தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

பொய்க்கால் காதலி!

தாளத்துக்கேற்ற நடனம் வசிய பார்வை விஷம புன்னகை மழலை பேச்சு... அடிமை பட்டுக்கிடக்கும் ஒரு ரசிகனாய் நீ ரசிக்க பட்டாம்பூச்சிகளுக்கு வலிக்க வலிக்க பிடித்துத் தருகிறேன் காதலாய்... கொஞ்சிக் குலாவிக்கொண்டிருக்க சிறகில் ஒன்று உடைந்து…

ஏன் மட்டம்

பூமிக்குப் போர்வையாய் பச்சைக் கம்பளம் - அந்தப் புல்வெளியில் தெரிகிறது அகிலத்தின் அழகு, அழித்து அதைமேயும் ஆட்டு மந்தை, ஆடுகளை வேட்டையாடும் ஓநாய்க் கூட்டம், ஓட ஓட விரட்டி ஓநாயை; கொல்லும் கொம்பன் காளை,…

சபிக்கப்பட்ட உலகு -2

-துவாரகன் வார்த்தைகளை மண் மூடுகிறது முகத்தையும் மனத்தையும் இருள் மூடுகிறது பூதத்தீவுப் புதிர்போல ஏதோ ஒன்று மனத்தீவில் ஓடுகிறது கணங்கள்தோறும் மெளனமே இலகுவாயிற்று நினைவு குமட்டுகிறது எல்லாக் கண்களும் விழித்துப் பார்க்க இயலாமை… மரணம்……

எனக்குச் சொந்தமில்லா உன் பெயர்

  அதீத வாஞ்சையொன்று முட்டித் தள்ள உந்துதலில் உரைக்கிறேன் உன் பெயரை வெண்புகை குடை விரித்த மலைச் சிகரத்தினுச்சியில் காற்றில் தவழ்ந்த பெயரோ நேற்றுப் பிறந்த மழலையாய் சிணுங்கி அடர் பச்சை ஊசியிலை மரங்களின்…

உறைந்திடும் துளி ரத்தம்..

* உன் துயரத்தின் சாயலை நகலெடுத்துக் கொள்ளும்படி உத்தரவிடுகிறாய் பிடி நழுவும் குறுவாளின் கூர் முனையில் உறைந்திடும் துளி ரத்தம்.. ஊடுருவி மீண்ட துரோகக் கணத்தின் சாட்சியென துருப்பிடித்துக் காத்திருக்கிறது உன் வரவுக்காக ******* --இளங்கோ

எதிரொலி

  என் இரவின் கழுத்தைக் கவ்விச் செல்கிறது பூனை. நெஞ்சை யழுத்து மந்த இரவினோசை திசையறியாச் சிறகுகளின் படபடப்பு. இருளின் முடியாத சுரங்கக் குழாயினுள் தலையற்ற தேவதை அசைத்துச் செல்லும் வெள்ளை யிறக்கைகளாய் தோட்டத்திலிருந்த …

ஒவ்வொரு சிகரெட்டுக்கு பின்னாலும் ஒரு தீக்குச்சி

போதைக்காக அல்லாமல் பொழுதைக் கழிக்கவே புகைக்கிறான் மதுவின் துளிரசம் அருந்தியதில்லை இதுவரைக்கும் போதையில் உளறும் தந்தையாலே குடியை வெறுத்தான் என்றபோதிலும் புகைக்கும் அவரது தோரணையே அவனது சிகரெட் ஈர்ப்புக்கும் காரணம் என்ற செய்தி ரசிப்பிற்குரியதாய் இல்லை…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -2)

"நீதி மன்றத்துக்கோ அல்லது பல்கலைக் கழகங்களுக்கோ நான் போகும் போது அங்கேயும் திருவாளர் பிதற்றுவாய் தன் தந்தை, தாயோடு பட்டாடையும், அழகிய தலைப்பாகையும் அணிந்து வஞ்சக அங்கி போர்த்திக் கொண்டு காணப்படுவார் !"  …

’ரிஷி’யின் கவிதைகள்:

1.மச்சம்   இடது ஆள்காட்டிவிரலின் மேற்புறம்  புதிதாக முளைத்த மச்சத்திற்கும் ஆரூடங்கள் உண்டுதான். நிலைக்காத போதிலும் நாளையே அழிந்துபோகுமென்றாலும் ஒவ்வொரு புதிய மச்சமும் பழைய (தலை) எழுத்தின் தொடர்ச்சியாய் புதியதோர்(தலை) எழுத்தாய் உருமாறிக்கொள்ள, மீள்வரவாகக்கூடும்…

வழக்குரை மன்றம்

'கோவலன் கொலையுண்டான்' செய்தி வந்ததும் காற்று மௌனித்து அஞ்சலி செலுத்தியது. * * * * * * * இரவுக்கு வெள்ளையடிக்க நிலவு பொழிந்தாலும் -தேச இருட்டுக்கு அஞ்சி காரைபெயர்ந்த குடிலுக்குள்-அவள் கந்தல்…