என்னுள்ளே உறைந்து என்னுடன் இறந்துவிடும் ரகசியங்கள் பனிக்கட்டிகளாய்.. பென்குவின்கள் வழுக்கும் பாறையில் விளையாடி மீன் பிடித்துண்ணும்.. சங்குகளுக்குள்ளும் சிப்பிகளுக்குள்ளும் நுழைந்து மென்தசைகள் சுவைத்து ஆக்டோபஸ்களும் ஜெல்லி மீன்களும் இறுகப்பிடித்துறிஞ்ச கடலோடியாய் அலைகளுள் புணர்ச்சிக்குப் பின்னான தளர்ந்த அயர்ச்சியில் கரையோர நண்டுகள் மண்கிளறி அகலக்காலிட்டு பக்கம் பக்கமாய் ஓட.. கால்நனைத்துக் காத்திருக்கும் எனை விழுங்க வருகிறது ஆழிப் பேரலை அரவத்துடன்.. ஆலிலையில் நீ பிழைக்க சுருட்டிச் செல்கிறது நீர்ப்பாய் என்னை..
வருபவர் தூரத்துச் சொந்தம் என அறிந்தும் தடம் மாறிப்போன நண்பன் எனத் தெரிந்தும் முகம் தெரிந்தும் பெயர் தெரியாதவன் என புரிந்தும் பேசச் செய்திகளின்றி விருப்பமுமற்று தவிர்த்தோ அல்லது வெற்றுப் புன்னகையுடனோ முடிகின்றன நிறைய சந்திப்புகள் பொன்.குமார்
கத்திரிவெயிலிலும் சிரிக்க மறப்பதில்லை பொய்க்காத பூக்கள் மாறாத வண்ணங்களோடு. ஒற்றை விடயம் மாறுபட்ட பதில்கள் ஒருவருக்கொருவராய் மாறித்தெறிக்கும் அடர் வார்த்தை. பிதிர்க்கடனெனத் தெளிக்கும் எள்ளும் தண்ணீரும் சிதறும் வட்ட வட்ட திரவத்துளிகக்குள் சிரார்த்த ஆன்மாக்கள். சம்பிரதாயங்களுக்குள்ளும் சமூகச் சடங்குகளுக்குள்ளும் குறுக்கு மரச் சட்டங்களுக்குள்ளும் முங்கி அமிழ்ந்து திணறுகின்றன சங்கடங்களும் சந்தோஷங்களும் இறந்த பின்னும்கூட!!! ஹேமா(சுவிஸ்)
சில நிபந்தனைகளுடன் சிலரை ஏற்றுக்கொள்ள முடிகிறது. சில புரிதல்களுடன் சிலருடன் ஒத்துப்போக முடிகிறது சில வேறுபாடுகளுடன் சிலருடன் வாழ்ந்து விட முடிகிறது சில சகிப்புகளுடன் சிலருடன் பயணிக்க முடிகிறது. சில துருத்தி நிற்கும் உண்மைகளுடன் சிலரைக் கடந்து செல்ல முடிகிறது. சில ம்றைத்து வைக்கப்பட்ட பொய்களுடன் சிலருடன் தொடர்ந்து இருக்க முடிகிறது. சில உறுத்தல்களுடன் இது போன்ற சில கவிதைகளை வாசிக்கவும் முடிகிறது.
தொலைந்து போனவர்கள் சொல்லி வைத்தாற் போல மழை வந்தது காகிதக் கப்பல் இலக்கின்றி நகர்ந்தது தேவதையின் பக்கத்து வீட்டுக்காரருக்கு கனவுகள் இலவசம் ஞானம் தேடுபவர்கள் ஏன் தாடி வளர்க்கிறார்கள் வேட்டுச் சத்தத்தோடு வழியனுப்ப வேண்டுமென்று எந்த மனிதன் எழுதி வைத்தான் உதிரும் இலைகள் வெற்று வெளியில் வார்க்கும் கவிதை கடல் கானம் பாடியது கரை அதைக் கேட்டுக் கிறங்கியது வானம் ஊஞ்சலாடியது திருவிழாவில் தொலைந்தவர்களெல்லாம் அடுத்த திருவிழாவில் அகப்படாமலா போய்விடுவார்கள். […]
தாளத்துக்கேற்ற நடனம் வசிய பார்வை விஷம புன்னகை மழலை பேச்சு… அடிமை பட்டுக்கிடக்கும் ஒரு ரசிகனாய் நீ ரசிக்க பட்டாம்பூச்சிகளுக்கு வலிக்க வலிக்க பிடித்துத் தருகிறேன் காதலாய்… கொஞ்சிக் குலாவிக்கொண்டிருக்க சிறகில் ஒன்று உடைந்து போகிறது… அருவருப்பாய் தூக்கி எறிகிறாய் அதிலிருந்த சிவப்பொன்று என் முகத்தில் தெறிக்க வண்ணமா ரத்தமா? பாவத்தின் அச்சத்தோடு தலையில் கை வைத்தமர்கிறேன்! சாக துடிக்கும் அப்பூச்சியின் கன்னங்களை அள்ளி பார்த்திட அதன் மர்ம புன்னகை என் முகத்தில் அறைந்து இறக்கிறது.. கண்ணீர் […]
பூமிக்குப் போர்வையாய் பச்சைக் கம்பளம் – அந்தப் புல்வெளியில் தெரிகிறது அகிலத்தின் அழகு, அழித்து அதைமேயும் ஆட்டு மந்தை, ஆடுகளை வேட்டையாடும் ஓநாய்க் கூட்டம், ஓட ஓட விரட்டி ஓநாயை; கொல்லும் கொம்பன் காளை, அதன் ஜம்பம் பலிப்பதில்லை சிங்கத்திடம் – அடிபட்டு ஆவி துறக்கிறது.. இப்படித்தான் செல்கிறது.. இதையே சொல்கிறது இயற்கைச் சட்டம் ! இந்த மனிதன் மட்டும் ஏன் இத்தனை மட்டம் – தனியே ஒரு சட்டம் தன் இனத்தையே அழித்திட மட்டும் […]
-துவாரகன் வார்த்தைகளை மண் மூடுகிறது முகத்தையும் மனத்தையும் இருள் மூடுகிறது பூதத்தீவுப் புதிர்போல ஏதோ ஒன்று மனத்தீவில் ஓடுகிறது கணங்கள்தோறும் மெளனமே இலகுவாயிற்று நினைவு குமட்டுகிறது எல்லாக் கண்களும் விழித்துப் பார்க்க இயலாமை… மரணம்… உயிரின் மோகம்… ததும்பி வழிய முகத்தைப் புதைத்துக் கொண்டு நடந்தேன் நினைவு துரத்துகிறது. மறதியே! என் இருளறையை உனக்குக் காணிக்கையாக்குகிறேன் நீ வாழ்க இப்போது மட்டும் எல்லோருக்கும் இலகுவாய்க் கிடைக்கிறது ஒரு சுருக்குக்கயிறு. 06/2011 kuneswaran@gmail.com
அதீத வாஞ்சையொன்று முட்டித் தள்ள உந்துதலில் உரைக்கிறேன் உன் பெயரை வெண்புகை குடை விரித்த மலைச் சிகரத்தினுச்சியில் காற்றில் தவழ்ந்த பெயரோ நேற்றுப் பிறந்த மழலையாய் சிணுங்கி அடர் பச்சை ஊசியிலை மரங்களின் இலைகளின் கைகுலுக்கி நீர் சுனையொன்றில் குளிக்கக் குதித்தது. மலையின் மடியில் வீசிய நெற்பயிரின் தலை கோதி நெல்மணியின் கரம் பற்றி ஊசலாடி கரைகின்றது காற்றில் இதுவரையில் உறவாடிய உன் பெயர் கூட இனியெனக்குச் சொந்தமில்லை. அது எங்கிருந்து எடுக்கப்பட்டதோ அங்கேயே கொடுக்கப்பட்டது. […]
* உன் துயரத்தின் சாயலை நகலெடுத்துக் கொள்ளும்படி உத்தரவிடுகிறாய் பிடி நழுவும் குறுவாளின் கூர் முனையில் உறைந்திடும் துளி ரத்தம்.. ஊடுருவி மீண்ட துரோகக் கணத்தின் சாட்சியென துருப்பிடித்துக் காத்திருக்கிறது உன் வரவுக்காக ******* –இளங்கோ