முன்பெல்லாம் தேதி மறக்கும் அல்லது மாதம் மறந்து போகும். இப்போதெல்லாம் வருடமே மறக்கிறது. 2011 என்பதை இன்னும் பலர் 2010 என்றுதான் எழுதுகிறார்கள். அப்பப்பா! எவ்வளவு துரித கதியில் பறக்கின்றன நாட்கள். நேற்றுத்தான் சக்கரவர்த்தி தொடக்கநிலை ஆறு படித்ததுபோல் ஞாபகம். இப்போது இன்னும் மூன்று மாதங்களில் ஓ நிலைத் தேர்வு எழுதும் மாணவனாக நிற்கிறான். அப்பா ராகவன், அம்மா சுமங்கலி, கடைக்குட்டி சக்கரா என்கிற சக்கரவர்த்தி. டோர்செட் சாலையில்தான் வாசம். சக்கராவின் பெரியக்கா புவனா வீராசாமி சாலையில் […]
நட்பு அறுத்தல் இப்பொழுது நட்பு அறுத்தல் என்கிற முதல் தந்திரம் ஆரம்பமாகிறது. அதன் முதல் செய்யுள் பின்வருமாறு: காட்டில் சிங்கத்துக்கும் எருதுக்குமிடையே சிறப்பாக வளர்ந்து வந்த சிநேகத்தை, பேராசையும் போக்கிரித் தனமுமுள்ள ஒரு நரி நாசம் செய்தது. அது எப்படி என்று பார்ப்போம்: தெற்குப் பிரதேசத்தில், இந்திரலோகத்துக்கு ஈடாக மஹிளாரூப்யம் என்ற நகரம் ஒன்று உண்டு. அது சகல சுப லட்சணங்களும் பெற்றிருந்தது: பூதேவியின் கிரீடத்திலிருக்கும் சூடாமணி போல் சிறப்புற்றிருந்தது; கைலாசத்தில் முடி போன்ற ரூபத்துடன் இருந்தது. […]
தனிச்சுற்றுக்கு மட்டுமாய் வந்து கொண்டிருந்த ஒரு சிறுபத்திரிக்கையில் ரஞ்சனியின் நீண்ட கவிதை ஒன்று வந்திருந்தது. இதழ் அலுவலகத்திற்கு வந்த நாளில் அவளுடன் சக்திகணபதி என்றொருவர் தொலைபேசியில் பேசினார். அவளின் கவிதை பற்றி அவளுடன் விவாதிக்க விரும்புவதாகவும் முகவரி கொடுத்தால் வீட்டிற்கே நேரில் வருவதாகவும் சொன்னார். இவளுக்கு சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருந்தது. இதுவரைக்கும் இவளின் கவிதை பற்றி கடிதமோ ஒரு பாராட்டோ வந்ததில்லை. இந்த தமிழ்ச் சமூகம் கவிதை பற்றிய புரிதல் எதுவுமில்லாமல் வறட்சியாக இருப்பதாக நினைத்துக் […]
நாலு நாளாக நிலை கொள்ளாமல் தவித்தார் சங்கரன். மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது. ஒன்றுமில்லை. வழக்கமான விசாரிப்புகளுக்காக மகளிடம் தொலைபேசியில் பேசிய போது தொலைபேசியை எடுத்துப் பேசிய பேரனின் குரல், தாத்தா எப்படி இருக்கே என்ற அந்த மழலைக் குரல் தொடர்ந்து அவர் காதில் ரீங்காரமிட்டு ஈர்த்தது. பேரனைப் பற்றி பேசிப் பேசி வாய் ஓயவில்லை. போய் பார்த்து விடுவது என்று தீர்மானித்தார் சங்கரன். பேரனை பார்த்து விட்டுத் தான் மறு வேலை. மனைவி பாரு தயங்கினாள். இது […]
எஸ். அர்ஷியா அப்பாவுக்கும் எனக்குமிடையில் பாசத்தைத் தாண்டி நட்பு துளிர்விட்டது, எனது எட்டாவது வயதில்தான்! அப்போது அவர், தனது நாற்பதின் துவக்கத்தில் இருந்தார். அரசு வேலையை எழுதிக்கொடுத்துவிட்டு, சொந்தமாகத் தொழில் துவங்கும் முயற்சி யில், ஓடியபடி இருந்தார். கொஞ்சம் இறுக்கமான தருணம், அது. என்றாலும், சா¢யாக எட்டரை மணிக்கு இரவு உணவுக்காக எங்கிருந்தாலும் வீட்டுக்கு வந்துவிடுவார். அதை ஒரு வழக்கமாக வைத்திருந்தார். அப்பா, அம்மா, செல்வி அக்கா, சுந்தர் அண்ணா, நான் ஒன்றாகத்தான் இரவு உணவைச் சாப்பிடுவோம். […]
முகவுரை உலக அறிவின் சாரத்தையெல்லாம் ஒன்றாய்த் திரட்டி, ஐந்து விதமான தந்திரங்களைக் கொண்டு சிந்தையைக் கவரும் ஒரு சாஸ்திரத்தை விஷ்ணுசர்மன் வகுத்தான். இது எப்படி நிகழ்ந்தது என்று பார்ப்போம். தெற்குப் பிரதேசத்தில் மஹிளாரூப்யம் என்ற நகரம் ஒன்றிருக்கிறது. அதை அமரசக்தி என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் உலக அனுபவ சாஸ்திரத்தில் தேர்ச்சி மிகுந்தவன். வலிமை பொருந்திய வேந்தர்கள் பலர் அவனை முடி தாழ்த்தி வணங்குவார்கள். அப்படி வணங்குகையில் அவர்கள் அணிந்த மணி மகுடங்களில் பதித்த ரத்தினங்கள் […]
1. ஸ்கார்பரோ நூலகக் கிளையொன்றில் பன்மொழிப் பிரிவினில் தமிழ் நூல்களைத் தேடிக்கொண்டிருந்த பானுமதியின் கவனத்தை “பானு” என்ற வியப்புடன் கூடிய ஆண் குரலொன்று கலைத்துவிடவே குரல் வந்த திசையினை நோக்கித் திரும்பினாள். அவளால் நம்பவே முடியவேயில்லை. எதிரிலிருந்தவன் சேகரனேதான். எத்தனை வருடங்களுக்குப் பிறகு அவனை அவள் சந்திக்கின்றாள். குறைந்தது இருபத்தைந்து வருடங்களாகவாவதிருக்கும். காலம்தான் எவ்வளவு விரைவாக ஓடி விட்டது. நாட்டு நிலைமை காரணமாகப் புலம்பெயர்ந்து வந்தது நேற்றுத்தான் போலிருக்கிறது. அதற்குள் இத்தனை வருடங்கள் கழிந்தோடி விட்டனவா! வியப்பு […]
ப்ரிட்னி ஸ்பியர்ஸ் பாடிக்கொண்டிருந்தாள் எம்.டீவியில் “Bombastic love , So Fantastic ” என்று சத்தம் போட்டுக்கொண்டு., “அந்த வால்யூமத்தான் கொஞ்சம் கொறக்கிறது , உனக்கு என்ன காது செவிடா ? டீவி முன்னாலதான ஒக்காந்துருக்க? ” உள்ளேயிருந்து ஸ்வேதா இரைந்த சத்தம் அவனுக்கு கேட்கவேயில்லை. “Where I’m Completely yours and you are mine ” விறுவிறு வென வந்தவள் கையிலிருந்த ரிமோட்டை பிடுங்கி வால்யூமைக்குறைத்தாள். ” ஏன் நல்லாத்தான பாட்றா ?, கேக்கவிட்டா […]
கிளிப்பச்சை நிறத்தில் அந்த வாசனைக் குப்பி. கண் கொட்டாமல் பார்த்தால் ஒரு கிளி நெல் கொரிப்பதுபோல் இருக்கும். அத்தனை அழகு. ஒப்பனை மேசையில் அருகில் இருக்கும் உயரமான அலமாரித் தட்டில்தான் சதாசிவம் தன் சொந்த உபயோகப் பொருள்களை வைத்திருப்பார். அதில் அந்த வாசனைக் குப்பியும் ஒன்று. மகள் லதாவுக்கோ மனைவி சரோவிற்கோ அது எட்டாது. எட்டவேண்டிய அவசியமுமில்லை. சதாசிவம் வீராசாமி சாலையில்தான் வசிக்கிறார். சனி ஞாயிறுகளில் வெளியே செல்வதைத் தவிர்ப்பார். வார நாட்களில் ஏதாவது ஒரு நாளில் […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “நமது குடியரசு மெய்யான தில்லை ! ஆதிக்க அரசாங்கத்துக்கும் குடியரசுக்கும் இடையே முரண்பாடு இல்லை. எல்லாவித அரசாட்சி முறைகளும் ஆதிக்கத் தன்மை கொண்டவைகளே ! எத்தனை அளவுக்குக் குடியரசு உயர்ந்ததாய் உள்ளதோ அத்தனை அளவுக்கு ஆதிக்க வன்மையும் மிகையாய் உள்ளது. பொதுமக்களும் அவ்விதக் குடியரசுக்குப் பின்னணியாக இருந்தால், ஸார் (Tzar) மன்னர் அதிகாரத்தை விட இன்னும் கோரமாக ஆதிக்கம் ஆட்சி […]