வார்த்தைக்கூடை நிரம்ப பலவண்ண பொய்களுடன் வெளியேறுகிறேன் காலைவெயில் நுகரும் வியர்வையுடன்… . ஒவ்வொரு பொய் துழாவியெடுத்து சூடிக் கொள்ளும் வேளையிலும் கண்ணீர்த்துளிகளுடன் என் கற்பனை தோட்டத்தில் ஒரு மலர் உதிர்கிறது… . நிலவு நீண்டிடும் இருளினை அள்ளிப் பருகி நாளின் இறுதியில் நுழைகிறேன், நிர்வாணமாய் நிற்கிறது அருமை தோட்டம்.. . மறுநாள் வியர்வை நுகர நான் வெளியேறுகையில் தோட்டம் நிரம்ப வண்ண மலர்கள் பூத்துச் சிரித்திருக்கின்றன.. . – தேனு [thenuthen@gmail.com]
வேடங்களில் மூடி வைத்த மேடை நாடகமாய் ஓடிக்கொண்டிருக்கிறது மண்ணில் மனித வாழ்க்கை ! உறவின் மடியில் உல்லாசத்தில் இருப்பவன் போதிக்கிறான் துறவின் தூய்மை பற்றி ! பாலுக்காகக் கூட பிள்ளைக்கு அவிழ்க்காத மார்பை காசுக்காக எவனுக்கோ காட்டும் காரிகை பேசுகிறாள் கற்பைப் பற்றி ! ஆடுமுதல் அனைத்து ஜந்துவையும் அடித்துத் தின்பவன்தான் அடியாராம், அவன் போதனைதான் சுத்த சைவமாம் ! சம்பளம் ரூபாய் மாசம் பத்து, சம்பாதித்தது மா சம்பத்து, மற்றவரையும் மனச்சாட்சியையும் ஏய்க்கும் அவன்தான் […]
கயிறு காதலில் பம்பரத்தைச் சுற்றிச் சுற்றி வந்தது. அதன் உடலெங்கும் அழுந்தத் தழுவி தன்னன்பை அந்தரங்கமாய் சொன்னது. எதுவும் சொல்லாமல் இயல்பாய் இருந்த பம்பரத்தின் கயிற்றை இழுத்துப் பிரித்த போது ஒற்றைக் காலில் பம்பரம் சுற்றிச் சுற்றி வந்தது துணையைத் தேடி. இத்து இத்து கயிறு செத்துப் போகும் நிலையிலும் முனை மழுங்கிய பம்பரம் முனைந்தது தன் காதல் சுற்றை இயன்றவரை. களித்தனர் தோழர்கள் கயிற்றோடு பம்பரம் களித்தக் காதல் விளையாட்டில். குமரி எஸ். நீலகண்டன்