கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் ! (கவிதை – 50 பாகம் -3)

This entry is part 46 of 53 in the series 6 நவம்பர் 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “எனக்கு விரிந்த அறிவும், கூரிய நீதித் திறனும் நீடித்த அனுபமும் இல்லாமல், மனிதருக்குப் போதனையோ ஆலோசனையோ கூற அருகதை அற்றவன்.” கலில் கிப்ரான் (ஞானியின் பொன்மொழிகள்) +++++++++++ திருமணப் பாதையில் ! காதலியின் விழிகள் முதலில் வீசும் ஓரப் பார்வை வாழ்க்கைக் கீதத்தின் ஆரம்ப நோக்கு ! அதுவே முதல் நாடக அங்கம் மனித குலத்துக்கு ! கடந்த கால அதிசயத் துக்கும் […]

பெருநதிப் பயணம்

This entry is part 45 of 53 in the series 6 நவம்பர் 2011

ஓடும் தடமெங்கும் வெப்பம்தின்று பள்ளங்களில் பதுங்கி நிரம்பி பாறைகளில் தாவிப்படிந்து சரிந்து விழுந்து குதித்து வழிந்து தன்னைத் தாய்மையாக்கி தன்னையே ஈன்றெடுத்து தன்னுள்ளே தன்னைச் சலித்து தன்னைத் தூய்மையாக்கி தன்னுள் புகுமனைத்தும் தாவியணைத்து நிரம்பும் அம்மணங்களைக் கழுவி நிலைதாவும் மனங்களைக் குளிர்வித்து தன் கனத்தை தானே தாங்கி தன் குணத்தை எங்கும் விதைத்து தன் மணத்தை திசைகளில் தூவி நனைக்கும் கால்களிலும் கைகளிலும் உற்சாகத்தை ஒட்டிவிட்டு தத்தித்தாவி தாளம் போட்டு நடனமாடி நளினமாயோடுது பெருநதி ஒரு துளியும் […]

நன்றி சொல்லும் நேரம்…

This entry is part 43 of 53 in the series 6 நவம்பர் 2011

சம்பூர் சனா நான் பிறந்ததால் “நீ” இறந்தாய்.. நீ இறந்ததால் “நானும்” இறந்தேன்.. மீண்டும் ஓருயிரென ஆனாயோ..?, என்னை இன்று வாழ்த்துகிறாய்… உன் ஒரு வாழ்த்துக்காக காத்திருந்தேன் பல நாள்.., இன்று என்னை வாழ்த்துகிறாய் “நான்” உயிர் நீத்த பின்னால்… “நன்றி” சொல்ல “நான்” இல்லை.., ஆனாலும் சொல்லுகிறேன் – “கல்”லாய் உள்ளம் ஆகினாலும் இதயம் இன்றும் துடிப்பதனால்…! என் அன்பு வாழுமிடம் உன் இதயம் என்பதனால் “நான்” இறந்து போனபோதும் உனக்குள் வாழ்வேன் இதயத்துடிப்பாய்…! உன் […]

சற்றே நீடிக்கட்டும் இந்த இடைவேளை

This entry is part 41 of 53 in the series 6 நவம்பர் 2011

வையவன் எல்லாக் கைதிகளுமே சின்னஞ்சிறு சிசுக்களாகத்தான் தென்படுகிறார்கள் தூங்கும் போது கைமடித்து ஒருக்களித்து கவிழ்ந்து மல்லாந்து கருப்பைக்குள்ளும் வெளியிலும் ஒரு பாவமும் அறியாது இருந்த அதே நிலையில்.. துயிலின் தாலாட்டில் துவண்டு போன தோற்றத்தில் .. காவலர், நீதிபதி , வழக்கறிஞர் தண்டனை, பாதிக்கப்பட்டோர் மற்றும் தம் குடும்பம் என்று வளரும் சமூகத்தில் அடப் பாவிகளா என்ற சாபம் உறங்குவோருக்குக் கேட்காது விழித்தபின் தான் வெளிப்படுவான் மூத்து முற்றி முதிர்ந்த அந்த ஆதி மனிதன் சற்றே நீடிக்கட்டும் […]

சனநாயகம்:

This entry is part 39 of 53 in the series 6 நவம்பர் 2011

தாத்தா நினைவு தப்பி தன்மை பிறழ்ந்து முன்னிலை மறந்து படர்கைகளை பிழையாக அனுமானித்து முதுமையை வாழுகையில் பரிதாபமா யிருக்கும் கட்டிக் காலங்கழித்தப் பாட்டியையும் பெற்றுப் பேர் வைத்த அம்மாவையும் பேரன்பு காட்டிய எங்களையும்கூட இதுதான் இவர்தான் நான்தான் நீதான் என அடிக்கடி அடையாளம் காட்டியே பேச வேண்டியிருந்தது தேர்தல் விழா தேர்த் திருவிழாவென படு விமரிசையாக நடந்து முடிய கட்சி சார்புக்கும் ஆட்சி மாற்றத்திற்கும் அவர் சுய நினைவோடு தீர்மாணித்திருக்க முடியா தெனினும் தாத்தாவின் சுட்டு விரலிலும் […]

தோற்றுப் போனவர்களின் பாடல்

This entry is part 36 of 53 in the series 6 நவம்பர் 2011

எல்லா திசைகளில் இருந்தும் எழுந்து அறைகிறது வெற்றி பெற்றவர்களின் பாடல். பாடலின் உச்சம் எச்சிலாய் எங்கள் முகத்தில் உமிழ் படுகிறபோதும் அவர்கள் அஞ்சவே செய்வார்கள். ஏனா? அவர்களிடம் தர்மத்தின் கவசம் இல்லையே.. எரிந்த மேச்சல் நிலத்தின் சாம்பரில் துளிர்க்கும் புற்களின் பாடலைப்போல தோற்றுப் போன எங்களுக்கும் பாடல்கள் உள்ளன. உரு மறைந்த போராளிகள் போன்ற எங்கள் பாடல்களை வென்றவர்கள் ஒப்பாரி என்கிறார்களாம். காவிய பிரதிக்கிணைகள் பல புலம்பலில் இருந்தே ஆரம்பிக்கிறது. அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் செல்வத்தைத் […]

குளம்

This entry is part 35 of 53 in the series 6 நவம்பர் 2011

பற்களான படிக்கட்டுக்களோடு பாசம் புதையக் காத்திருந்தது குளம். தட்டுச் சுற்றான வேட்டியுடன் தலை குப்புறப் பார்த்தபடி இருந்தான் அவன். விரால் மீன்களாய் விழுந்து துள்ளியபடி இருந்தார்கள் சிறுவர்கள். இரவுக்குள் ஒளிய நினைத்து கருக்கத் துவங்கியது தண்ணீர். மொழியற்றவனைப் பார்த்து நாவசைத்துப் பாடத்துவங்கியது குளம். நிலவும் சேர்ந்து இசையமைக்க அவனும் இசைய விரும்பினான். தாலாட்டுப் பாடிய தாயை அணைக்க நீரை நெகிழ்ந்து இறங்கினான்.. உடல்களையும் உடைகளையும் கழுவிக் கிடந்த குளம் இவனைத் தழுவியது. ஈசானமூலைக் கிணறுப் பள்ளம் கைநீட்டி […]

மூளையும் நாவும்

This entry is part 34 of 53 in the series 6 நவம்பர் 2011

வார்த்தைகளைக் கோர்த்துச் சித்திரங்கள் வரைவது பிடித்தமானது அவளுக்கு. வரையும்போதே வண்ணங்கள் சிதறி விழுகின்றன மண்ணாய் அங்குமிங்கும். மூளை மூடாமல் திறந்து கிடக்கிறது மண்டையோட்டுக்கான வண்ணம் போதாமல். கார்டெக்ஸும் மெடுல்லாக்களும் பற்களாக மாறி துண்டாக்குகின்றன் பேசத்தெரியாத நாக்கை. வரைந்து முடித்தபின் மூளையும் நாவும் வெளியே கிடக்கின்றன வாழ்வதன் தேவையை வலியுறுத்தி.

அணையும் விளக்கு

This entry is part 33 of 53 in the series 6 நவம்பர் 2011

எண்ணெயை அவ்வப்போது ஏற்றிக் கொள்கிறது தீபம். அங்குமிங்குமாய் ஆடும் ஊசலாய் ஆடி ஆடி அலைகிறது தீபம். எண்ணெயினை ஏற்றிக் கொண்டும் அணைகிற வரை அலைந்து கொண்டும் இருக்கும் தீபம் ஆடும் குடிகாரனின் ஆக்ரோஷ உருவத்தைக் காட்டி.

உறக்கமற்ற இரவு

This entry is part 31 of 53 in the series 6 நவம்பர் 2011

நம் சந்திப்புகளின் கோர்வையை எளிதாக சொல்லிவிட முடிகிறது இந்த காலத்திருக்கு . உன் புன்னகையின் உலா வீற்றிருப்பதை இந்த மாலையும் மயங்கி கிடக்கிறது . நம் இரவினையும் விட்டு வைக்கவில்லை நினைவுகள் மவுன மன ஒலிகளை கடத்துகிறது உன்னிடமாகவும் என்னிடமாகவும் இரவு ஓய்ந்து விட்டிருக்கிறது . உன்னிடம் சொல்வதற்காக விட்டு வைத்திருக்கிறது விடியல் அவை ஒவ்வொன்றாக பட்டியலிட்டிருக்கிறது உறக்கமற்ற இரவுவின் நம் கனவின் மீதங்களை . இதற்காகவே அன்றும் பிரபஞ்சம் இருந்திருகின்றது . -வளத்தூர் தி .ராஜேஷ் […]