பெருமை

This entry is part 3 of 6 in the series 2 ஜூன் 2024

வாழப்போகும் பெருமையை விதை சொன்னது வாழும் பெருமையை மரம் சொன்னது வாழ்ந்த பெருமையை விறகு சொன்னது மூன்று பேரும் இறைவனைக் கேட்டனர் ‘எங்களில் யார் பெரியவன்’ இறைவன் சொன்னான் ‘உங்கள்முன் நான் சிறியவன்’ அமீதாம்மாள்

வீடு விடல்

This entry is part 2 of 6 in the series 2 ஜூன் 2024

                                ஜெயானந்தன். முப்பாட்டன் வீடு பாட்டனிடம் இல்லை. பாட்டன் வீடு தாத்தனிடம் இல்லை. தாத்தன் வீடு தந்தையிடம் இல்லை. தந்தை வீடு என்னிடம் இல்லை. என் வீடு உன்னிடம் இல்லை. உன் வீடு என்னிடம் இல்லை. உன் வீடு என் வீடு எவன் வீடு ! மலையெல்லாம் அவன் வீடு மனமெங்கும்  அருள்வீடு. பிறவிதொறும் வீடுவீடாய்………, பிறவா வீடு வேண்டும். பிறப்பை அறுக்கும் பேரின்பேச் சுடரே ! பேரோளியே!!!                                ஜெயானந்தன்.

துருவன் ஸ்துதி

This entry is part 1 of 6 in the series 2 ஜூன் 2024

வெங்கடேசன் நாராயணசாமி   ( சமஸ்கிருதத்திலிருந்து ஸ்ரீமத் பாகவதம் செய்யுளின் மொழிபெயர்ப்புகள் சில  ) துருவன் பகவானைப் போற்றுதல்: ௐ [ஶ்ரீம.பா-4.9.6] எனாவி உடல் உட்புகுந்து ஆட்கொண்டாய்! ஜடமாய் உறங்கும் பொறி புலன்கள் உயிர்ப்பித்து இயக்கினாய்! மூச்சானாய்! பேச்சானாய்! அறிவாற்றல் ஆன்மாவானாய்!  உயிருக்குயிரான பகவானே! உணர்வெனும் பெரும்பதப் புருடனே! போற்றி! போற்றி! ந [ஶ்ரீம.பா-4.9.7] ஒன்றேயான உறுபொருள் பகவன் நும் ஆத்மசக்தியால் அனாதி மாயா ஆற்றல்மிகு குணத்திரிபால் அகண்ட பேருணர்வால் அண்டங்கள் படைத்தும் அந்தர்யாமியாய் அவற்றுள் நுழைந்தும் வெவ்வேறு விறகு […]

யார்?

This entry is part 7 of 7 in the series 9 ஜூன் 2024

வெங்கடேசன் நாராயணசாமி தபாலில் அனுப்பியுள்ளது விசித்திர விதைகளை சீனா அமெரிக்காவிற்கு. கண்டித்துள்ளார் அமெரிக்க உளவுத்துறையை கவனக்குறைவிற்காக அமெரிக்க ஜனாதிபதி. சுமந்து வந்தோமிங்கு விசித்திர வாதனா விதைகளை கவனக் குறைவினால். இங்கிருந்து மீண்டும் சுமந்து செல்வோம் இவ்விசித்திர வாதனா விதைகளை இதே கவனக் குறைவினால். உள்ளிருக்கும் உள்ளானை ஓயாது உள்கிறோமா, இல்லையா, என்று உளவு சொல்பவரும் உறங்குகிறார் இவ்வும்பரரங்கில். முரசுக் கட்டிலிலுறங்கும் இம்மோசிகீரனாரைக் கண்டிக்காமல் கவனமாகக் கவரி வீசும் தகடூர் எறிந்த இச்சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை யார்?

பேருந்து நிறுத்தம்

This entry is part 4 of 6 in the series 2 ஜூன் 2024

பள்ளிப் பருவமாய் இனிக்கும் அந்தப் பேருந்து நிறுத்தம் அருகில்தான் மகள் வீடு மகளைப் பார்த்தபின் என் மனை செல்லும் பேருந்து அங்குதான் நிற்கும் அங்கு…. ஒற்றுத்தாள் விற்கும் பாட்டி சிநேகமாய்ச் சிரிப்பார் இரண்டுவெள்ளி தருவேன் செவன்லெவன் கடையின் சிப்பந்திப்பெண் என் ஊர் ஊரின் மழைவெயில் விசாரிப்பேன் உணவுக்கடையில்  நம் பையன் பரோட்டாசுழற்றுவதில் பேருந்தை மறப்பேன் சிவப்பு மனிதன் முன் பெருஞ்சாலை கடக்கும் பெரிசுகள் பார்த்துத் திகைப்பேன் என் நேரம் அங்கு இரவு 8 மணி ‘நல்லா யிருக்கீங்களாண்ணே’ […]

 முற்றத்தில் நிஜம்

This entry is part 1 of 2 in the series 26 மே 2024

அந்த குழந்தை கையில் பையுடன்  ஓடியாடி விளையாடியது. முற்றத்து தண்ணீரில்  நிலவை பிடித்தது வானத்து நட்சத்திரங்களையும்தான் ! மேகத்தில் வெள்ளிமலையோ, பீமரதமோ  எல்லாம் அந்த பைக்குகள் போட்டது. மீண்டும் சிரித்துக்கொண்டே முற்றத்தில் ஓடியது. அப்பா வாடிய முகத்துடன்  திண்ணையில கொட்டாவிவிட்டார்.  நாளை விடியலுக்கு  சட்டைப்பையில்,  பீடியுடன் சில்லறையை தேடினார்!.                ஜெயானந்தன். 

மௌனம்

This entry is part 2 of 2 in the series 19 மே 2024

ஆர் வத்ஸலா முன்பும் இருந்துள்ளன திட்டமிடப்படா மௌனங்கள் நம்மிடையே – எவ்வளவோ‌ முறை‌ – நமது நெஞ்சங்களை அண்டாமல் நீ கேட்காத ஒரு கேள்வியும் நான் கூறாத ஒரு பதிலும் இப்போதைய மௌனங்களை விஷமாக்கி நிற்கின்றன நமது நெஞ்சங்களின் மேலேறி மிதித்துக் கொண்டு

முன்னொரு காலத்துல…

This entry is part 2 of 3 in the series 12 மே 2024

ஜெயானந்தன் முன்பெல்லாம் சாப்பாட்டு நேரம் ஆனந்தமாய் இருந்தது. அம்மா ,அவித்தசோறு சட்டியை ஆவிபறக்க, பெரிய கூடத்தில்  வாழைத்தண்டு சாம்பாரும், கத்திரிக்காய் கூட்டோடு  கூப்பாடு போடுவாள்.  காக்கை கூட்டம்போல்,  நானும்,அண்ணாவும், அக்காவும் தம்பியுமாய்,  அத்தை பிள்ளைகளோடு,  பதினான்கு உருப்படிகள், தட்டில்தாளமிட,  பாட்டி அன்போடு பரிமாறுவாள்.  கடைக்குட்டி தம்பிக்கு, கதைசொல்லி, அன்பையும் பால்சோறு அன்னத்தை, ஆடிப்பாடி ஊட்டிடுவாள்.  இன்று, வயதான பருவத்தில், புதுமைப்பித்தன் துணையாக  காலம் என்னை நகர்த்த, ஆர்டர் கொடுத்த,  ஐந்து நிமிடத்தில்,  ஸ்வக்கி சோமட்டோ, டப்பாவில் பீட்சா […]

கரையேறும் காதலாய்……

This entry is part 3 of 3 in the series 5 மே 2024

                                                       ஜெயானந்தன். நீயும் நானுமாய் கைகோர்த்து, வாழ்வின் கடல் நீந்தி வெகுதூரம் வந்துவிட்டோம்! நாற்பதாண்டில், “நீ” நானுமாய், “நான்” நீயுமாய் மாறிமாறி உருமாறி அர்த்தநாரியாய்   உலாவந்தோம். காமம் உடல்வரை காதல் உள்ளம்வரை கரைபுரண்டு ஓடி, கால்கடுத்து, வாழ்வை தவமாய் மாற்றினாய். இன்று, முதுமையில் நீயும் நானுமாய் கோணல் பாதங்களுடன் நுரைத்தள்ளும் கடல்புரத்தில் கானும் தொடுவானம் , தொலைதூரம்! என் அன்பே என் சுயம் அழிக்க உன் முத்தம் ஒன்றே போதும்…., நம் இளமை முக்தி பெற்று முதுமையில் […]

உறுதி மொழி

This entry is part 4 of 4 in the series 28 ஏப்ரல் 2024

சசிகலா விஸ்வநாதன் பூத்துச் சொரியும் பவளமல்லி; மெல்லனே, மெல்லனே, முயங்கி மாரி பொழி கார் மேகம்; தடதடக்கும் இடியும்,மின் மினுக்கும் மின்னலும், நிகர்த்ததே மணவாழ்வு… மலர் படுக்கையல்ல… தெரிந்தோ,தெரியாமலோ; அறிந்தோ, அறியாமலோ; உன் வாழ்க்கை நான் புகுந்தேன். உன்னை வேண்டுவது ஒன்றே; என்னில் புகு; என் குறை களைய. என் தலை பாரம் சுமக்கும், சும்மாடாகி; நெடு வாழ்வின் நுகத்தடி சோடியாய்; நீ இரு! ஒரு கோடி வரப்போக இருப்பினும்; கண்ணன் கோயில் துலாமுள்ளாய்; ஏதும் எதிர்பாராகோபிகையாய் […]