் முடிகிறது. இதனாலேயே தி.மு.க எதிர்ப்பு நிலைப்பாடு கொண்டோருக்கு பிடித்தமான புத்தகமாக அமைந்து விடுகிறது. கலைஞர் அபிமானிகள் இப்புத்தகத்தை அதிகம் நேசிக்க மாட்டார்கள் ! துவக்கத்தில் கண்ணதாசனுக்கு […]

நன்பாட்டுப் புலவர் தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்

This entry is part 12 of 36 in the series 18 மார்ச் 2012

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com பழங்காலத்தில் தமிழகத்தில் வழங்கி வந்த தமிழ் மொழியில் தோன்றி வளர்ந்த இலக்கியங்களில் ஒரு பகுதி இன்று வரையில் காக்கப்பட்டு வருகிறது. அத்தகைய தொன்மையான தமிழ் இலக்கியங்களையே சங்க இலக்கியங்கள் என்ற பெயரால் அறிஞர்கள் குறிக்கின்றனர். சங்க இலக்கியங்கள் என்ற தொகுப்பில் உள்ள பாடல்களின் காலம் கி.மு.500 முதல் கி.பி.100 வரையில் என்று கூறுவர். சங்க இலக்கியங்களில் பாடல்களைப் பாடிய புலவர்கள் நாட்டின் மூலை முடுக்குகளிலும் நகரங்களிலும் […]

ச.முத்துவேலின் கவிதைத்தொகுப்பு “மரங்கொத்திச் சிரிப்பு” : இனிய தொடக்கம்

This entry is part 9 of 36 in the series 18 மார்ச் 2012

பாவண்ணன் கடந்த நான்காண்டுகளாக சிற்றிதழ்களிலும் வலைப்பக்கங்களிலும் தொடர்ந்து கவிதைகளை எழுதி வருபவர் முத்துவேல். இடைவிடாத வாசிப்புப்பயிற்சியாலும் எழுத்துப்பயிற்சியாலும் நல்ல கவிதைமொழி அவருக்கு வசப்பட்டிருக்கிறது. வாழ்வின் இருப்பைப்பற்றிய கேள்வியும் தேடலும் இயல்பான வகையில் அவர் கவிதைகளில் வெளிப்படுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இத்தகுதியே இத்தொகுதியை வாசிப்புக்குரியதாக ஆக்குகிறது. தொகுப்பில் மீண்டும் வாழ்தல் என்ற தலைப்பில் ஒரு கவிதை உள்ளது. பழகிப்போன ஒரு வாழ்க்கைமுறையை விட்டுவிலகி இன்னொரு வாழ்க்கைமுறையோடு ஒன்றிப்போவதையே முத்துவேல் மீண்டும் வாழ்தல் என்று குறிப்பிடுகிறார். இக்கவிதையின் வாசிப்பனுவபத்தை […]

ஆற்றைக் கடப்போம். ! ஆற்றலோடு கடப்போம். !! ( அம்பையின் ஆற்றைக் கடத்தல் வெளி ரங்கராஜனின் நாடகம் .. எனது பார்வையில்

This entry is part 8 of 36 in the series 18 மார்ச் 2012

விதிக்கப்பட்டதை எல்லாம் ஏற்று வாழ்ந்து சென்ற சீதையில் குரலாய் ஒலிக்கிறது ஆற்றைக்கடத்தல். அம்பை எழுதிய ஆற்றைக் கடத்தலை வெளி ரங்கராஜன் நாடக ரூபமாக பார்த்தபோது மனம் கூம்பியது, கொந்தளித்தது, வெம்பியது, வெந்தணலானது. காலம் காலமாகப் பல ரகசியங்களைத் தாங்கி ஓடிக் கொண்டிருக்கும் நதியை உற்றுக் கவனித்திருக்கிறீர்களா.. உங்கள் பாடு என்ன கவலை ஆற்றைப் பேருந்தில் கடந்திருப்பீர்கள் , பரந்து விரிந்த அந்த ஆற்றில் எப்போதோ ஒரு முறை இறங்கி ஒரு முங்கு போட்டிருப்பீர்கள். அல்லது உங்கள் பங்குக்கு […]