நான் எனதாகியும் எனதல்லவே!

நான் எனதாகியும் எனதல்லவே!

பிரகாஷ் தேவராஜு . 'நான்' நேசிக்கின்றேன் ….'என்' நண்பர்களை'என்' குடும்பத்தை'என்' மக்களை'என்' நாட்டை'என்' உலகத்தை'என்' பிரபஞ்சத்தை பிரபஞ்ச வெளியில் பறந்த பின்னரே உணர்கின்றேன்… 'நான்' நேசித்த யாவும் எனதில்லை.'நான்' அவற்றினுள்ளே -கலந்து போன கலவையாய், கரைந்து போன கரைசலாய்.கண் காணும் காட்ச்சித்துளியை…

நிழலின் இரசிகை

செ.புனிதஜோதி அண்டைவீட்டுக்காரியின் பால்கனியை என் சாளரத்தின் வழியே இறக்கிப்போட்டு விளையாடுகிறது நிழல் தொட்டிச்செடியில் அசைந்தாடும் மலர்கள் கொடிகயிற்றோடு உறவாடும் உடைகள் கூண்டுகிளியென என் வரவேற்பறையில். நிஜத்தை நிழற்படம் எடுத்து ஒட்டிக்கொண்டிருக்கிறது ஒளிப்படக்காரனாய் அவர்கள் என் வீட்டிற்குள்ளிருந்துதான்  அவர்கள்  வீட்டிற்குள் செல்கிறார்கள்  அன்னியர்கள்…

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) ஆடுகளம் அடுத்தடுத்துத் தொடர்ச்சியாய் வெற்றிகளைக் குவித்தும் ஆட்டவீர்ர் முகத்தில் அதற்கான குதூகலமில்லை. காரணங்கேட்டவரிடம் கூறினார்: கோமாளிகளும் குயுக்திமூளைக்காரர்களும் குரோதம் நிறை வஞ்சக நெஞ்சங்கொண்டோரும் சிறுமதியாளர்களும் செத்த உயிர் தாங்கியோரும் சாக்கடையை சந்தனமணங்கமழ்வதாக சாதிப்போரும் சக உயிரைப் பகடையாக்கும் சூதாடிகளும்…

வாய்ச்சொல் வீரர்களும் ”வாழ்க வாழ்க” வாயர்களும்

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் குறுகிய காலத்திற்கு சமத்துவம் பேணுபவர்கள் மறவாமல் அதைக் காணொளிக்காட்சிகளாக்கிப் பகிரத் தவறுவதேயில்லை. உறைந்தும் ஊர்ந்தும் அந்தக் காட்சிகள் அவரை சமத்துவசாலியாகவும்  சாட்சாத் சமூகப்பிரக்ஞையாளர்களாகவும்  காலத்திற்குமாகக் காட்டிக்கொண்டேயிருக்க அண்ணாந்து பார்க்கவைக்கும் அவர்களுடைய…

அடையாளம்

ஆர். வத்ஸலா இயற்பியலில் முதுநிலைப் பட்டதாரி மென்பொறியாளர் பெண்ணியவாதி பெரியாரின்  அம்பேத்கரின் மார்க்ஸின்  சிந்தனைகள் அத்துப்படி தனித்து நின்று  தாய் தந்தையரை பேணி  மக்களை வளர்த்தவள் ஆனால் என் மக்களின் மனதில் நான் ஒரு அம்மா அம்மா அம்மா

அம்மாவின் செல்லம்

அம்மாவின் செல்லம் ஆர். வத்ஸலா அம்மாவுக்கு என்னைத் தான் மிகவும் பிடிக்கும் எனக்கு  சீட்டித் துணியில் பாவடை தானே தைத்து போடுவாள் தீபாவளிக்கு - அழகாக தைக்க வராவிட்டாலும் - அது குட்டை பாவடையாகியும் ஒரு வருடம் போடுவேன் பள்ளித்தோழிகள் அதனை…
கணம் 

கணம் 

ஆர் வத்ஸலா ஒவ்வொரு முறை அவன் நினைவு வரும் போதும் என்னை நானே அடித்துக் கொண்டு நினைவூட்டிக் கொள்கிறேன் அவனுக்கு நான் வேண்டாம் என்பதை "எப்படியடி கொள்ளி வைக்க முடிந்தது அவனால்  பல்லாண்டு அன்புக்கு ஒரு கணத்தில்?" என கேட்கிறது மனம்…

இந்த கணம்

இந்த கணம் ஆர் வத்ஸலா இந்த கணம் உனக்குத் தேவை எனதன்பு என் ஆதரவை பறைசாற்றும் சொற்கள் வழங்குகிறேன் அவற்றை நேற்று உன்னிடம் பெற்ற அதே உதாசீனம் நாளை நீ நிமிர்ந்த உடன் பெறுவேன் என்று அறிந்திருந்தும் நம்மிடையே சமுதாயம்  ஏற்படுத்திய…
அந்த கணம்

அந்த கணம்

ஆர். வத்ஸலா 1. நீயும் நானும் நடந்தோம் புல்நுனியில் நடனமாடிய பனித்துளியின் வண்ணங்களை வகைப்படுத்தி சுட்ட மணலில் கால் பாவாமல் கரங்கோர்த்து ஓடி மின்னல் ஒளியில்  குட்டிக் குட்டைகளை கண்டுபிடித்து  பாதம் தோய்த்து இன்னமும்  நாம் சேர்ந்துதான் நடக்கிறோம் ஆனால் லயம்…
எனக்கென்ன?

எனக்கென்ன?

கோவிந்த் பகவான் இன்றோடு முப்பத்தெட்டு நாள் முக்கால் பொழுது மூன்று மணி நேரம் கழிகிறது இதற்குள் இப்படியெல்லாம் நான் மாறி  இருந்திருக்கக்கூடாது மாற்றியும் இருந்திருக்கக் கூடாது கட்டுப்படாத வார்த்தைகளல்லாத வார்த்தைகளை ஒரு பெருமழைப்போல் நள்ளிரவிலும் உன்மேல் தூவி இருந்திருக்கக்கூடாது தான் மாறாக…