உம்மா கருவண்டாய் பறந்து போகிறாள்…ஹெச்.ஜி.ரசூலின் – பின்காலனிய கவிதைநூல்

This entry is part 34 of 42 in the series 29 ஜனவரி 2012

நீலகண்டன் எந்தவொரு இருப்பிற்குள்ளும் இன்னுமொரு இருப்பிற்கான வெறுப்பினை வைத்திருக்கும் இந்திய தமிழ் இருப்பினுள் இருந்து ரசூலின் கவிதைகளை வாசிக்க நேரிடுகிறது. வாக்கு,மனம்,காயம்,இவைகளை பெரும்பாலும் இந்துயிசமும்,அதன் அப்பட்டமான உட்கிடக்கையான சாதியும் கைப்பற்றிக் கொண்டதை எதிர்த்துப் போராடும் எனக்கும் அல்லது எவருக்கும் ரசூலின் கவிதைகள் மற்றமைகளுக்கான ஒடுக்குமுறைகளை எதிர்க்கும் இன்னுமொரு புதிய அனுபவத்தை தரத் தயாராய் இருக்கின்றன. தன்னிலிருந்து மற்றமையாக உயிர்த்தெழும் பெண்களின் சன்னமான,அதிநுட்பமான நினைவொலிகளை எழுப்பிக் கொண்டே இருக்கக் கூடியவை ரசூலின் கவிதைகள். குமரிமாவட்டம் தக்கலையைச் சேர்ந்த ரசூல் […]

காலக் கண்ணாடியில் ஒரு கலை இலக்கியப் பார்வை

This entry is part 25 of 42 in the series 29 ஜனவரி 2012

தியத்தலாவ எச். எப். ரிஸ்னா (riznahalal@gmail.com) மணிமேகலைப் பிரசுரத்தின் வெளியீடாக 46 தலைப்புக்களை உள்ளடக்கி 275 பக்கங்களில் காலக் கண்ணாடியில் ஒரு கலை இலக்கியப் பார்வை என்ற திரு. கே.எஸ் சிவகுமாரன் அவர்களின் நூலை வாசித்தபோது எனக்குள் ஆச்சரியம். காரணம் (இதுவரை) தமிழில் திறனாய்வு சார்ந்த 23 நூல்களை இவர் வெளியிட்டிருக்கின்றமைதான். முதல் கட்டுரை பேராசிரியர் திஸ்ஸ காரியவசம் அவர்கள் சிங்களத்தில் எழுதியதன் மொழிபெயர்ப்பு ஆகும். அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார் திரு. கே.எஸ். சிவகுமாரன் அவர்கள். அதைத் […]

சுஜாதாவின் குறுநாவல் “ஆஸ்டின் இல்லம்”

This entry is part 19 of 42 in the series 29 ஜனவரி 2012

“ஆஸ்டின்இல்லம்” சுஜாதாவின் குறுநாவல். பொதுவாய் சுஜாதா கதைகளில் மெசேஜ் இருக்காது என்பார்கள். அதில் பாதி உண்மை. பாதி பொய். சுஜாதா மெசேஜ் சொல்ல வேண்டும் என வலிந்து முனைவதில்லை. சில கதைகளில் நல்லதோர் மெசேஜ் இயல்பாய் இருக்கும். ஆஸ்டின் இல்லம் அத்தகைய ஓர் கதை. ஆஸ்டின் இல்லம் என்கிற பெயர் கொண்ட வீட்டில் ஒரு பெரிய கூட்டு குடும்பம் ஒன்றாக வசிக்கிறது. அந்த வீட்டின் ஓனர் ” பெரியப்பா”. அவரது சொந்தங்கள் பலவும் அந்த வீட்டிலும் அந்த […]

ஜென் ஒரு புரிதல்- பகுதி 29

This entry is part 12 of 42 in the series 29 ஜனவரி 2012

கல்வியின் மகத்துவம் யாரும் அறிந்ததே. புற உலக வாழ்க்கையில் மிகப் பெரிய சக்தி கல்வியறிவே. தெரிதலும், அறிதலும், புரிதலும் அவற்றை மனதில் இருத்தி ஒரு திசையைத் தேர்ந்தெடுத்து மேற் செல்லலும் தரும் பாதுகாப்பு இணையற்றது. இந்தப் பத்திரமே ஒரு சிறை மற்றும் தன்னளவில் ஒரு தேக்க நிலை என்னும் பரிமாணம் தென்படும் தருணம் ஆன்மீகத்தின் துவக்கமாக அமைகிறது. அனேகமாக அது ஒரு கர்வ பங்கம் அல்லது கையறு நிலையினின்று பிறக்கும். அப்படித் துவங்கும் ஆன்மீகம் பிடிபடும் கால […]

பழமொழிகளில் பழியும் பாவமும்

This entry is part 9 of 42 in the series 29 ஜனவரி 2012

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com மனிதர்கள் பலவிதம். மனிதர்கள் ஒருவருக்கொருவர் மாறுபடுவர். சிலர் நடத்தையில் வேறுபடுவர். பழக்கவழக்கங்களில் சிலர் வேறுபடுவர். பேச்சாலும், செயலாலும் வேறுபடுவர். ஆனால் எந்நிலையிலும் மாறாது உண்மையாளராக நடப்பவர் சிலரே ஆவார். இவர்களை நீதிமான்கள், அறவோர் என்றும் பழிபாவத்திற்கு அஞ்சுபவர் என்றும் வழங்குவர். சிலரோ, பழிபாவங்களுக்கு அஞ்சாது இழிவான செயல்களில் ஈடுபடுவர். தாம் தவறு செய்தாலும் அதனை ஒத்துக் கொள்ளாது அதற்கு வேறொருவர்தான் காரணம் என்று கூறுவர். தவறினைச் […]

சிற்றிதழ் அறிமுகம் ‘ பயணம் ‘

This entry is part 7 of 42 in the series 29 ஜனவரி 2012

விருதுநகர் அருகிலிருக்கும், மல்லாங்கிணறு என்கிற கிராமத்திலிருந்து, பல ஆண்டுகளாக வருகிறது இந்த இதழ். இலக்கியம் எங்கோ இருப்பவர்களையெல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்பதற்கு இந்த இதழ் ஒரு சாட்சி. சிற்றிதழ்கள் தனிமனித முயற்சியிலேயே வெளிவருகின்றன. அதனால் விளம்பரம் எதுவும் வரக்கூடாது என்பதில் இன்னமும் பல இதழ்கள் பிடிவாதமாக இருக்கின்றன. அவர்களுக்கு விளம்பரங்கள் கிடைக்கவில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். நமது கையில் இப்போது இருக்கும் இதழ், 86வது இதழ். இதன் ஆசிரியர் சுந்தர்ராஜ். அவரே ஒரு அச்சகமும் வைத்திருக்கிறார். […]

சிம்ம சொப்பனம் – பிடல் காஸ்ட்ரோ

This entry is part 6 of 42 in the series 29 ஜனவரி 2012

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள, மருதன் எழுதிய, சிம்மசொப்பனம் புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஓய்வு பெறும் நாளின் போது, எனக்கு வந்த பரிசுகளில் இதுவும் ஒன்று. ஒரு ப்ளாங்க் சிலேட்டாகத்தான் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். ஆரம்ப அத்தியாயமே பொடனியில் பளேர் என்று அறைகிறது. கியூபாவை ஆக்ரமித்திருக்கும் அமெரிக்க படைகளின் சுங்கச்சாவடிகள்! அவர்களுக்கு முன்னே நிறைய ஜீப்புகள். அதில் ஏராளமான கணினிகள், அதன் தொடர்புடைய பொருட்கள். மொத்தம் 450 கணினிகள். லூசியஸ் வார்க்கர் என்கிற பாதிரியார் அந்தக் குழுவின் […]

பறவைகள் உலகின் கவித்வமும் அழகும்

This entry is part 2 of 42 in the series 29 ஜனவரி 2012

வாழ்க்கையின் அந்திம நாட்களைக் கழிக்க சென்னை வந்தாயிற்று. வீட்டின் முகப்பில் உள்ள மூன்று புறமும் காற்றுக்கு வழிவிட்டுத் திறந்து ஆனால் கம்பி கிராதிகளால் அடைபட்டிருக்கும் வாசலை நோக்கிய இடம் தான் நான் விருப்பத்துடன் பகல் நேரம் முழுதையும் செலவிடும் இடம். வீட்டின் முன் இருக்கும் வெளியிடத்தில் பவளமல்லி, செம்பருத்தி, மரங்கள். அந்தி நேரத்தில் பூத்துக் குலுங்கும் செம்பருத்தி மறுநாள் காலையை வசீகரமாக்கும். பவளமல்லி மரம் பூத்து தரையெல்லாம் கொட்டிக் கிடக்கும். வெண்ணிற இதழ்களும் செந்நிறக் காம்புகளும் கொட்டிக்கிடக்கும் […]

உன்னதமானவர்களின் உள் உலகங்களைக் கண்டு வியக்கும் இந்திரன்

This entry is part 16 of 30 in the series 22 ஜனவரி 2012

நண்பர் இந்திரனும் நானும் வழக்கம்போல தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தபொழுது, “நான் சந்தித்த ஐரோப்பிய எழுத்தாளர்கள் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைகளை நூல் வடிவத்தில் கொண்டுவரும் எண்ணம் இருக்கிறது நாகி உங்களால் ஒரு முன்னுரையைத் எழுதித் தர முடியுமா? எனக் கேட்டிருந்தார். மூத்த படைப்பாளிகளில் ஒருவர் முன்னுரை கேட்பது அசாதரண நிகழ்வே. ஆனால் எழுத்தாள நண்பரின் பண்பை அறிந்தவர்களுக்கு அதில் வியக்க ஒன்றுமில்லை. எனது சொந்த அனுபவங்கள் அவரை படைப்பாளியாக மட்டுமல்ல பழகுவதற்கு இனியவர், பண்பாளர் என்றே உணர்த்தியிருக்கின்றன. இக்கட்டுரைகள் […]

ஒரு நாள் மாலை அளவளாவல் (2)

This entry is part 13 of 30 in the series 22 ஜனவரி 2012

ராஜே: நீங்கள் படைப்பிலக்கியத்தில் ஏன் ஈடுபடவில்லை? இதே தானே அதுவும். யாரோ எழுதியதைப் பார்த்துவிட்டு ,அந்த சந்தோஷத்தை, அனுபவத்தை வெளியில் சொல்கிற உங்களால்….. வெ.சா: எழுதினது மாத்திரம் இல்லை. நடக்கிறது எதுவுமே அது எனக்கு சந்தோஷத்தை இல்லை ஏதோ தாக்கத்தைத் தந்தால், அதைப்பற்றி சொல்லணும் என்று தோன்றினால் சொல்ல வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால், யாரும் கேட்டால் சொல் கிறேன். அவ்வளவு தான். ராஜே: உங்களை யாரும் சிறுகதை எழுதுங்க என்று கேட்கவில்லையா? நாங்கள் கேட்கிறோம் ஒரு சிறு […]