E. Mail: Malar.sethu@gmail.com தமிழ்ப் புலவர்களில் காலந்தோறும் தாக்கத்தை ஏற்படுத்தி வருபவர் திருவள்ளுவர் ஆவார். தாம் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்லாது அடுத்தடுத்து வரும் காலங்களிலும் திருவள்ளுவரின் கருத்துக்கள் செல்வாக்குப் பெற்றுத் திகழ்வது நோக்கத்தக்கது. காப்பியங்களிலிருந்து தற்காலம் வரை தோன்றியுள்ள இலக்கியங்கள் அனைத்திலும் திருக்குறட் கருத்துக்கள் விரவிக் காணப்படுவது கண்கூடாகும். ஒவ்வொரு புலவரும் திருவள்ளுவர்மேல் தணியாத பற்றுக் கொண்டிருந்தனர் என்பதற்கு திருக்குறளையும் அதன் கருத்துக்களையும் உள்ளடக்கி அவர்கள் படைத்த இலக்கியங்களே சான்றுகளாக அமைந்திலங்குகின்றன. காலந்தோறும் திருக்குறள் தாக்கத்தை ஏற்படுத்தி […]
சொர்க்க தீவு என்கிற சுஜாதா நாவல் சமீபத்தில் (மீண்டும்) வாசித்தேன். சுஜாதாவின் எழுத்துக்கள் என்றும் இளமையானவை. சொர்க்க தீவும் இதே விதம் தான். கதை அய்யங்கார் என்கிற சென்னையை சேர்ந்த கணினி இஞ்சினீயர் சில நபர்களால் நைச்சியமாக பேசி, தனி விமானத்தில் கடத்தப்படுகிறார். அவரை கடத்தி, வெளி உலகத்துக்கு தெரியாத ஒரு தனி நாட்டிற்கு அழைத்து செல்கிறார்கள். அந்த நாட்டை நிர்வகிக்கும் சத்யா என்கிற நபரை அவர் சந்திக்கிறார். அவர் தங்கள் கணினி வேலை செய்ய வில்லை […]
வாசிப்பு என்பது வெறுமே புத்தகங்களை வாசிப்பது என்பது மட்டுமல்ல. இந்த மனிதர்களை, மரம் செடி கொடிகளை, இந்த வானத்தை, பறவைகளை, இதர ஜீவ ராசிகளை, இயற்கையை இப்படி அனைத்தையும் வாசிக்கக் கற்றுக் கொண்டவன்தான் ஒரு தேர்ந்த வாசகனாக முடியும் என்று சு.ரா. அவர்கள் அவரது கட்டுரை ஒன்றில் சொல்லியிருப்பார். வாசிக்கக் கற்றுக் கொண்டவர்கள் எல்லோரும் இதை நீக்கமற உணர்ந்திருக்க வேண்டும். வாசிப்பினால் மனிதன் தேர்ந்த விவேகமுள்ளவனாக மாறுகிறான். வாசிப்பு மனிதனின் சளசளப்பைப் போக்கி அமைதியை உண்டாக்குகிறது என்றும், […]
முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் யாராவது ஒருவரின் உதவி எப்போதும் தேவைப்டுகிறது. பிறரது உதவி இன்றியாராலும் இவ்வுலகில் வாழ முடியாது. ஏனெனில் பிறரைச் சார்ந்து வாழக் கூடியநிலையிலேயே இறைவனால் உயிர்கள் அனைத்தும் படைக்கப்பெற்றுள்ளன. எனக்குப் பிறர் உதவி தேவையில்லை என்று யாரும் கூற முடியாது. ஏதாவது ஒரு காலகட்டத்தில் பிறரது உதவியை மனிதன் நாட வேண்டி உள்ளது. இவ்வுதவியினை உபகாரம், தர்மம், என வடமொழியில் […]
சில ஆச்சரியகரமான நிகழ்வுகள் இன்றைய தமிழ்ச் சூழலில் கூட நிகழ்ந்துவிடுகின்றனதான். இவையெல்லாம் நாமறிந்த தர்க்கத்தின் வட்டத்திற்குள் அகப்பட்டு விடுவதில்லை சங்க காலத்திலிருந்து இன்றைய உமா மகேஸ்வரி வரை,, ஒரு வேளை இவர்களில் மிக இளம் வயதினராக லீனா மணிமேகலையோ அல்லது அ.வெண்ணிலாவோ இருக்கக் கூடும். ஆக கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருட நீட்சியில் தமிழ் கவிதைக்கு பெண் கவிஞர்களின் பங்களிப்பை நம் முன் வைத்துள்ளார் கே.எஸ் சுப்ரமணியன். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். […]
. கி.பி. 2000த்துக்கு முன்னால் என் இலக்கிய வாசிப்பு தினத்தந்தி, சிகப்பு நாடா, இந்துநேசன் என்கிற செய்தித் தாள்களிலும், பி.டி. சாமி, சாண்டில்யன் என்கிற நாவல் வாசிப்பிலும் தான் இருந்தது.. இவைகளை இலக்கிய வாசிப்பு என்று யாரேனும் ஒப்புக் கொண்டால்.. அடிப்படையில் நான் ஒரு வணிக இதழ் வாசகன். எனக்குத் தெரிந்ததெல்லாம் குமுதம், ஆனந்த விகடன், பின்னாளில் சாவி, குங்குமம் எனலாம். சுஜாதாவை நான் அவ்வண்ணமே அடையாளம் கண்டு கொண்டேன். ஆரம்பத்தில் அவரது எழுத்து கூட எனக்கு […]
வெகுநாட்களுக்குப் பிறகு போரூர் அரசு நூலகத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றுவது குறித்து குய்யோ முறையோ என்று கூக்குரலிடம் தமிழ் சமுதாயம் கைவிரல்களின் எண்ணிககையில் தான் நூலக பருவ ஏடுகள் அறையில் இருந்தன.. வாசிப்பும் அனுபவமும் அந்த லட்சணத்தில் இருக்கிறது. அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை.. வந்திருந்தவர்கள் ஒருவர் கையில் சிறு துண்டு காகிதம் வைத்துக் கொண்டு பேனாவை வேறொரு வாசகரிடம் கடன் வாங்கிக் கொண்டு எம்ப்ளாயிண்ட் நியூஸ் வாசித்து குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார். பிள்ளைக்கோ […]
சிறகு இரவிச்சந்திரன். மயிலாப்பூர் பாலையா அவென்யூவில் மீண்டும் மௌலி (எ) அழகியசிங்கர் நடத்திய கூட்டம். சின்ன அரங்கு குளீரூட்டப்பட்டிருந்தது. தேடி சந்தின் ஒரு கோடியில் இருந்த கட்டிடத்தின் முதல் மாடியில் இடத்தைக் கண்டுபிடித்தேன். மௌலிக்கு ஒரு திறமை உண்டு.. அவருடைய நண்பர்கள், அல்லது தெரிந்த படைப்பாளிகள் வேலை செய்யும் அலுவலகங்களில் ஒரு சனிக்கிழமை மாலை இடம் காலியானவுடன் கூட்டம் போட்டு விடுவார். எனக்குத் தெரிந்து தேவநேயப்பாவாணர் பேரரங்கையோ சிற்றரங்கையோ ( வாடகை வெறும் ஐம்பது ரூபாய்தான்) எடுத்ததாக […]
‘தலைச்சுமை’ – கொங்கு வட்டார நாவல் ———————————————————- – வே.சபாநாயகம். எந்த ஒரு நூலையும் படிக்கு முன்னர் அந்நூலின் முன்னுரை,அணிந்துரைகளைப் படித்து அது பற்றிய ஒரு அபிப்பிராயத்தை அறிந்து கொண்டுதான் நான் படிக்கத் தொடங்குவேன்.’தலைச்சுமை’ என்ற நாவலின் முன்னுரையில் இந்நூலாசிரியர் திரு.பழமன் அவர்கள் – கொங்கு வட்டார நாவல் என்றதுமே எல்லோருக்கும் நினைவுக்கு வருகிற புகழ் பெற்ற நாவலாசிரியர் திரு.ஆர்.சண்முகசுந்தரம் அவர்களின் வாரிசு என்று குறிப்பிட்டிருந்ததை நம்பி ஆர்வமுடன் படிக்கத் தொடங்கினேன்.ஏனெனில் வட்டார நாவலில் தனக்கென தனி […]
விவேகானந்தருக்கு எங்கே பார்த்தாலும் பரபரப்பான வரவேற்பு? ஏனிந்த வரவேற்பு? 1893-ம் ஆண்டு அமெரிக்க நாட்டின் சிக்காகோ நகரில் நடந்த அனைத்துலக மதப் பேரவையில் கலந்து கொண்டு இந்து மதத்தின் பெருமையை நிலைநாட்டி விட்டு அப்போதுதான் இந்தியாவிற்குத் திரும்பி இருந்தார். அப்படி அவர் அங்கே என்னதான் சாதித்தார்? ஆரம்பத்தில், பேரவையில் பேச விவேகானந்தருக்கு வாய்ப்பிருக்குமா என்ற சந்தேகம். பிறகு அவருக்கு, சில நமிடங்கள் பேசும் வாயப்புக் கிடைத்தது. “சீமான்களே! சீமாட்டிகளே! என்று எல்லோரும் பேச்சைத் தொடங்க, “;சகோதரிகளே! சகோதரர்களே!” […]