ஆர் சீனிவாசன் “சீக்கரம் கிளம்பு. நேரமில்லை. இன்னும் கொஞ்சநேரத்துல ஞால ஹைபெர்வேல நெரிசல் அதிகமாயிடும்” சக்திவடிவேல் அலரிடம் சொன்னான். மெதுவாக ஜன்னலுக்கு வெளியே நிலவை பார்த்து கொண்டிருந்தாள் அலர். செயற்கை லாந்தர்களின் ஒளியில் நிலவொளி மறந்து போன காலம் அது. வெட்ட வெளியில் பூர்ண நிலவின் ஒளியில் உலகை பார்க்கும் சிறு இன்பம் மிக குறைவானவர்களுக்கு மட்டும்தான் வசீகரமாக இருந்தது. மெதுவாக மெல்லிய குரலில் “விட்டுட்டு போக மனசே இல்லை” என்றாள். “எனக்கும் தான்… ஆனா வேற […]
பாலன் ராமநாதன் “என்ன மாமா கோயில் திருவிழா நெருங்குது ஊர் கூட்டம் போடலாம்ல”என்றான் கணேசன் ஊர்ல நல்லது கெட்டது எல்லாத்துலயும் முதல் ஆளா நிக்கிறவன் கணேசன் . “சீக்கிரமா போற்றுவோம் மருமகனே” என்றார் துரைப்பாண்டி .துரைப்பாண்டி ஊர் தலைவர் நல்ல மனிதர் பணம் காசு இல்லாட்டாலும் ஊர் மீது பற்று கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர். 25 வருடத்துக்கு முன்னாடி நடந்த கம்மா விறகு வெட்டின பிரச்சனையில் ஊருக்காக கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு சென்ற வேல்சாமியோடு பையன் அப்பாவைப் […]
கங்காதரன் சுப்ரமணியம் நான் ரொம்ப நாளாக நினைத்துக் கொண்டிருக்கிறேன் கிரிவலம் போக வேண்டுமென்று. ரொம்ப நாளாக என்றால், கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேலாக. போய் அருணாச்சலேஸ்வரனையும், உண்ணாமலையையும் தரிசித்து விட்டு வர வேண்டும் என்று ஆசை. என்ன காரணமோ தெரியவில்லை, தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. எல்லாவற்றிற்கும் வேளை வர வேண்டுமே? ஐந்து வருடங்களுக்கு முன், ஒரு சித்ராபவுர்ணமியன்று கிரிவலம் போய் வந்த என் நண்பர், அந்த அனுபவத்தை மெய்சிலிர்ப்புடன் விவரித்திருந்தார். அந்த மலை முழுக்க நிலவொளியில் ஜொலித்து, […]
மீனாட்சி சுந்தரமூர்த்தி பனி படர்ந்த குன்றுகளின் அருகிலிருந்த அடர்ந்த அந்த வனப்பகுதியில் கோபாலனின் கார் விரைந்துகொண்டிருந்தது. பெரிய வேன் ஒன்றும் உடன் வந்தது. வனத்தில் அவரது குலதெய்வக் கோவில் உள்ளது, வருடம் தவறாமல் சொந்தங்களோடு அங்கு வந்து பொங்கல் வைத்து கிடா வெட்டி படையலிடுவது அவரது வழக்கம். அம்மா இருந்த வரையில் தவறாமல் நினைவூட்டுவாள். தைமாதத்தில் இங்கு வந்து விடுவார்கள். தொண்ணூற்றைந்து வயது வரை அவளது வழிகாட்டலில் பூஜைகள் நடந்து வந்தது. அவள் […]
பென்னேசன் வெய்யில் கொள்ளை போயிக்கிட்டு இருக்கு? எதுக்குக் கிளம்பறே? சித்தப்பாவைப் பார்த்துட்டே போகலாமேடா. நான் சொல்றதை விட நீ இருந்து அவர்கிட்டே சொல்லிட்டுப் போனா அவருக்கும் ஒரு சமாதானமா இருக்கும் இல்லை. வர்ற நேரம்தான். பார்த்துட்டே போயிடேன்’ என்று அவனை நிறுத்திப் பார்த்தாள் கல்பனா சித்தி. வரதனுக்கு அங்கிருந்து தப்பித்துப் போனால் போதும் என்று இருந்தது. தான் வந்தபோது சித்தப்பா இல்லாமல் போனதே நல்லது. இருந்திருந்தால் முதல் காரியமாக அவனுடைய அழைப்பையே படுகேவலமாக உதாசீனப்படுத்தி இருப்பார். “அன்னிக்கு […]
கங்காதரன் சுப்ரமணியம் கண்ணுசாமி, குமார், சீனு, ராமானுஜம், முரளி இவர்கள் அனைவரும் பள்ளியில் ஆறாம் கிளாஸ்ஸிலிருந்து ஒன்றாகப் படித்தவர்கள். இதில் கண்ணுசாமி இன்று குடும்ப பிஸினஸை நடத்தி வருகிறார். மற்றவர்கள் தனியார் கம்பெனி, பேங்க் என்று வெவ்வேறு உத்யோகத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்கள். அனைவரும் அறுபது வயதைக் கடந்தவர்கள்; பேரன், பேத்திகளை எடுத்து வாழ்கையில் தங்களுடைய கடமைகளை முடித்து விட்டவர்கள். இதில் கண்ணுசாமியைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். கிளாஸில் கடைசி பெஞ்ச்சில் தான் உட்காருவார். தான் ஒருவரையும் […]
கங்காதரன் சுப்ரமணியம் நான் அந்த பெண்மணியை முதன்முதலாக சந்தித்தது எங்கள் அப்பார்ட்மெண்ட்டுக்கு எதிரே இருந்த காய்கறிக்கடையில் தான். அடுத்த சில நாட்களுக்கு வேண்டிய காய்கறிகள், பழங்களை வாங்கிய பின், மொபைல் ஃபோனை எடுக்க ஜோல்னா பைக்குள் கையை விட்டு துழாவிய போதுதான், வீட்டிலேயே மறந்து வைத்து வந்தது தெரிந்தது. கூகுள்பே, பேடீயெம் என்று வசதிகள் வந்தபின், பர்ஸை எடுத்துக் கொண்டு வரும் பழக்கம் அறவே போய்விட்டது. சில்லறைக்கு அலைய வேண்டியதில்லை, பாருங்கள். என்னுடைய நிலமையைப் புரிந்து கொண்ட […]
பென்னேசன் இதுவரை ஐந்து முறை வாட்ஸாப் அழைப்பை நிகராகரித்து விட்டான் ருக்மாங்கதன். இப்போது ஆறாவது முறையாக மீண்டும் அழைப்பு. ஒலிப்பானை அமைதிப்படுத்தியிருந்தாலும் தொலைபேசித் திரை மீண்டும் மீண்டும் ஒளிர்ந்து அமைதியானது. நிச்சயம் மெசேஜ் அனுப்பியிருப்பான் மாங்கேலால். இடது பக்கத்து இருக்கைக்காரன் படம் பார்க்கும் சுவாரசியத்தில் இந்தத் தொந்தரவைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் மஞ்சுளாவின் உச்சுக் கொட்டும் சத்தம் அதிகரித்து வந்தது. அவன் பக்கம் சாய்ந்து காதில் கிசுகிசுத்தாள். “இதோ பாரு ருக்கு உனக்கு சினிமா எல்லாம் பிராப்தம் […]
ஜீயெஸ் வானத்தின் இருளை இரண்டாகக் கிழித்துக் கொண்டு, பல கிகாவாட் சக்தியோடு அந்த ஹாஸ்பிடல் வளாகத்தை தாக்கியது அந்த மின்னல். தொடர்ந்து, காதை பிளக்கும் ஓசையுடன் பாறாங்கற்களை உருட்டி விட்டாற்போல இடியும் இறங்கியது. அந்த உக்கிரசக்தியை தாங்க முடியாமல் அந்த ஹாஸ்பிடலில் இருந்த பல கோடி மதிப்புள்ள நவீன சாதனங்கள் சேதமடைந்தன. ஹாஸ்பிடல் முழுவதும் இருளில் மூழ்கியது. அந்த சமயம் இன்னொரு சம்பவமும் அங்கு நடந்தது. அந்த வளாகத்தின் இன்னொரு பகுதியில் மாடி அறை ஒன்றில் மானிட்டருடன் […]
மீனாட்சி சுந்தரமூர்த்தி. ‘இராகவா நாளைக்கு அரைநாள் லீவு போட்டுட்டு வந்துடு’‘எதுக்குமா,இந்த வாரம் முழுக்க லீவே போட முடியாது’‘ஏற்கெனவே மூணுபேர் லீவுல இருக்காங்க மா’‘ஏண்டா உன்ன அரை நாளுதானே போடச் சொல்றேன்’‘அதான் எதுக்கு னுதான் சொல்லேன்’‘நாளைக்கி வேலூர்ல ஒரு பொண்ண பார்க்கப் போறோம்’‘சரி போயிட்டு வாங்க, நானெதுக்கு?’‘யசோதா அவனுக்குப் புரியல, உனக்குதான் பொண்ணு பார்க்கறோம்.’என்று சொல்லிக் கொண்டே மடிப்புக் கலையாத காக்கி உடையில் தொப்பியைக் கையில்எடுத்துக்கொண்டு வந்தார் கோவிந்தன்.‘அப்பா எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம், ரெண்டு வருஷம் போகட்டும்’‘நீதான் […]