Articles Posted in the " கவிதைகள் " Category

 • பிஞ்சுத் தூரிகை!

  பிஞ்சுத் தூரிகை!

    அடுத்த வாரமாவது சுவருக்குச் சாயம் அடிக்கச் சொன்னாள் மனைவி.   வட்டங்களும் கோடுகளுமாய் மனிதர்கள் சதுரங்களும் செவ்வகங்களுமாய் கொடிகள் ஏனல் கோணலாய் ஊர்வலம்   இரண்டு சக்கர போலீஸ் காரும் காரைவிட பெருத்த விளக்குகளும்   விதவிதமான பந்துகளும் விரட்டும் ஜந்துக்களும் ஆங்கில எழுத்துகளும் அதன் தலைகளில் கொடிகளும்   டி ஃபார் டாக்கும் எஃப் ஃபார் ஃபிஷ்ஷும் குச்சிக் குச்சி கைகளோடு குத்தி நிற்கும் சடைகளோடு வகுப்புத் தோழிகளும்   உடலைவிடப் பெருத்த தும்பிக்கையோடு […]


 • விசையின் பரவல்

  விசையின் பரவல்

  ஊடலின் தொடக்கம் இனிதே ஆரம்பமானது உன் சொல்லாலும் என் செயலாலும் . மனதின் கனமேற்றும் நிகழ்வுகள் எல்லையற்று நீள்கிறது . என் கண்களின் சாட்சியாகி நிற்கிறது உன் சொற்கள் . நீர்மம் குமிழாக உருவெடுக்க விசையின் பரவல் முந்தி சென்று சொல்லி விடுகின்றன அதிர்வலையின் செய்திகளை . உருமாற்றங்களின் உருவகம் விலகல் தீர்மானத்தில் பழித்து கொண்டிருக்கிறது . -வளத்தூர் .தி .ராஜேஷ் .


 • அம்மாவின் நடிகைத் தோழி

  அம்மாவின் நடிகைத் தோழி

  மூலம் – இஸுரு சாமர சோமவீர (சிங்கள மொழியில்) தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை   அம்மா சொல்வாள் அந் நடிகையின் நடிப்பைப் பார்க்க நேரும் போதெல்லாம்   ‘பள்ளிக்கூடக் காலத்தில் உயிர்த் தோழிகள் நாம் அமர்ந்திருந்தோம் ஒரே வகுப்பில் ஒரே பலகை வாங்கில் அந் நாட்களிலென்றால் அவள் இந்தளவு அழகில்லை’   பிறகு அம்மா பார்ப்பது தனது கைகளை உடைந்த நகங்களை காய்கறிகள் நறுக்குகையில் வெட்டுப்பட்ட பெருவிரலை   அத்தோடு அவள் எங்களைப் பார்ப்பாள் […]


 • ஓரு பார்வையில்

  ஓரு பார்வையில்

  கிறுக்கலற்ற வெண்தாளை கண்டதும் வரைய தோணுவதை போல .. . கறைகளற்ற அடுப்பறையை கண்டதும் சமைக்க தோணுவதை போல .. . பறக்க தோன்றவில்லை, களங்கமற்ற வானத்தை கண்டதும் ! . ஏனோ தெரியவில்லை!! அக்கணத்தில் , அவ்வொரு பார்வையில் .. சிலிர்க்க வைக்கும் மத்தாப்பு பூக்கள் தெரித்தது உடலெங்கும்.. . தெரித்தது தளும்ப தொடங்க .. மொட்டை மாடியிலிருந்து தடதடவென்று கீழிறங்கி குழந்தையை கட்டி முத்தமிட்டு நிலை பற்றாமல் சுற்றினேன் அங்குமிங்கும்.. . ஏனோ தெரியவில்லை!! […]


 • குடிமகன்

  குடிமகன்

  தினம் தினம் கரைக்கப்படும் நேரங்களின் எச்சங்கள் சேமித்துவைக்கப்படுகின்றன காரணங்கள் காரியங்கள் ஏதும் இன்றியே உருவாகின்றது மீளா  நினைவுகள். யாரொருவர் சொல்லும் என்னையறியாமல் என்னிடம் சேர்வதில்லை,கடலிடம் சேரும் நதியை போலவே அது ,என்றொருநாள்  அது நிச்சயம் பழக்கப்படுத்தப்படுகின்றது யாருமற்ற இரவில் விடப்படும் ஒலிகளின் ஓசைகளும் கேட்பாரற்றே  கிடக்கின்றன ஊடுருவும் ஒலிகளுக்காக ஏங்குகின்றன செவிப்பறைகள் தினம், தினமும் . பிறப்பின் கண் பிரிக்கப்படும் சாதிகளும் கள்ளிப்பால் கொலைகளும் அணு தினமும் நிகழ்கிறது எங்கோ ஓரிடத்தில் நாமறிந்து நம்மை அறிந்து சில […]


 • சௌந்தர்யப்பகை

  சௌந்தர்யப்பகை

  குத்தீட்டி கண்களில் சுமந்தலைந்து நாகம் யார் விழியில் விஷம் பாய்ச்சலாமென. தன்னினத்தில் ஒன்றுடன் பார்க்கக்கூடப் பிடிக்காமல் முன்ஜென்மப் பகையாகிறது சம்பந்தமற்ற சச்சரவுகளில்.. லாவா உக்கிரத்துடன் வார்த்தைக் கண்ணிகளை அங்கங்கே புதைத்து மாட்டும் கால்களுக்காக காத்து பயணப்பாதைகள் பழக்கமற்று தாறுமாறாய்த் துள்ளியோடும் குறுமுயல்கள் கால் சிக்கி வெடித்து தெறித்துச் சிதற புதருக்குள் பதுங்கிக்கிடந்த அரவம் மின்னும்விழிகளோடு மெல்லெழும்பி ருசிக்கிறது எதிரியின் நிணநீர்க்குருதியை.. வாயோரம் வழியும் வெண் சிகப்பணுக்கள் வீழ்ந்ததின் வேதனையையை இரும்புச் சுவையாய்க் கிளர்த்த சரசரவென பொந்துக்குள் ஒன்றுமறியாத […]


 • மௌனம்

  மௌனம்

  மனதோடு மௌனம் பழக்கி பார்க்கிறேன் இருந்தும் முரண்டியது மரண கூச்சல் …. சொடுக்கும் விரல் இடுக்கில் தப்பி தெறிக்கும் ஓசை , ..சொல்லாமல் மௌனம் கலைக்கும் அழைப்பிதழ்… சுயம் அடிபடும் வேளைகளில் ரௌதரம் பழகவில்லை மௌனம் பழக்கி கொள்கிறேன் வெளியிட விரும்பா வார்த்தைகளை நஞ்சு தோய்த்து மௌனத்தில் சமைக்கிறேன் ஓசைகள் ஓங்கி ஒலிக்கும் போது மௌனங்கள் மெல்ல இரை கொள்ளும் ….. எக்காளமிடும் பார்வைகள் , அனல் தெறிக்கும் வார்த்தைகள், அனைத்து முயற்சிகளுக்கும் மௌனமே உரையானது … […]


 • ரகசிய சுனாமி

  ரகசிய சுனாமி

  என்னுள்ளே உறைந்து என்னுடன் இறந்துவிடும் ரகசியங்கள் பனிக்கட்டிகளாய்.. பென்குவின்கள் வழுக்கும் பாறையில் விளையாடி மீன் பிடித்துண்ணும்.. சங்குகளுக்குள்ளும் சிப்பிகளுக்குள்ளும் நுழைந்து மென்தசைகள் சுவைத்து ஆக்டோபஸ்களும் ஜெல்லி மீன்களும் இறுகப்பிடித்துறிஞ்ச கடலோடியாய் அலைகளுள் புணர்ச்சிக்குப் பின்னான தளர்ந்த அயர்ச்சியில் கரையோர நண்டுகள் மண்கிளறி அகலக்காலிட்டு பக்கம் பக்கமாய் ஓட.. கால்நனைத்துக் காத்திருக்கும் எனை விழுங்க வருகிறது ஆழிப் பேரலை அரவத்துடன்.. ஆலிலையில் நீ பிழைக்க சுருட்டிச் செல்கிறது நீர்ப்பாய் என்னை..


 • தவிர்ப்புகள்

  தவிர்ப்புகள்

  வருபவர் தூரத்துச் சொந்தம் என அறிந்தும் தடம் மாறிப்போன நண்பன் எனத் தெரிந்தும் முகம் தெரிந்தும் பெயர் தெரியாதவன் என புரிந்தும் பேசச் செய்திகளின்றி விருப்பமுமற்று தவிர்த்தோ அல்லது வெற்றுப் புன்னகையுடனோ முடிகின்றன நிறைய சந்திப்புகள் பொன்.குமார்


 • உலரும் பருக்கைகள்…

  உலரும் பருக்கைகள்…

  கத்திரிவெயிலிலும் சிரிக்க மறப்பதில்லை பொய்க்காத பூக்கள் மாறாத வண்ணங்களோடு.  ஒற்றை விடயம் மாறுபட்ட பதில்கள் ஒருவருக்கொருவராய் மாறித்தெறிக்கும் அடர் வார்த்தை.  பிதிர்க்கடனெனத் தெளிக்கும் எள்ளும் தண்ணீரும் சிதறும் வட்ட வட்ட திரவத்துளிகக்குள் சிரார்த்த ஆன்மாக்கள். சம்பிரதாயங்களுக்குள்ளும் சமூகச் சடங்குகளுக்குள்ளும் குறுக்கு மரச் சட்டங்களுக்குள்ளும் முங்கி அமிழ்ந்து திணறுகின்றன சங்கடங்களும் சந்தோஷங்களும் இறந்த பின்னும்கூட!!! ஹேமா(சுவிஸ்)