அவனேதான்

This entry is part 7 of 34 in the series 17 ஜூலை 2011

ஆட்டுக்கு புல்லைக்காட்டி அழைத்துச் செல்கிறான் கழுத்தை வெட்ட.. மீனுக்கு புழுவைக்காட்டி தூண்டிலில் பிடித்து துடிக்க வைக்கிறான்.. பசுவிடம் பால்கறக்க போலியாய்க் கன்றைக் காட்டி காரியம் சாதிக்கிறான்.. இத்தனையும் தானாகி இலவசத்தால் ஏமாந்து ஜனநாயகம் என்ற பேரில் சந்தியில் நிற்கிறான் ! -செண்பக ஜெகதீசன்..

விட்டு விடுதலை

This entry is part 5 of 34 in the series 17 ஜூலை 2011

சுமக்கிற பிரியங்களை இறக்கி வைப்பது இறுதி நொடியில் கூட இயலுமா தெரியவில்லை. பிரிகிற ஆன்மா பேரொளியில் சேரத் தடையாகுமதுவே புரியாமலுமில்லை. காலத்திற்கேற்ப ஆசைகள் மாறுவதும் தலைமுறைகள் தாண்டிப் பாசங்கள் தொடர்வதும் புகழ்பொருள் மீதான நாட்டங்கள் போதையாகுவதுமே சாஸ்வதமாக மீளும் விருப்பற்று இறுக்கும் சங்கிலிகளுக்குள் இருப்பினைப் பத்திரமாக்கி விட்டு விடுதலை ஆகாமலே விடுதலை ஆகிறோம் ஓர் நாள். -ராமலக்ஷ்மி

கரியமிலப்பூக்கள்

This entry is part 1 of 34 in the series 17 ஜூலை 2011

அமிலம் மற்றும் கரிப்புத் தன்மை கொண்டவையாகவே இருந்து விடுகின்றன சில நிஜங்கள் மறுக்கப்படுகிறது இனிப்பின் இயல்பு மறந்தும் கூட இறுக்கப்பட்ட மன இயந்திரத்தின் அழுத்தக் கோட்பாடுகள் வேகமேற்று .. அனல்வாயின் கொதிக்கும் தங்கக் குழம்பின் சிதறிய பிரள்கள் மலர்ந்து விடுகின்றன நட்சதிரப்பூக்களாய் … சூடு தணிக்கும் பணியென தண்ணீர் ஊற்றப்படுகையில் குளிர்ந்தும் இறுகியும் கிடந்தன கரியமிலப்பூக்கள் ஷம்மி முத்துவேல் …

விழிப்பு

This entry is part 36 of 38 in the series 10 ஜூலை 2011

சந்தங்கள் மாறித் துடிக்கும் இருதயம் தினமும் புதிதாய் இங்கே – ஆயிரம் காதை சொல்கிறது பௌதிகம் தாண்டிய திசைகளில்… வெயிலோ பட்டெரிக்கும் வெந்தீ சுட்டு எரிக்கும் வார்த்தை பட்டு உடையும் இதயம் படாத பாடு படும்… யாதும் தொடாமலே எண்ணங்கள் இடமாறலாமா…? நிலவு கந்தளானால் அது உன் பிறை நுதல் என்பேன்., இருள் கந்தளானால் அது உன் விழி வீசும் சுடர் என்பேன்., கனவே கந்தளானால் அதைத் தான் யாது என்க..?, பூவுலகில் துயில் கலைந்தது என்கவா..??! […]

தூரிகையின் முத்தம்.

This entry is part 35 of 38 in the series 10 ஜூலை 2011

எல்லா ஓவியங்களும் அழகாகவே இருக்கின்றன. வரைந்த தூரிகையின் வலிமையும் பலஹீனமும் நகைப்பும் திகைப்பும் ஓவியமெங்கும் பரவிக் கிடக்கின்றன.   பல இடங்களில் தூரிகை தொட்டுச் சென்றிருக்கிறது. சில இடங்களில் தூரிகை துள்ளிக் குதித்திருக்கிறது.   சில இடங்களில் தூரிகை எல்லை தாண்டி நடந்திருக்கிறது.   இன்னும் சில இடங்களில் தூரிகையின் கண்ணீர் அது விழுந்த இடத்தைச் சுற்றிலும் கரைந்த மேகமாய் மிதந்து நிற்கிறது.   தூரிகையின் ஆயிரம் விரல்களின் பேரிசை முழக்கம் விழுந்த ஓவியத்தில் எழுந்து கேட்கிறது. […]

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -4)

This entry is part 34 of 38 in the series 10 ஜூலை 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “நானோர் உண்மை உரைப்பேன் :  மனித சிந்தனைகள் கண்ணுக்குத் தெரியும் உலகுக்கு மேலே உயரத்தில் உள்ள ஓர் வாழ்தளத்தில் வீற்றிருப்பவை.  அதன் வான மண்டலத்தில் புலன் உணர்ச்சி முகில் எதுவும் தோன்றி மறைப்ப தில்லை.  கற்பனை யானது கடவுளின் அரங்கத்துக்குப் பாதை காட்டுவது.  ஆங்கே உலோகவியல் உலகிலிருந்து மனித ஆத்மா விடுதலை அடைந்த பிறகு தோன்றும் ஓர் மின்னல் காட்சியைக் காண முடியும். […]

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரு கதைகளுக்கு இடையே (கவிதை -40 பாகம் -2)

This entry is part 33 of 38 in the series 10 ஜூலை 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா   ஒவ்வொரு வினாடியும் கண்ணாடி முன் நின்று தன்னை வணங்கும் மனிதன் ஆடியின் ஒரு மூலக்கூறைக் கண நேர மாவது கனவு மயக்கத்தில் காண முடிந்தால் அவனது ஊன உடல் வெடிக்கும் ! கற்பனையும் ‘நான்’ எண்ணும் சுய உணர்வும் மாயமாய் மறையும் ! பயின்ற கல்வி அறிவெல்லாம் போயவன் புதுப் பிறவி ஆவான் ! பூரணத் தெளிவுத் தோற்றம் கூறும் அசரீரி: […]

அழையா விருந்தாளிகள்

This entry is part 32 of 38 in the series 10 ஜூலை 2011

எனது தனிமையின் மௌனம் தற்போது வருகை பு¡¢ந்த உங்களை வெறுப்புக்குள்ளாக்கியிருக்கலாம் வயிற்கதவை தட்டிக்கொண்டிருக்கும் உங்களின் கோபத்தையும் பொருட்படுத்த முடியாமலிருக்கிறேன் வீடு தேடி வந்தும் என் பாராமுகத்தால் அவமானப்படுத்தப்படுகிறீர்கள் என்பதையும் நான் கவனிக்காமல் இல்லை அசைவற்றிருக்கும் நான் பார்வையைக்கூட உங்கள் பக்கம் சுழலவிடாமல் சிலாகித்துக் கொண்டிருக்கிறேன் நீர் கசியும் சவர் குழாயில் நனைந்தும் கண்ணாடியில் முகம் பார்த்தும் தனது பிம்பத்தை கொத்தியபடி என்னையும் சேர்த்து வீட்டில் யாரும் இல்லையென நினத்து விளையாடுகின்றன சிட்டுக்குருவிகள் rathinamurthy

சோ.சுப்புராஜ் கவிதைகள்

This entry is part 30 of 38 in the series 10 ஜூலை 2011

காத்திருப்பு வெகு நேரமாயிற்று விமானம் தரை இறங்கி…… விடைபெற்றுப் போயினர் உடன் பயணித்தவர்கள் யாவரும்; வெறிச்சோடிக் கிடக்கிறது விமான நிலையம்; அடுத்த விமானத்திற்கு இன்னும் அவகாசமிருப்பதால்…… அலைபாயும் கண்களுடன் காத்திருக்கிறார் அழைத்துப் போக யாரும் வராத அவஸ்தைகளை விழிகளில் தேக்கி   ஒரு நிகழ்ச்சியும்  நெகிழ்ச்சியும்   மெட்ரிக்குலேசன் பள்ளி மேடையில் ஆண்டுவிழா நிகழ்ச்சிகள்! ஆங்கிலத்தில் நாடகங்கள் போட்டார்கள்; ஹிந்தி கிளாசிக்குகளைப் பாடினார்கள்; தமிழில் மட்டும் குத்துப் பாட்டுக்கு ஆடினார்கள் எதுவுமே சகிக்கவில்லை….. ஆனாலும் ரசிக்க முடிந்தது […]

ராணி., பெண்ணாதிக்கம் இரு கவிதைகள்.

This entry is part 27 of 38 in the series 10 ஜூலை 2011

ராணி.. ************************** சேணம் பிடித்து பாயும் குதிரையின் பிடறி சிலிர்க்க தோல் பட்டியில் கால் மாட்டி எவ்வுகிறேன்.., முன்பின்னாக ஆடும் மரபொம்மைக் குதிரையில் கூட இல்லை.. திருவிழா ., தேரோட்டம்., புரவி எடுப்பு.. அணிவகுப்பு முடித்து அமைதியாய் உறைந்து அசைவு மறந்த ஐயனார் கோயில் மண் குதிரையில் ஆசையோடு அமர்ந்து.. ******************************************** பெண்ணாதிக்கம்.. ***************************** கருவறைக்குள் முடங்கிக் கிடந்த கோபமோ என்னவோ., கர்ப்பக்கிரகத்துள் அடக்கிப் போட்டாய்.. சில நூற்றாண்டுகளுக்கு முன் நிலவறையிலும்.. தீட்டென்றும் கற்பென்றும் கண் அறியா […]