பணப்பையைப் பறித்து பறந்தது குரங்கு அறக்கப் பறக்க துரத்தியது மனிதக்கூட்டம் பையைக் கிழித்து பணங்களை எறிந்தது குரங்கு பணம்!பணம்!பணம்! கட்டிச் சேர்த்தது காற்றில் பறக்கிறது பறத்தல் கண்டதும் குரங்குகளாகிப்போன மனுஷப்பயலைப் பார்த்து இளித்தது குரங்கு…
அவளை அழைத்தார்கள். விளம்பர உலகின் மாடலாக, அவள் கைகள், கண்கள் இடுப்பும், தொடையும் வழியும் போதை கண்களில் கண்டனர் ஆண்கள். முதலில் பியானோ மீது சரிந்தாள் கைகளில், கால்களில் தைலம் தடவினார் கேமிரா கண்களுக்கு …
(1) சிதம்பரம் தழலாடுகிறது நடனம். தளும்புகிறது தீக் குழம்பு. தீச் செம்மை தித்திக்கிறது. அணிந்த சர்ப்பம் படமெடுக்கிறது. விரி சடைகள் தீ நாக்குகளாகின்றன. ஆயிரமாயிரம் சர்ப்பங்களாகி உன்மத்தம் கொள்கின்றன. சர்ப்ப மேனி ஜொலிக்க சதிராட்டம்.…