காலம் கடந்தவை

பின்பு ஒரு நாளில் உன்னிடம் கூடுத்து விடலாம் என்று முன்பு ஒரு நாளில் உன்னக்காக வாங்கப்பட்ட பரிசு ஒன்றை காலம் கடந்து காத்து வருகிறது என் பெட்டகத்தின் உள் அறை.... பின்பு ஒரு நாளில் சொல்லி விடலாம் என்று முன்பு ஒரு…

ஒரு கடலோடியின் வாழ்வு

திரண்டத் திட்டாய் கரு நீல மேகங்கள்  உதிப்பின் ஒளியில் மேல் வானச்  சிவப்பு  வெண் கை நீட்டி மற்றொரு  மேகம்...  கடல்விட்டெம்பும் சீகல் பறவைகள் ... அடர் நீல அசையும் பெரும் பட்டாய்க் கடல் ... எத்தனை பேருக்குக் கிடைக்கும் இவ் வாய்ப்பு?  கர்விக்கும் மனம்...  மறுநொடி சென்றமரும்  மனைவி, குழந்தைகள் பக்கத்தில் .... கண்கள் இங்கும் மனமங்குமாய்   விடுமுறை தினத்தை கணக்கெடுக்கும் நாளை மீண்டுமோர் விடியல்..  

தேடல்

             -  பத்மநாபபுரம் அரவிந்தன் - பிஞ்சு மழலையைக்  கொஞ்ச எடுக்கையில்  தானாய் வழிகிறது கனிவு, மனம் வழி ஊறி தூக்கும் கை வழி பரவி வியாபிக்கும் அன்பு கண்கள் பார்க்கையில் நெஞ்சம் நிறைந்து கசிந்துருகும் காதல் ...   என்  காய்த்த கைதனில் பூத்த மலரென படுத்திருக்கும் குழந்தை... சின்னச் சிணுங்கலில் என் மனச் சிறகுகள் வானோக்கி எம்ப எத்தனிக்கும் ... விட்டுப் பிரிந்திருந்தும் மனதுள்  அவள் மேல் வீசும் சோழ தேசத்து பால் நிறை நெற்பயிர் வயல்வெளி  மணம்.... மழை  பெய்து பிற்பாடு ஒளி பட்ட மலை போல மின்னும் அப்பிஞ்சு முகத்தின் கன்னக் கதப்பு மனக் கண்ணில் மறையாது எண்ண எண்ண சலிக்காது ..வந்து நின்று போகாது மனைவி, மகன் மேலிருந்த தேடல் மெல்ல மகளின் மேல் நகரும் காலம் தொலைதூரம்   இருந்தாலும்  தொடர்ந்தேதான்  ஆகும் ... கொடுத்து வந்த முத்தத்தின் மணம் இன்னும் மாறவில்லை கையசைத்து ,காலசைத்து மெல்லியப் புன்னகையை எனை நோக்கி வீசியதை மனமுழுக்க சேமித்து யோசித்து செலவிட்டு கழிக்க வேண்டும் சில நாட்கள் சேமிப்பு தீருமுன்பு மீண்டுமங்கு போகவேண்டும் பல…

அடைமழை!

அடைமழை பெய்து அப்போதுதான் ஓய்ந்திருந்தது!   அலுவலகம் முடிந்து வீடு திரும்புவதற்காய் சாலையோரமாய் நடந்தேன்!   என் கைகுலுக்கிவிட்டு தேநீர் அருந்தச் சொன்னது தென்றல்!   ஸ்ட்ராங்காய் ஒரு டீ குடித்தவுடனே மீண்டும் கிளம்பினேன் சாலையோரமாய் நிறுத்திவைத்திருந்த நடராஜா சர்வீசில்...!   பூக்கடைப்…

சமனில்லாத வாழ்க்கை

நான் நெருங்கிப்போகிறேன் அவர்கள் என்னை மதிப்பதில்லை   என்னை நெருங்கியவர்களை நான் நினைப்பதேயில்லை   .....   வலியின் அலைகற்றை சுமந்து வந்த  என் குரலை சலனமில்லாமல் வீசி எறிகிறார்கள் அவர்கள் . அவர்களை பின்தொடர்கிறேன் .. காயங்களை விசிறிவிட என்னை…

இரண்டு கூட்டங்கள்

  வாழ்த்த ஒரு கூட்டம் தூற்ற ஒரு கூட்டமின்றி வாழ்க்கையே இல்லை   அவன் நெருப்பில் எழுதி நீரில் பொட்டு வைப்பான் நுனி நாக்கசைவில் நோபல் வெல்வான் அவனுக்கு முண்டு இரண்டு கூட்டங்கள்   அவன் புன்னகை வீச்சில் வெளிச்சமாகும் இரவு…

இதற்கும் அப்பால்

  கதவில் பூட்டு தொங்கியது யார் பூட்டியிருப்பார்கள் காலையில் நான் தான் பூட்டினேன் இந்த நாய் நகர்ந்து தொலைக்க கூடாது வாலை மிதித்துவிட்டேன் நல்ல வேளை கடித்து தொலைக்கவில்லை வீட்டில் வைத்தது வைத்தபடி அப்படி அப்படியே இருந்தது கலைத்துப் போட குழந்தையுமில்லை…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (கனவில் மிதப்பது) (கவிதை -47)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா காதல் பறித்துச் சென்றது என் கல்விப் பயிற்சிகளை கவிதைகளை நிரப்பிக் கொண்டு ! மௌனி ஆனேன் திருப்பி முணுமுணுத்து "உன் பலத்தைத் தவிர வேறில்லை" என விளம்பி…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -4)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "ஏழ்மைத் தோழனே ! நீ வேலையிலிருந்து வீட்டுக்குத் திரும்பி உன் மனைவி, மக்களுடன் சேர்ந்திருக்கும் நேரம்தான் மானிட இனத்துக்கு இனிதானது. அதே சமயத்தில் செல்வந்தர் பணத்தைக் குவிப்பதில்…

இலைகள் இல்லா தரை

உதிர்ந்த இலைகள் ஓர் நவீன ஓவியம் .... ‘உயிரின் உறக்கம்’ - என்ற தலைப்பில் இலைகள் அள்ளபட்ட தரை - சுவற்றில் ஓரம் சாய்க்க பட்ட வெற்று ஓவிய பலகை மற்றொமொரு நவீன ஓவியம் உதிரும் வரை - சித்ரா (k_chithra@yahoo.com)