எங்கிருக்கிறேன் நான்?

This entry is part 35 of 54 in the series 4 செப்டம்பர் 2011

மேகங்கள் இருண்டும், மகிழ்ச்சியில்லை மனதில்! மழை கொட்டியும், ஈரமில்லை நினைவில்! இடி உறுமியும், கேட்கவில்லை காதில்! மின்னல் மின்னியும், வெளிச்சமில்லை கண்ணில்! கான்கிரீட் காட்டில் நான்! psatishkumar1970@gmail.com

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (கருங்கல்லும், மதுக் கிண்ணமும்) (கவிதை -46)

This entry is part 34 of 54 in the series 4 செப்டம்பர் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா கருங்கல் நீ ! காலியாகப் போன மதுக் கிண்ணம் நான் ! நிகழ்வ தென்ன வென்று நீ அறிவாய் நாம் நெருங்கித் தொடும் போது ! சிரிக்கிறாய் நீ உதிக்கும் பரிதி யானது எரிந்து மங்கி மரிக்கும் விண்மீனை நோக்கிச் சிரிப்பது போல் ! +++++++++ காதல் எனது நெஞ்சின் கதவைத் திறக்கிறது ! சிந்தனை சிறைக்கு மீள்கிறது ! பொறுமையும் பகுத்தறிவும் […]

அவன் …அவள் ..அது ..

This entry is part 33 of 54 in the series 4 செப்டம்பர் 2011

அவன் ஏதோ ஓர் அடர்வண்ணம் நிரப்பியே அவன் எழுதுகிறான் பலசமயம் அவை புரிவதாயில்லை .. எழுத்துக்கள் ஒன்றோடு ஒன்று முரண்பட்டும் , ஒட்டிக்கொண்டும் கையெழுத்து வேண்டாம் என மசிநிறைத்த தட்டச்சு இயந்தரத்தில் பிரதி எடுக்கிறான் அப்போதும் அவன் வார்த்தைகள் ஒன்றோடு ஒன்றாய் அப்பிக்கொள்கின்றன அவள் .. எழுதிய வார்த்தைகளினூடே கூறா மொழிகளையும் சேர்த்தே படிக்கிறாள் .. விழிகளின் மொழிகளை இளவர்ணங்களில் தோய்த்தெடுத்து அறைகளின் சுவர்களில் பூசி வைக்கிறாள் ஒட்டிக்கொண்ட வார்த்தைகள் அழகாய் தனித்து தெரிந்தன அடர் நிறமாய் […]

காணாமல் போனவர்கள்

This entry is part 32 of 54 in the series 4 செப்டம்பர் 2011

மரத்தில் தன்னந்தனியாய் அழகான ஒரு பறவையைப் பார்த்தேன். முகமலர அதோடு ரகசியமாய் பேசிக் கொண்டிருந்த நிலவையும் பார்த்தேன். எதிர்பாராமல் ஒரு மின்னல் கிழித்த துணியாய் மேகத்தை கிழிக்க… பேரிடி முழங்கியது. பெருமழை பெய்தது. பேசிக் கொண்டிருந்த பறவையையும் காணவில்லை. நிலவையும் காணவில்லை. எங்கே போனதோ அவைகள்.

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -3)

This entry is part 28 of 54 in the series 4 செப்டம்பர் 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “நினைவில் வைத்துக் கொள் இதை : ஆன்மீகச் சிந்தனை மனிதனின் இயல்பான சுய நினைப்பு ! தங்கக் கட்டிக்கு அதை விற்று விட முடியாது. இன்றைய உலகத்தின் மற்ற செல்வத்தைப் போல் அதைச் சேர்த்துக் குவிக்க இயலாது. செல்வந்தர் தமது ஆன்மீக உணர்வை உதறித் தள்ளி விட்டுத் தமது தங்கக் கட்டிகளை அணைத்துக் கொள்கிறார். அதே சமயத்தில் இளைஞரோ தமது ஆன்மீகச் சிந்தனையைப் […]

பீமாதாயி

This entry is part 26 of 54 in the series 4 செப்டம்பர் 2011

என்னிடம் தொலைவிலிருந்து பேசிய குரல் ஆணா பெண்ணாவென தெரியவில்லை. என் கைவசமுள்ள ஓலைச்சுவடி ஒன்றை முன்னூறு வருடங்களாக தேடித் திரிந்ததாகவும் தற்போது அதன்விவரம் தெரியவந்ததாகவும் மிகவும் தணிந்தகுரலில் சொல்லி அதை கொடுத்துதவ வேண்டியது. அந்த ஓலைச் சுவடியில் வாழ்ந்து கொண்டிருந்த பீமாதாயிடமிருந்து தெரியவேண்டிய கதைகள் மிச்சமிருப்பதாகவும் என்னிடமிருந்து பீமாதாயை மீட்க உத்தேசித்தே இதை கேட்பதாகவும் சற்று சூடேறிய குரலில் திரும்பவும் சொன்னது அந்தகுரல். எனது பரண்களில் கேட்பாரற்று போட்டிருந்த அந்த ஓலைச் சுவடி கட்டுகளிலிருந்து அர்த்த ஜாமங்களில் […]

அடுத்த பாடல்

This entry is part 23 of 54 in the series 4 செப்டம்பர் 2011

அடுத்து என்ன பாடல் ஒலிக்கும் என்ற மன நிலையுடன் உள்ள வானொலி ரசிகனைப்போல உனது அடுத்த வார்த்தைகளுக்கென ஆவலுடன் காத்திருக்கிறேன். அவர் எழுதிய கவிதைப்புத்தகம் எங்கே கிடைக்கும் என்று எழுத்தாளனிடமே கேட்பது போல உன்னைப்பற்றிய கவிதை எங்கே கிடைக்கும் என உன்னிடமே கேட்கிறேன் பத்திரிக்கைகள் ஏதுவாயிருப்பினும் அவற்றின் தலையங்கங்கள் தனித்தமிழில் மட்டுமே வருவது போல கடிதங்கள் ஏதுவாயிருப்பினும் உனக்கென எழுதும்போது நானதில் காதல் மட்டுமே எழுதுகிறேன். என்னைச்சுற்றி பல மொழிகள் பேசப்படினும் என் எண்ணங்கள் தமிழில் மட்டுமே […]

வலியது

This entry is part 20 of 54 in the series 4 செப்டம்பர் 2011

காற்றில் படபடக்கிறது காலண்டர் தாள்.. கை நடுங்குகிறதா, கிழித்தெடுக்கத் தயக்கமா- கடந்துவிட்ட நேற்றை எண்ணி நடுக்கமா !   கிழித்தெறி நேற்றை.. அழித்திடு நினைவில், அன்று பெற்ற அல்லலை.. நினைத்திடு நல்லதை.. நன்றாகிவிடும் இன்று !   நம்பிக்கை- தும்பிக்கையை விட வலியதல்லவா !   -செண்பக ஜெகதீசன்..

முகம்

This entry is part 19 of 54 in the series 4 செப்டம்பர் 2011

  உயரத்தில் பருந்து கண்கள் இரை மீது புத்தகத்தில் கிழிக்கப்பட்ட பக்கங்களில் என்ன ஒளிந்திருக்கும் நாட்கள் தான் வேறு வேறு மாற்றங்கள் எதுவுமில்லை நீர்க்குமிழி வாழ்க்கை இறைவன் வகுத்த நியதிப்படி விசேஷமான நாள் பரிசாக ஒரு பனித்துளி கோர முகம் ஒற்றைக் கண் பீதியூட்டுகிறது நிலவு காய்கிறது ஒரு குழந்தை இரவை அள்ளிப் பருகுகிறது பழைய புத்தகம் நடுவே மயிலிறகு விலைமதிப்பற்றதாய்.    

எது சிரிப்பு? என் சிரிப்பா ?

This entry is part 11 of 54 in the series 4 செப்டம்பர் 2011

என்னோடு சிரிக்க வருகிறாயா ஏ மலையே ………. கல்குவாரியாக சிதறிவிடாமல் என்னோடு சிரிக்க வருகிறாயா ஏ நதியே ……….. அணைபோட்ட நாணத்தை உடைத்து என்னோடு சிரிக்க வருகிறாயா ஏ காற்றே ………. மூச்சிலிருந்து பிரிந்து விடாமல் என்னோடு சிரிக்க வருகிறாயா ஏ ஆகயாமே …………… எப்போது கரும்புகை கலைத்து என்னோடு சிரிக்க வருகின்றீர்களா ஏ பறவைகளே ………… இரைகள் தொலைந்ததை மறந்து என்னோடு சிரிக்க வருகின்றீர்களா ஏ மலர்களே ……… ஓ எப்போது சிரித்து கொண்டுதான் இருக்கின்றீர்களோ […]