முடிச்சு

This entry is part 39 of 40 in the series 8 ஜனவரி 2012

“வாடா சூரி…என்ன டூரெல்லாம் போயிட்டு வந்தாச்சா?” – உறாலில் அமர்ந்து தினசரிச் செய்தியில் ஆழ்ந்திருந்த கணேசலிங்கம் கேட்டார். தயக்கத்துடனேயே நுழைந்த சூரிய நாராயணன் என்ற சூரிக்கு முதலாளியின் யதார்த்தமான அழைப்பு சற்று தெம்பைக் கொடுத்தது. என்னடா ஒரேயடியா பதினைஞ்சு நாள் லீவு கேட்குற? அப்புறம் கடையை யார் பார்த்துக்கிறது? என்று சலித்துக் கொண்டவர் இன்று சாதாரணமாய் அழைப்பது சற்று நிம்மதியைக் கொடுத்தது. கடையைப் பார்த்துக் கொள்ள என்று இன்னும் சில பேர் இருக்கிறார்கள் என்றாலும் அவனின் இருப்பு […]

முன்னணியின் பின்னணிகள் – 21 சாமர்செட் மாம்

This entry is part 38 of 40 in the series 8 ஜனவரி 2012

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்   … எது எப்பிடியானாலும் நம்ம ஜாஸ்பர் கிப்சன் தான் முதன் முதலில் ஓபரா மற்றும் உச்சஸ்தாயி பாடகரின் முகவரி அட்டைகளிலும் ‘அட் ஹோம்’ என கூட இடம் பிடித்த முதல் எழுத்தாளர். ஆக அவர் நமது திருமதி பார்த்தன் திரஃபோர்டின் பிரதம விருந்தாளி என அழைப்பு பெறாமல் எப்படி? அவர் கலந்துகொள்ளும் ஓபரா நிகழ்ச்சிகளின் முன்வரிசையில் அவள் இடம்பிடித்தாள். என்றாலும் அது கௌரவ நுழைவுச்சீட்டு அல்ல, கைக்காசு கொடுத்துப் போய் அமர்ந்தாள். […]

பஞ்சதந்திரம் தொடர் 25 முட்டாளுக்குச் செய்த உபதேசம்

This entry is part 37 of 40 in the series 8 ஜனவரி 2012

முட்டாளுக்குச் செய்த உபதேசம்   ஒரு காட்டுப்பிரதேசத்தில் குரங்குக் கூட்டம் ஒன்றிருந்தது. அவை குளிர் காலத்தில் அசாத்தியக் குளிரால் வாடிக்கொண்டிருந்தன. இரவில் ஒரு மின்மினிப் பூச்சியைக் கண்டன.. ‘அது நெருப்புத்தான்’ என்று அவை எண்ணி அதைச் சிரமப்பட்டுப் பிடித்து, காய்ந்த புல்லையும் இலைகளையும் போட்டு அதை மூடிவிட்டன. பிறகு தங்கள் கைகளையும், வயிற்றையும், மார்பையும், விலாப்புறத்தையும் அதன்முன் நீட்டிக் காட்டிச் சொறிந்துகொண்டபடியே மானசீகமான உஷ்ணத்தை அனுபவித்து இன்படைந்தன. அவற்றில் ஒரு குரங்கு குளரில் ரொம்பவும் வாடியதால் அதிலேயே […]

அழகின் சிரிப்பு

This entry is part 33 of 40 in the series 8 ஜனவரி 2012

 கே.எஸ்.சுதாகர் ஷோபனா நிலைக்கண்ணாடி முன் நிற்கின்றாள். தன் ஆடைகளை சரி செய்தவாறே அழகு பார்க்கின்றாள். பிறை நிலவிற்குள் செந்நிறப்பொட்டு. முகமெங்கும் மெல்லிதாக அரும்பி நின்று மினுப்புக் காட்டும் வியர்வைத் துளிகள். லிப்ஸ் ஸ்டிக்கில் கூரிய செவ்வாய். நீலநிற சுடிதாரில் அழகாய்த்தான் தெரிந்தாள். சரி! பார்த்தது போதும் என்று தனக்குள் எண்ணியவாறே பின்னால் திரும்புகின்றாள். “எப்படிடா செல்லம்! நான் வடிவா இருக்கிறேனா?” பதில் இல்லை. ஆடைகளைக் களைந்துவிட்டு அடுத்த உடுப்பை மாட்டுகின்றாள். எல்லாம் புத்தம் புதிதான பளிச்சென்ற விலையுயர்ந்த […]

மண் சுவர்

This entry is part 32 of 40 in the series 8 ஜனவரி 2012

அருண் காந்தி   ஆத்தா…ஆத்தோவ்…ஓவ்…என்னடீ…? எலி என்னத்தையோ கரண்டுது பாரு… இந்த எலிப் பண்ணையள என்னவன்றதுனே தெரியலடீ.குருதுதெல்லாம் வேற மொட்டயாக் கெடக்குறது அதுகளுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டமாக் கெடக்கு.   நானும் எவள நாளாத்தான் உனக்கிட்ட எலிப்பொறி வக்கச் சொல்லிக்கிட்டு  இருக்கேன்.கேக்குறியா நீ?   யேட்டி!யேட்டியோவ்…வாணி…   ஓவ்…என்ன த்தா… ? அங்குன யாரு மீனுக்காரனா போறான்?   இல்லத்தா கூனிப்பொடி..நிக்கச் சொல்லவா?   அடிப் போடி!”அவன் நால அள்ளிப் போட்டு 10 ருவா ம்பான்…சின்னப்பய கடத்தெருவுக்கு பொய்த்து வரும்போது வாங்கிட்டு வரச் […]

பஞ்சரத்னம்

This entry is part 25 of 40 in the series 8 ஜனவரி 2012

அவனுக்குத் தியாகையன் என்று பெயர் வைத்ததால் சங்கீதத்தில் ஆர்வம் வந்ததா அல்லது சங்கீதம் அவனுக்கு நன்றாக வரும் என நினைத்து அவன் அப்பா பஞ்சரத்னம் அப்படி ஒரு பெயரை அவனுக்குச் சூட்டினாரா என்று தெரியவில்லை. அவன் அம்மா நாகரத்தினம்மாவிற்குப் பையனின் நாமகரணத்தில் எந்தவித பங்கும் இல்லையென்றாலும், பையன் அழும்போதுகூட கலப்படமே இல்லாத சுத்தமான முஹாரி ராகத்தில்தான் அழுவதாகப் பெருமைப் பட்டுக்கொண்டிருந்தாள். பஞ்சரத்தினமும் சங்கீத ஆர்வலெரெல்லாம் ஒன்றும் இல்லை. அவரின் தாத்தா திருவையாறில் குடியிருந்தபோது இவர் பிறந்ததால் முதல் […]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 5

This entry is part 24 of 40 in the series 8 ஜனவரி 2012

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “அம்மா ! தயவு செய்து என்னை நீங்கள் இன்னும் குழந்தையாக நடத்த வேண்டாம் !  நேற்றிரவு நீங்கள் சொன்னதை நான் கவனமாக எடுத்துக் கொள்ள வில்லை.   இப்போது புரிகிறது.  பல வருடங்களுக்கு முன் சொல்ல வேண்டியதை இப்போது நீங்கள் சொல்லி என்னை ஆழமாய்க் காயப் படுத்தி விட்டீர்.  இனி நானும் அப்பாவும் நேராகப் பேசிக் கொள்ள வேண்டும் உங்கள் மூலமாக […]

மக்கள் அவரைச் சூழ்ந்திருக்கிறார்கள் (துருக்கி நாட்டுச் சிறுகதை)

This entry is part 9 of 40 in the series 8 ஜனவரி 2012

அஸீஸ் நேஸின் தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை அவர் இறுதியாக சிறையில் கழித்த காலம் மிகவும் கொடுமையானது. சிறையிலிருந்து விடுதலை பெற்ற பிறகு மிகவும் தொலைதூரத்திலிருந்த ஒரு பிரதேசத்திற்கு அவர் நாடுகடத்தப்பட்டார். அந்தப் பிரதேசத்துக்கும் அம் மக்களுக்கும் அவரொரு புதியவராக இருந்தார். அவர் சிறையிலிருந்த போது அவரது மனைவியால் அவர் விவாகரத்து செய்யப்பட்டிருந்தார். அவரது எல்லா எதிர்பார்ப்புக்களும் சிதறுண்டு போயிருந்தன. வாழ்க்கையைக் கொண்டு செல்லப் போதுமான பணம் கூட அவரிடமிருக்கவில்லை. வேலையொன்றைத் தேடிக் கொண்டு, அமைதியான […]

மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை –

This entry is part 6 of 40 in the series 8 ஜனவரி 2012

தாங்கள் அறுவடை செய்த செல்வத்தை தான தருமம் செய்வதைக் காட்டிலும் தாசிக்கு தருவதனூடாக தங்கள் ஆண்மையை வெளியுலகிற்கு உறுதிபடுத்து நினைக்கிறார்கள், அவ்வளவுதான். 10. சீர்காழியிலிருந்து திரும்பிய முதல் நாள் இரவு தூக்கமின்றி கழிந்தது. உப்பரிகையின் கைப்பிடி சுவரிலமர்ந்து வானத்தை வெகு நேரம்பார்த்தாள். நட்சத்திரங்களில் இளைஞனைத் தேடினாள். விரல்கொண்டு அவளது முழங்கையையை தடவிப்பார்த்துக்கொண்டாள் இளைஞைனின் விரல் தீண்டிய இடங்களில் வெது வெதுப்பினை உணர்ந்தாள். மயிற்கால்கள் சிலிர்த்தன. ஓர் ஆணின் ஸ்பரிஸம் இதற்கும் முன்பும் சித்ராங்கிக்கு நேர்ந்துள்ளது. இவள் வயது […]

சில்லறை நோட்டு

This entry is part 2 of 40 in the series 8 ஜனவரி 2012

சந்துருவுக்கு பெரும் பணக்காரனாக வேண்டும் என்று ஆசை! எப்படி பணக்காரனாக ஆவது? உழைத்துச் சம்பாதிப்பதென்றால் – அது அன்றாட உணவுக்குக்கூடப் போதாது! லட்சம் லட்சமாக – கோடி கோடியாகச் சிலரிடம் பணம் இருக்கிறதே – அவர்களெல்லாம் உழைத்துத்தான் சம்பாதிக்கிறார்களா? அவனுக்கென்னவோ நம்பிக்கையில்லை! அவனுக்குத்தான் நன்றாக தெரியுமே – உழைத்து உழைத்துக் களைத்ததுதான் மிச்சம்! கோடீசுவரனாக வேண்டாம் – ஒரு நூறீசுவரனாகவாவது அவனால் ஆக முடிந்ததா? இல்லையே! பின் ஏன் உழைத்து உழைத்து ஓடாகப் போக வேண்டும்? சந்துருவின் […]