பம்பரக் காதல்

This entry is part 21 of 48 in the series 15 மே 2011

  கயிறு காதலில்  பம்பரத்தைச் சுற்றிச் சுற்றி வந்தது. அதன் உடலெங்கும் அழுந்தத் தழுவி தன்னன்பை அந்தரங்கமாய் சொன்னது. எதுவும் சொல்லாமல் இயல்பாய் இருந்த பம்பரத்தின் கயிற்றை இழுத்துப் பிரித்த போது ஒற்றைக் காலில் பம்பரம் சுற்றிச் சுற்றி வந்தது துணையைத் தேடி. இத்து இத்து கயிறு செத்துப் போகும் நிலையிலும் முனை மழுங்கிய பம்பரம் முனைந்தது தன் காதல் சுற்றை இயன்றவரை. களித்தனர் தோழர்கள் கயிற்றோடு பம்பரம் களித்தக் காதல் விளையாட்டில். குமரி எஸ். நீலகண்டன்