எனது இலக்கிய அனுபவங்கள் – 7 எழுத்தாளரும் புத்தக வெளியீடும்

This entry is part 17 of 34 in the series 17 ஜூலை 2011

இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவில் இப்போது புத்தகப் பதிப்புகள் புற்றீசல் போல் புறப்பட்டு வாசகர்களைத் திணற அடிக்கின்றன. பரம்பரை வணிக வெளியீட்டாளர்களுக்குச் சவால் விடுவதைப் போன்று இன்றைய புதிய பதிப்பாளர்கள் அச்சு நேர்த்தியிலும் கட்டமைப்பிலும் ஆங்கில நூல்களுக்கு இணையாகப் பதிப்பித்து சாதனை புரிந்து வருகிறார்கள். அவர்கள் போக, கணினிப் பயன்பாடு வசப்பட்டதனால் கிராமங்களில் கூட, அரும்பு விடும் படைப்பாளிகள் தாங்கள் எழுதிப் பார்த்த கன்னிப் படைப்புகளை – அதிகமும் கவிதைகளே – 40, 50 சேர்ந்தவுடன் […]

என் கைரேகை படிந்த கல். தகிதா பதிப்பகத்தின் மிகச்சிறந்த கவிதைத் தொகுப்பு

This entry is part 12 of 34 in the series 17 ஜூலை 2011

தகிதா பதிப்பகத்தின் மிகச்சிறந்த கவிதைத் தொகுப்பு இது. யாழி என்ற கிரிதரனின் எழுத்துக்களைப் படித்து வியப்படைந்து போனேன். மிகச் சில வரிகளில் பெரும் அர்த்தங்கள் செறிந்து மிக அருமையாய் இருந்தது. நல்ல நூல்களை அடையாள படுத்திய தகிதாவுக்கும் நன்றிகள். விலை ரூபாய் 50. விகடன்., கல்கி., வாரமலர்., புதிய ழ , வடக்குவாசல் போன்றவற்றில் வெளிவந்துள்ளன இக்கவிதைகள். மிக அதிகமாக சின்னஞ்சிறு கவிதைகளில் என்னை ஈர்த்த நூல் இது எனலாம். எல்லா இடங்களிலும் குரைப்பொலிகளோடு இருப்பவற்றோடான சமரசம் […]

பிரயாண இலக்கியம் – தி ஜானகிராமனும் மற்றோரும் – இரண்டு

This entry is part 11 of 34 in the series 17 ஜூலை 2011

தம் தமிழ் நாட்டு எல்லைகளுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பவர்கள், அன்னிய சூழலில் வாழப் பிரியமில்லாதவர்கள் என்று தமிழர்களைக் குற்றம் சாட்டமுடியாது. அவர்கள் தம் உடலைத் தாங்கிக் கொண்டு எங்கும் செல்லத் தயங்க மாட்டார்கள்.. உலகத்தின் எல்லா மூலை முடுக்குகளிலும் அவர்கள் வயிறு பிழைக்க வேலைக்குச் செல்வார்கள். ஆனால் அவர்கள் மனம் அங்கு இராது. தலைமுறை தலைமுறையாக அவர்கள் ரத்தத்தில் ஊறித் தொடரும் ஒரு மன நிலை, உலகில் எங்கு சென்றாலும், அந்த அன்னிய தேசத்தின் சமூகத்தை, சூழலை, எதையுமே […]

நூல் மதிப்புரை: எங்கும் ஒலிக்கிறது காற்று! கூர் 2011 கலை இலக்கிய மலர்!

This entry is part 31 of 38 in the series 10 ஜூலை 2011

“எங்கும் ஒலிக்கிறது காற்று” என்னும் நோக்குடன் வெளிவந்திருக்கிறது கனடாவிலிருந்து எழுத்தாளர்களான தேவகாந்தனை ஆசிரியராகவும், டானியல் ஜீவாவைத் துணை ஆசிரியராகவும் கொண்டு ஆண்டுதோறும் வெளிவரும் கூர் 2011 கலை இலக்கிய மலர்.’ஒரு மக்களினத்தின் இருப்பு என்பது முதன் முதலாக அதன் பூர்வீகமான நிலம் சார்ந்தது. நிலத்தின் மீதிருந்தே  மக்களினமும் மொழியும் கூட கட்டமைவாகின்றன.  நிலத்தைத் தேடும் நெஞ்சுகளின் வலியை எப்படி விளக்கிட முடியும்? ஆனால் அத்தேடலின் மூர்த்தண்யத்தை  நாம் அடையாளப்படுத்த முடியும்.  அதன் வீச்சை கோடி காட்ட முடியும். […]

“தமிழ்ச் சிறுகதையின் தந்தை “

This entry is part 28 of 38 in the series 10 ஜூலை 2011

‘‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்“ என்ற பாரதியின் கூற்றிற்கேற்ப மேலைநாட்டு இலக்கியச் செல்வங்களைத் தமிழுக்குக் கொணர்ந்து வளம் சேர்த்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர் வ. வே. சு. ஐயர் என்று அழைக்கப்பட்ட வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் ஆவார். இவர் இந்திய விடுதலைக்காக தீவிரமாகப் போராடினார். சிறந்த தேசபக்தராகவும் திகழ்ந்தார். அதுமட்டுமல்லாது வ.வே.சு.ஐயர் சிறந்த இலக்கிய வாதிகவும், மொழி பெயர்ப்பாளராகவும் விளங்கினார். இத்தகைய சிறப்புகளை உடைய வ.வே.சு.ஐயர் திருச்சி வரகனேரியைச் சேர்ந்த வேங்கடேச ஐயருக்கும், சின்னாளப்பட்டி […]

எனது இலக்கிய அனுபவங்கள் – 6 பத்திரிகை சந்தா

This entry is part 23 of 38 in the series 10 ஜூலை 2011

கொஞ்ச நாட்களுக்கு முன்பு எனக்கு அஞ்சலில் இரண்டு பத்திரிகைகள் வந்தன. ஒன்று நான் சந்தா கட்டியது; மற்றது நான் சந்தாவைப் புதுப்பிக்காமல் விட்டது. முதலாவது இதழின் ஆசிரியர் நல்ல கவிஞர். தமிழில் புலமை மிக்கவர். தமிழ் மீது கொண்ட பற்றினால் ஒரு மரபிலக்கிய சிற்றிதழைப் பத்தாண்டுகளுக்கு மேலாக பொருள் இழப்புடன் நடத்தி வருபவர். அந்தக் காலத்து ‘செந்தமிழ்ச் செல்வி’ போல தரமான மரபுக் கவிதைளும், இலக்கியக் கட்டுரைகளும் கொண்ட பத்திரிகை அது. ஆனால் புதிய நவீனக் கூறுகள் […]

என்னைச் சுற்றிப் பெண்கள்: நூல் அறிமுகம்

This entry is part 11 of 38 in the series 10 ஜூலை 2011

ஆண்கள் சார்ந்த உலகில் ஒரு பெண் பிரதமரும்., முதல்வரும் எவ்வளவு பிரச்சனைகளை., எள்ளல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. பெண்களுக்கு சம உரிமை என்று பேசினாலும் கூட நம் இந்தியக் குடும்ப உறவு முறைகளில் வெளிப்படாத சிக்கல்கள் ஏராளம். தன் வாழ்வில் எதிர்நீச்சல்கள் போட்டு ஜெயித்த ஒருவர் மற்ற பெண்களுக்கு ஆலோசனை சொல்லி உயர்த்த எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இது. கங்கை புத்தக வெளியீடு. விலை ரூ. 60. ஆசிரியை திருமதி கிரிஜா ராகவன். துணிந்துரையாக அணிந்துரை வெற்றி விடியல் […]

“கானுறை வேங்கை” விமர்சனம்

This entry is part 6 of 38 in the series 10 ஜூலை 2011

கடமா தொலைச்சிய கானுறை வேங்கை இடம்வீழ்ந்தது உண்ணாது இறக்கும் – இடமுடைய வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர் மானம் அழுங்க வரின் என்ற நாலடியார் பாட்டில் இருந்து பெறப்பட்ட தலைப்பு “கானுறை வேங்கை”. ஆங்கிலத்தில் கே.உல்லாஸ் காரந்த் எழுதிய “The Way of the Tiger” என்ற இந்த நூலை தமிழில் திரு.தியடோர் பாஸ்கரன் அவர்கள் அற்புதமாக மொழி பெயர்த்திருக்கிறார். புலிகள் வாழ்க்கை முறை பற்றியும், அவற்றை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்காக எடுக்கப்பட்ட/எடுக்க வேண்டிய நடை முறைகள் பற்றியும் […]

எம். ரிஷான் ஷெரீபின் `வீழ்தலின் நிழல்’ பற்றிய குறிப்பு

This entry is part 44 of 51 in the series 3 ஜூலை 2011

– கவிஞர் முல்லை முஸ்ரிபா, இலங்கை கவிதை பொங்கிப் பிரவாகிக்கும் அற்புதம்; அந்த  அற்புதத்தைப் பருகத் தொடங்குகையில் மனசில்  குதூகலிப்பு மீளப் பொங்குதல் தொடங்கும். அந்தப் பொங்குதல் இன்பமாக அல்லது இன்பத்தின் வலியாக அல்லது துன்பமாகக்  கூட தொடரலாம்.   கவிதை  எனும் தொன்மையூற்று தொட்டணைத்து அகலப் பரந்தூறி விரிகையில் அதன் ஈரத்தில் ஊறாமல்  யாரிருத்தல் முடியும்.   அத்தகைய ஈரத்தில் ஊறியபடிதான் கவிதை வாசித்தல் அல்லது நேசித்தல் வரலாறு இருந்து வந்துள்ளது.  அத்தகைய வாசிப்புக்கு ஊடு […]

பல நேரங்களில் பல மனிதர்கள்

This entry is part 42 of 51 in the series 3 ஜூலை 2011

புத்தக அலமாரி ஒரு தடவை ‘ காலச்சுவடு ‘ இதழில் வெளி வந்திருந்த ” நான் பார்க்காத முதல் குடியரசு தின விழா ” என்கிற கட்டுரைத் தலைப்பே வம்புக்கு இழுத்துப் படிக்கத் தூண்டிற்று.கட்டுரை நெடுகத் தளும்பிக் குதித்த நகைச்சுவையும், இசை பற்றிக் குறிப்பிடுகையில் காணப்பட்ட உணர்ச்சி வசப்படலும் என்னைக் கவர்ந்தன. கட்டுரை எழுதியவரின் பெயர் பாரதி மணி என்று குறிப்பிடப் பட்டிருந்தது. சமீபத்தில் ஒரு புத்தகக் கண்காட்சியில் ” பல நேரங்களில் பல மனிதர்கள் ” […]