உருமாறும் கனவுகள்…

This entry is part 18 of 34 in the series 17 ஜூலை 2011

நிலவுக்குள் ஒள‌வைப்பாட்டி ந‌ம்பிய‌ குழந்தையாய் ‌ க‌வள‌‌ங்க‌ள் நிர‌ப்பப்படுகிறது நாள்காட்டியில் தொட‌ர்ந்த‌ இல‌க்க‌ங்க‌ள். க‌ருத்த‌ரித்துப் பின் பின்ன‌ல் சட்டைக‌ளோடு சுற்றும் ராட்டின‌ப் பூக்க‌ள் எம் தொட்டிலில் அடுத்த வீட்டுக் குழ‌ந்தை நான் வைத்த பெயரோடு. ச‌ரியில்லாத சுழ‌ற்சியால் த‌டுமாறும் மாத‌விடாய் உதிர‌ப்போக்கு ம‌ருந்து வைத்திய‌ர் சுழ‌லாத‌ உட‌ல் உபாதையென‌ ஒற்றைக்க‌வலை‌. க‌ட‌வுள்… வ‌ர‌ம்… வேண்டுத‌ல்…எல்லாமே நான்… நீ… நம்பிக்கை… மறுதலிப்பு!!! ஹேமா(சுவிஸ்)

காத்திருக்கிறேன்

This entry is part 15 of 34 in the series 17 ஜூலை 2011

என்றாவது வரும் மழைக்காக அன்றாடம் காத்திருப்பது நிரந்தரமானது வாழத் தவிக்கும் மரத்திற்கு ஞாபக வேர்கள் நீரைத் தேடுவதற்கும் திராணியற்று முடங்கிப்போக வேண்டியதாகிறது உங்களது உறவின் வெளிச்சத்தில் வளர்ந்த எனது நட்பின் கிளைகள் இலையுதிர் காலத்தை சந்திக்கிறது கடந்த காலங்களில் பதித்த தடங்களை தடவிப் பார்க்கவும்., தொலைந்துபோன நட்பின் சிறகுகளை தேடிப் பார்க்கவும் வாழ்க்கை வானில் கவிழ்ந்த சோக இருளைத் துடைக்க மனப்பகிர்வு மின்னலை வெளிப்படுத்தவும் வாய்ப்பு வருமென காத்திருக்கிறேன் காலம் காட்டிய திசையில் காற்றெனப் பறந்த உங்களின் […]

முற்றுபெறாத கவிதை

This entry is part 13 of 34 in the series 17 ஜூலை 2011

இன்னும் என் கவிதை முடிக்கப்படவில்லை …. ரத்தம் பிசுபிசுக்கும் வலிமிகுந்த வரிகளால் இன்னும் என் கவிதை தொடர்ந்துகொண்டே இருக்கிறது ….. பதில் கிடைக்காமல் விக்கித்து நிற்கையில் கேள்விக்குறி ஒன்று தொக்கி நிற்கிறது . திடுமென நிகழ்ந்த நிகழ்வொன்றில் , கண்களை அகல விரித்து ஆச்சர்ய குறி ஒன்று இடைசொருகப்படுகிறது ..! ஏதும் சொல்லொண்ணா நேரங்களில் வெறும் கோடுகளாய் நீள்கிறது……. புலம்பியது போதும் என முற்றுபுள்ளி வைத்தேன் ! அதன் அருகிலேயே மேலும் சில புள்ளிகள் இட்டு காலம் […]

கிறீச்சிடும் பறவை

This entry is part 10 of 34 in the series 17 ஜூலை 2011

  நாள் தவறாமல் வந்து என் ஜன்னல் கம்பிகளில் அமர்ந்து ஒரு சிறு பறவை கிறீச்சிடுகிறது என் கவனத்தைக்கவர.   எதை ஞாபகப்படுத்த ? மறந்துபோன இயற்கையுடனான நட்பையா ? அல்லது கடந்து சென்ற காலங்களை மீள் நினைவூட்டவா ?   எனினும் நாளையும் வரும் என்ற எதிர்பார்ப்பை என்னில் ஏற்படுத்துவதைத்தவிர. அது வேறொன்றும் செய்வதில்லை.   மேலும் அது ஒரு இறகையும் உதிர்த்துச்செல்வதில்லை எனக்கென.   சின்னப்பயல் – chinnappayal@gmail.com

அழுகையின் உருவகத்தில்..!

This entry is part 9 of 34 in the series 17 ஜூலை 2011

என்ன பதில் மொழிவதென தவிக்கும் விளிம்பு நிலை விரிசலின் தடயங்களில் ஏதேனும் மார்பு அகப்பட்டிருந்தால் கண்ணீர் கரைசல் படிமக் காடு படர்ந்திருக்கும். வார்த்தைகளின் உயிரோட்டத்திலே உயிர் பிரிந்து சென்றிருக்கலாம்.. ஏதோ ஒரு அழுகையின் உருவகத்தில் அரவணைத்திட அறியாதொரு அழகியலின் தொன்மம் கரைந்துக் கொண்டிருக்கிறது. *மணவை அமீன்*  

ப மதியழகன் கவிதைகள்

This entry is part 8 of 34 in the series 17 ஜூலை 2011

மோட்ச தேவதை   கிணற்று நீரில் விழுந்த தனது பிம்பத்தை எட்டிப் பார்த்தது குழந்தை வானவில்லை விட அம்மாவின் சேலை வண்ணம் மிகவும் பிடித்திருந்தது அதற்கு தன்னுடன் சோற்றுக் கவளத்துக்கு போட்டியிடும் நிலாவுக்கு காய் விட்டது குழந்தை லாலிபாப் வாங்கிக் கொடுத்தால் கன்னத்தில் முத்தம் பதிக்கும் யாரையும் சீரியல் பார்க்கவிடாமல் கார்ட்டூன் சேனல்களில் லயித்துப் போய் தொலைக்காட்சி முன்னால் தவமிருக்கும் அழைப்பு மணி ஒலிக்கும் கணத்தில் தொலைபேசி அதன் கையிலிருக்கும் மழலை மொழியில் ஹலோ என்பதை வீடே […]

அவனேதான்

This entry is part 7 of 34 in the series 17 ஜூலை 2011

ஆட்டுக்கு புல்லைக்காட்டி அழைத்துச் செல்கிறான் கழுத்தை வெட்ட.. மீனுக்கு புழுவைக்காட்டி தூண்டிலில் பிடித்து துடிக்க வைக்கிறான்.. பசுவிடம் பால்கறக்க போலியாய்க் கன்றைக் காட்டி காரியம் சாதிக்கிறான்.. இத்தனையும் தானாகி இலவசத்தால் ஏமாந்து ஜனநாயகம் என்ற பேரில் சந்தியில் நிற்கிறான் ! -செண்பக ஜெகதீசன்..

விட்டு விடுதலை

This entry is part 5 of 34 in the series 17 ஜூலை 2011

சுமக்கிற பிரியங்களை இறக்கி வைப்பது இறுதி நொடியில் கூட இயலுமா தெரியவில்லை. பிரிகிற ஆன்மா பேரொளியில் சேரத் தடையாகுமதுவே புரியாமலுமில்லை. காலத்திற்கேற்ப ஆசைகள் மாறுவதும் தலைமுறைகள் தாண்டிப் பாசங்கள் தொடர்வதும் புகழ்பொருள் மீதான நாட்டங்கள் போதையாகுவதுமே சாஸ்வதமாக மீளும் விருப்பற்று இறுக்கும் சங்கிலிகளுக்குள் இருப்பினைப் பத்திரமாக்கி விட்டு விடுதலை ஆகாமலே விடுதலை ஆகிறோம் ஓர் நாள். -ராமலக்ஷ்மி

கரியமிலப்பூக்கள்

This entry is part 1 of 34 in the series 17 ஜூலை 2011

அமிலம் மற்றும் கரிப்புத் தன்மை கொண்டவையாகவே இருந்து விடுகின்றன சில நிஜங்கள் மறுக்கப்படுகிறது இனிப்பின் இயல்பு மறந்தும் கூட இறுக்கப்பட்ட மன இயந்திரத்தின் அழுத்தக் கோட்பாடுகள் வேகமேற்று .. அனல்வாயின் கொதிக்கும் தங்கக் குழம்பின் சிதறிய பிரள்கள் மலர்ந்து விடுகின்றன நட்சதிரப்பூக்களாய் … சூடு தணிக்கும் பணியென தண்ணீர் ஊற்றப்படுகையில் குளிர்ந்தும் இறுகியும் கிடந்தன கரியமிலப்பூக்கள் ஷம்மி முத்துவேல் …

விழிப்பு

This entry is part 36 of 38 in the series 10 ஜூலை 2011

சந்தங்கள் மாறித் துடிக்கும் இருதயம் தினமும் புதிதாய் இங்கே – ஆயிரம் காதை சொல்கிறது பௌதிகம் தாண்டிய திசைகளில்… வெயிலோ பட்டெரிக்கும் வெந்தீ சுட்டு எரிக்கும் வார்த்தை பட்டு உடையும் இதயம் படாத பாடு படும்… யாதும் தொடாமலே எண்ணங்கள் இடமாறலாமா…? நிலவு கந்தளானால் அது உன் பிறை நுதல் என்பேன்., இருள் கந்தளானால் அது உன் விழி வீசும் சுடர் என்பேன்., கனவே கந்தளானால் அதைத் தான் யாது என்க..?, பூவுலகில் துயில் கலைந்தது என்கவா..??! […]