ஓவியக் கவிஞர் என அறியப்படும் அமுதோன் என்கிற அமுதபாரதியை நான் சந்தித்த நாட்கள் இன்னமும் பசுமையாக என் நெஞ்சில் குடி கொண்டிருக்கின்றன. சிறகு இதழ் ஆரம்பிக்கலாம் என்ற எண்ணம் என் நெஞ்சில் விதைக்கப்பட்ட உடன் நான் கலந்து கொண்ட முதல் இலக்கிய நிகழ்வு கவிஞர் வானவனின் “ மகரந்த தூள்கள் “ எனும் ஹைக்கூ கவிதை நூல். கலை மணிமுடி, வண்ணை சிவா, கல்வெட்டு சொர்ணபாரதி, செல்லம்மாள் கண்ணன், கவிஞர் நந்தா என இப்போது நான் சகஜமாகப் […]
காவல்துறை அதிகாரிகளில் படைப்பாளிகள் அறியப்படுவது புதிதல்லதான். ஆனால் அவர்களில் எத்தனைபேர் இலக்கியவாதிகளால், வாசகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். இயல்பிலேயே படைப்புத்திறன் அமைந்தவர்களைவிட பதவி காரணமாய் எழுத்தாளர்களாக ஆக்கப்பட்டவர்களே அதிகம். புதுமைப்பித்தனின் மேதமையை வெகு சீக்கிரமே உணர்ந்து, விவாதத்திற்குள்ளான அவரது ‘சாபவிமோசனம்’ போன்ற கதைகளை வெளியிட்டு புதுமைப்பித்தன் வரலாற்றில் இடம் பெற்ற ‘கலைமகள்’ தான், பின்னாளில் கவைக்குதவாத, சில காவல்துறை அதிகாரிகளின் பிதற்றல்களை அவர்களது பதவிகாரணமாய் வெளியிட்டு சேறு பூசிக் கொண்டது. இன்றும் புதுமைப்பித்தன் பேசப்படுவதும் பதவி காரணமாய் […]
பூமி உருண்டையைப் புரட்டிப்போடும் நெம்புகோல் கவிதையை வானம்பாடிகள் பாடிவிட்டதாக கல்லூரிவாசல்களில் கவிதைகளுடன் அலைந்துக்கொண்டிருந்தக் காலக்கட்டத்தில் மீராவுடன் சேர்ந்து அறிமுகமான கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் கவிஞர் சிற்பி. பிற்காலத்தில் தேடலை நோக்கிய பயணத்தில் வானம்பாடிக் கவிஞர்களின் அபரிதமான ஒலிச்சேர்க்கை நெருடலாகிப் போனது. அப்போது வானம்பாடிக் கவிஞர்களும் எங்கள் விமர்சனங்களுக்கு தப்பவில்லை. எனினும் சிற்பி என்ற கிராமத்து நதி விளை நிலங்களை நோக்கி தன் பயணத்தை மாற்றிக்கொண்டதும் எண்ணற்ற கிளைநதிகளை தன்னுடன் இணைத்துக்கொண்டு ஒரு பிரமாண்டமான ஜீவநதியாக வற்றாத நீருடன் இலக்கிய […]
அலுவலகத்தில் நல்ல பேர் வாங்க என்ன செய்ய வேண்டும்? இது அனைவரும் அறிய விரும்பும் விஷயம் தான். இதனை மையமாக வைத்து ஒரு புத்தகம் வெளியாகியுள்ளது. புத்தகத்தின் பெயர் : “ஆபிஸ் கைடு ” கிழக்கு பதிப்பகம் வெளியீடு. “நரகத்துக்கான எல்லா அம்சங்களும் பொருந்தி இருக்க கூடியது ஒரு நிறுவனம். ஆயினும் அதை சொர்க்கமாக மாற்றி கொள்வது கடினம் இல்லை; அதை சொல்லி குடுப்பதே புத்தகத்தின் வேலை” என்று முதல் அத்தியாயத்தில் பில்ட் அப் பயங்கரமாக தான் […]
பூமியில் உள்ள ஒவ்வொரு துண்டு நிலத்திலும் வரலாறு நிறைந்து கிடப்பது போல ஒவ்வொரு எழுத்தாளரிலும் ஒவ்வொரு வாழ்க்கைக்கான வரலாறு புதைந்து கிடக்கிறது. அதை எவ்வாறு எந்த அளவு சிறப்போடும் ஈர்ப்போடும் எளிமையோடும் பகிர்கிறாரோ அந்த அளவு அது காப்பியமாக ஆகிறது. கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட வைக்கம் முகம்மது பஷீரின் மந்திரப் பூனை நாவல் படித்தேன். தமிழில் மொழிபெயர்த்தவர் சுரா. பலமுறை படித்தும் சுவாரசியம் அடங்கவில்லை. மொழிபெயர்ப்பே இவ்வளவு சுவாரசியம் என்றால் மூலம் எப்படி இருக்கும். […]
ஷி றி ஸேதுராஜன் [ ஊமையர் கண்ட கனவுகள்] படைப்புக்கன்றி படைப்பாளருக்கே விமர்சனம் எழுதுவது மற்றெங்கேயும் எப்படியோ, நான் பார்த்த வட்டங்களில் சகஜமாகிவிட்டது. தீவிர பிரதட்சவாதத்தை (க்ஷீமீணீறீவீனீ) விட பின்நவீனத்துவமே இன்றைய சமுகத்தின் அவலங்களின் வலிவையும் அந்த அவலங்களின் எதிராக பலர் இலக்கியம் என்ற பெயரில் கொடுக்கும் குரல்களின் மலிவையும் எடுத்துரைக்கவல்லது. ஏனெனில் எல்லோரும் ஒரே மொழி பேசக்கூடிய நிலைக்கு உலகம் வளர்ந்து கொண்டிருந்தாலும், நாம் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளக்கூடிய புரிந்துணர்வோ குறைந்துகொண்டே வருகிறது. […]
அக்டோபர் 1968ல், கவிஞர் சி.மணியின் ‘நடை’ முதல் இதழில் கண்ணன் என்பவர் ‘அகவன் மகளும் அகவும் மயிலும்’ என்றொரு கட்டுரை எழுதி இருந்தார். கவிஞர் சுரதாவின் ‘தேன்மழை’ என்னும் கவிதைத் தொகுப்பில் ‘மயில்’ என்னும் கவிதையின் முதல் வரியான, ‘அகவும் மயிலே! அகவும் மயிலே!’ என்பதை குறுந்தொகையில் வரும் ஒளவையாரின் கவிதையின் முதல் வரியான’அகவன் மகளே! அகவன் மகளே!’ என்பதுடன் ஒப்பிட்டு எழுதப்பட்ட விமர்சனக் கட்டுரை அது. அதில் ஒளவையின் கவிதையால் தூண்டுதல் பெற்ற சுரதாவின் கவிதை […]
முருங்கைக்காய் வாங்கிக்கொண்டு வரும் எண்பதுகளின் வாத்தியார் பாக்யராஜ் ,தான் அப்போது சென்ற கிராமத்துக்கு தமது மகனை அனுப்புகிறார். வழக்கம் போல கிராமத்துக்கு செல்ல மாட்டேன் என்று அடம் பிடிக்கும் மகனாக விமல்.பொட்டக்காட்டில் புழுதி பறக்க வந்திறங்குகிறார் தனது அரசாங்க வேலைக்கும்,Certificate-க்குமாக. “இதுஹள்லாம் படிச்சு என்ன கலெக்டர் வேலைக்கா போஹப்போகுதுஹ.? பொழப்பப்பாருங்க வாத்யாரே” என்று டிப்பிக்கல் வில்லனாக வரும் பொன்வண்ணன். அவரும் அவரது அடியாட்களும் வரும் எல்லாக்காட்சிகளிலும் கட்டியிருக்கும் வேட்டி சட்டையில்,ஒரு துளிகூட மண்தூசு ஒட்டாமல் வந்து செல்கின்றனர்.அத்தனை […]
இந்த அப்பட்டமான Alfred Hitchcock- ன் காப்பி படத்துக்கு விமர்சனம் எதுக்கு ? அப்டீன்னு முன்முடிவோட படம் பார்க்கப்போன என்னை தனது வலுவான திரைக்கதையால விமர்சனம் எழுத வெச்ச இயக்குனர் ராஜன் மாதவ்’விற்கு வாழ்த்துக்கள். எல்லாமே சரியா திட்டமிடப்படுது , எங்க திரும்பணும், எப்ப அடிக்கணும்,எப்ப சுடணும் என எல்லாமே கரெக்ட்டா எழுதி, ப்ளான் பண்ணி ஒரு கொலையைப்பண்றத காகிதத்தில் எழுதி வைத்துக்கொண்டு , Plan B கூட வைத்துக்கொண்டு ,திரையில் காட்சிகளை நகர்த்தி , […]
வே.சபாநாயகம். அண்மையில் பவள விழாக் கண்ட கவிஞர்.சிற்பி பாலசுப்பிரமணியன் அவர்கள் என்னுடைய கல்லூரித் தோழர். அண்ணாமலைப் பல்கலையில் 1954ல் அவர் தமிழ் ஆனர்ஸ் படித்த அதே காலத்தில் நான் பி.எஸ்.சி கணிதம் பயின்றேன். ஒரே விடுதியில் வெவ்வேறு சிறகுகளில் தங்கிப் படித்தோம். அவருடைய வகுப்புத் தோழரும் எங்கள் வட்டாரத்துக்காரருமான ‘மருதூர் இளங்கண்ணன்’ (பாலகிருஷ்ணன்) என்ற நண்பர் மூலம் தான் எனக்கு சிற்பியின் அறிமுகம் கிட்டியது. அப்போது ‘சிற்பி’ என்ற பெயரில் தான் கவிதைகள் எழுதி வந்தார். ‘சிற்பி’ […]