ஒலிபெருக்கியில் ஒப்பாரி சத்தம் உறக்கத்தைத் துரத்தியது நேரத்தைக் கூட்டியது தாகமெடுத்தது அருகில் சென்ற போதுதான் தெரிந்தது கானல் நீரென்று கதவு திறந்திருந்தது உள்ளே எட்டிப் பார்த்தேன் ஈர விறகால் அடுப்பு புகைந்தது வானத்தின் உச்சியில் பறக்கும் கழுகின் நிழல் பூமியில் விழும் விளக்கிலுள்ள சுடர் தான் இருளை விரட்டியடிக்கின்றது மரணப் புதிரை அவிழ்க்க முயல்பவனை எச்சரிக்கும் பைசாசங்கள் கரைகளுக்கிடையே ஓடும் ஆறு கடல் போய்ச் சேருமா நீர்மட்டத்திற்கு மேலே துள்ளும் மீனை கவ்விச் செல்லும் பறவை.
நூலிழை கொண்டு நெய்து வைத்தது போல் பெய்து கொண்டிருந்தது மழை இடியாமலும் மின்னாமலும் சற்றேனும் சினமின்றி சாந்தமாயிருந்தது வானம் சீயக்காய் பார்க்காத சிகையைப்போல சிக்குண்டு கிடந்தன மேகங்கள் உதயகாலம் உணராமல் உறங்கிக்கொண்டிருந்தது உலகம் பஞ்சுப்பொதி மேகம் போர்த்திப் படுத்துறங்கிக் கொண்டிருந்தது பகலவன் தற்காலிக ஓடைகளிலும் தான்தோன்றிக் குட்டைகளிலும் துள்ளின தவளைகள் நைந்தும் சிதைந்தும்போய்விட்ட மழைநீர் சேகரிப்புக் கொள்கலன்களில் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அனிச்சையாகவே சேகரமாயது மழைநீர்.
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “நினைவில் மட்டும் இருக்கிறான் அவன் இப்போது. காரணம் இந்தப் புவியின் மீதுள்ள உன்னத பாதைகளில் அவன் இனிமேல் நடக்கப் போவதில்லை. ஆயினும் அவனது பொன்மொழிகள் நம்மிடையே இன்னும் உலவி வருகின்றன. அவை வேறு யுகத்துக்கோ அல்லது வேறு தளத்துக்கோ நம்மை மீண்டும் வழிநடத்திச் செல்லும்.” கலில் கிப்ரான் (மீட்சி – The Return) மனிதச் சொற்கள் மூலமே உனது கனவுகள், விருப்பு, வெறுப்புகள் […]
இரைச்சலிடும் தையல் இயந்திரம் ஒருக்கால் அறுந்துபோன என் கனவுகளைத் தைக்கலாம். ஆனால் ஊசியின் ஊடுருவலும் பாபினின் அசைவும் கனவுகளை மிகக்கோரமாய் ரத்தம் கசியவைக்கும். குருதிப்பெருக்கில் திகிலுற்று என் பாட்டி கேட்பாள் “ஏன் உன் கனவுகள் தைக்கப்பட வேண்டும்?”. பதில் என்னவோ சுலபம்தான். அறுந்துபோன கனவுகளை ஒரு தையல் தைக்கும்போது நிர்வாணமான மனதை மூடிக்கொள்ள ஏதோ ஒன்று கிடைத்து விடுகிறது. ரமணி
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நீ இறைவனின் தோழ னாயின் நெருப்பே உனக்கு நீர் ! விட்டில் சிறகுகளை ஆயிரக் கணக்கில் வைத்திட நீ விரும்ப வேண்டும் ! இரவு முழுவதும் ஒவ்வோர் சிறகாய் எரித்துப் பொசுக்கத் தருணம் கிடைக்கும் உனக்கு ! விட்டில் பூச்சி ஒளியில் மயங்கி விரைந்து செல்லும் விளிக்கும் தீயை நோக்கி ! நெருப்பைக் கண்டு நீ ஒளிநோக்கிச் செல்வாய் ! இறைவன் தீயின் […]
முடிவை நோக்கி… வாழ்க்கை செல்கிறது! வாழ்வை விரும்பினாலென்ன… விரும்பாமல் சலித்தாலென்ன முடிவை நோக்கி ஆயுள் செல்கிறது…. ஆசைகளை அடைந்த போதும் நிராசைப்பட்டு சடைந்த போதும் எமது முடிவுப் புள்ளி பிறந்ததில் இருந்து எமை நோக்கி வந்து கொண்டேயிருக்கிறது….. இலட்சியம் – வெளுத்துப் பிரகாசிக்கலாம்… கசந்து காய்ந்து போகலாம்… “வெற்றி” சுவை கூறலாம்.. மறுத்து தொலைவாகலாம். பூமி புதிர் போடலாம்.. காற்று கவி பாடலாம்.. சோகம் வதை பண்ணலாம்.. இன்பம் கதை சொல்லலாம்.. நாம் கடி மலரில் துயிலலாம்.. […]
மூடிய கண்களுக்குள் விழித்துக்கொண்ட ஒரு யோசனை பூனையை குருடாக்கியது விட்டத்தின் மீதும் மதில் மீதும் விட்டேற்றியாக அலைந்த பூனையை திடீரென குறுக்கிட்ட ஒரு எலி பதுங்க வைத்துவிட கண்டபடிக்கும் வியூகம் அமைக்க வேண்டியதாயிற்று. எலியின் சேட்டை அதிகமானாலும் பூனைக்கு மிகவும் பிடித்திருந்தது வாலைக்கூட ஆட்டாமல் கண்களை முழுசாய் திறக்காமல் பாசாங்கு செய்ய வேண்டிதாயிற்று சிறு குடலை பெருங்குடல் தின்னும் பசியிலும் இரை விழுங்கிய மதப்புடன் சுருண்டு கிடக்கும் பாம்பாய் நடிக்க வேண்டிதாயிற்று. கும்பலாய் கூச்சலிடும் எலிக் கூட்டத்தில் […]
இறுக்கங்களுடன் பயணித்து வந்தேன். எப்படி இறுக்கம் தூர்ப்பதென அறியாமல். வினைகளை அற்று வீழ விரும்பினேன். வகிர்ந்து வகிர்ந்து வார்த்தைகளைத் தூவினாய். அதைப்பிடித்துக் கொடியாக வளர்ந்தேன். அவரை கொடிபிடித்து மேகம் துளைத்துப் பாதை அமைத்ததாய் இன்னொரு உலகம் இழுத்துச் சென்றாய் வானவில்லைப் பற்றி நடனமாடியபடி வந்தேன். சித்திரக் குள்ளர்களும் பழச்சோலையும் நி்றைந்திருந்தது. மாயாவிகளும் கௌபாய்களும் ததும்பிய கேளிக்கை அரங்குகள். பார்த்திபனின் கனவை குகை ஓவியமாக களித்தபடி தீப்பந்தத்தில். மூலிகைக் காற்றோடு ஓசோனை சுவைக்கத் தந்தாய் அமிர்தமாய். மூச்சு முட்டத் […]
என்னுடைய வாய்ப்பு அவளுக்கு வழங்கப்பட்டது நானே காரணமாயிருந்தேன் அதன் ஒவ்வொரு அசைவுக்கும். அவளை சிலாகித்தேன் அவளின் ஏக்கங்களை விவரித்தபடி. காற்றில் கண்டம் விட்டுக் கண்டம் செல்லும் புரவிப்பெண்ணாக அவள் உணரும் தருணங்களை.. ரேகைகளும் பாகைகளும் தொடாத அவளது ஆழிப்பேரலையான அனுபவத்தை விவரித்தபடி. விண்ணோக்கி நகரும் ஊர்தியில் அவளை ஏற்றியநான் ஏணிப்படியாயிருந்தேன்., மிதித்துச் செல்லட்டுமென. ஏற்றிவிட்ட பெருமிதத்தில் சுகித்தபடி இருந்தேன் என்னுடைய இடத்திலேயே என் வலியை ரசித்தபடி.
குற்றத்தினை கையாள்வது மிகவும் அசாதரமானது ஆனாலும் அனைவரும் எளிதாக கடந்து விட கூடிய இயல்பாகி விட்டது . குற்றங்கள் எப்பொழுதும் தனித்து விடப்பட்ட தன்மையை பெற்றிருப்பதால் அதனை நீங்களும் நானும் அறிந்திருக்க வாய்ப்பில்லை . எந்தன் குற்றத்தினை உங்களின் குற்றங்களுடன் இப்பொழுது சேர்த்து கொள்கிறேன் நீங்கள் எதுவுமே கேட்கப்போவதில்லை அதற்கான அவசியம் என்றுமே இருக்கப்போவதில்லை . உணர்த்துவதற்கு என்று படைக்கப்பட்ட மனம் தொலைந்து விட்டதை குற்றங்கள் மட்டுமே அறிந்திருக்கிறது . நானும் நீங்களும் ஒன்றிணைப்பது மனித உயிரினத்தால் […]