பூர்த்தி விடிந்தபிறகு தான் கரப்புகள் எவ்வளவு அழிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரியவந்தது. கிட்டத்தட்ட முழு இனப் படுகொலை. அரசாங்கத்தில் வெவ்வேறு நல்ல பதவிகளில் இருக்கும் மூத்த, நிறம் மங்கிய கருப்புகள் அரண்மனை வாசலில் பழைய மோட்டார் வாகனங்களின் சக்கரங்கள் முன்னும் பின்னும் நகர நசுக்கப்பட்டு ரத்தவாடையோடும் தசை நாற்றத்தோடும் தெரு முழுக்க அங்கங்கே சாணகம் போல் ஒட்டியிருந்தன. வீடுகளுக்குள் இருந்து இழுத்து வரப்பட்ட கரப்பு இனப் பெண்கள் விஷவாயு சுவாசிக்க வைக்கப்பட்டு உடல் முறுக்கி இறந்தன. பள்ளிகளுக்குள் […]
வானம்பாடியின் பயோ தொலைபேசி உள்ளங்கையில் அழைத்தது. காலை நான்கு மணிக்கு குழலனின் அழைப்பு அது. அவனோடு பேசாமல் இரண்டு நாட்கள் அவளுக்கும் குயிலிக்கும் கடந்திருக்கின்றன. எல்லாம் குயிலியும் வானம்பாடியும் ஒரு வாரமாகக் கட்டில் பகிர்ந்து கொண்டதை குழலன் பகடி செய்த பிறகுதான். வானம்பாடியின் கட்டிலில் சிறு ஒலி ஏதோ வந்ததில் தொடங்கியது இது. ராத்திரி முழுக்க அவள் புரண்டு படுக்கும் போது வந்த ஒலி என்று ஆறடி தூரத்தில் அடுத்த கட்டிலில் துயின்றிருந்த குயலி சொல்ல, […]
இருக்கட்டு;ங்கய்யா…பன்னெண்டு மணி வரைக்குமாச்சும் எரியட்டும்..;பிறகு அணைச்சிக்கிடுவோம்…- சிரித்துக் கொண்டே சொன்னார் லட்சுமணன். நம்ம வீடுகள்னா இப்டி பகல்ல லைட்டுப் போடுவமா? இந்த எடத்துலெ எவ்வளவு வெளிச்சம் இருக்கு…அது போதும்…அணைங்க… கேட்கமாட்டீங்களே… என்றவாறே விளக்கை அமர்;த்தினார் லட்சுமணன். எந்தமாதிரியான சூழ்நிலைல உட்கார்ந்திருக்கோம்ங்கிறதைவிட, எப்படி வேலைசெய்கிறோம்ங்கிறதுதானே முக்கியம் லெட்சுமணன்? அது உள்ளதுதானுங்க…ஆனாலும் பொதுமக்கள் வந்து போகுற இடமில்லீங்களா? பார்வையா இருந்தாத்தானே மதிப்பா இருக்கும்… அவுரு சொல்றதும் சரிதான சார்…நீங்க ரொம்ப சிம்பிள் சார்…அப்படியிருக்கக் கூடாது…ஆபீசுக்குன்னு உள்ள ஸ்டேட்டசை மெயின்டெய்ன் பண்ணத்தான் […]
( 6 ) அய்யா, இங்கே சொருகட்டுங்களா…? – கேட்டவாறே எரிந்து கொண்டிருக்கும் பத்தியைக் கையில் வைத்துக் கொண்டு இடம் பார்த்துக் கொண்டிருந்தார் பியூன் லட்சுமணன். இந்த பாருங்க லட்சுமணன், நான் உங்களுக்குப் பலமுறை சொல்லிட்டேன்…என்னை இப்படி ஐயா கொய்யான்னெல்லாம் கூப்பிடாதீங்கன்னு…கேட்க மாட்டேங்கிறீங்க. சாதாரணமா சார்ன்னே கூப்பிடுங்கன்னு சொன்னா திரும்பத் திரும்ப இப்டியே கூப்பிடுறீங்களே? எனக்கு ரொம்பக் கூச்சமா இருக்கு… ஐயா, உங்களை மாதிரி மனுசாளைக் கூப்பிடாம வேறே யாரைக் கூப்பிடச் சொல்றீங்க? நல்ல மனசுள்ளவாளைத்தான் மனசோட […]
சகல இன சஞ்சீவனி ஏற்றுமதிக்காக உருவாக்கி வாங்குவார் இல்லாமல் போன கண்கவரும் தகரக் குடுவைகள் கோகோ பானக் குடுவைகள் போல் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மாட்டு ஈக்களின் இறகுகளும், கால்களுமாக மிதந்து கொண்டிருக்கும் திரவம் கறுப்பு வண்டல் கீழே தேங்கியிருக்க மேலே அழுக்கு நெடியும் நிறமுமாக காய்ச்சிக் கிளறப்பட்டபடி எங்கணும் நிறைந்திருந்தது. சில குடுவைகளில் இருந்து திரவம் கசிந்து அவை வைத்திருக்கும் இடம் முழுக்க பாதாளச் சாக்கடை வாடை தூக்கலாக மேலெழும்பிக் கொண்டிருந்தது. மெல்ல ஊரும் வாகனங்கள் […]
ரயில் கிளம்ப இன்னும் பத்து நிமிடம் இருக்கிறது என்பதை உணர்ந்த இவன் வண்டியை விட்டுக் கீழே இறங்கினான். அந்தப் பையனோடு தனித்தே நின்று பேசுவதுதான் சரியாக இருக்கும் என்று தோன்றியது. உங்க பேரு என்ன தம்பி? மம்மது சார்… அவன் சத்தமாகக் கூறியதைக் கேட்ட இவன், மெதுவா…மெதுவா…பொது இடங்கள்ல சத்தமில்லாமப் பேசணும்…என்றான் அவனைப் பார்த்து. சரி சார்…என்று தலையாட்டிய அவன் ‘எங்கப்பாவுக்குச் சேர வேண்டிய பணமெல்லாம் கொடுத்துட்டீங்களா சார்…? – என்றான் அடுத்தபடியாக. அவன் ஏதோ பிரச்னையோடுதான் […]
கோகர்மலை நாடு அமைதியாக இருந்தது. சகல இன சஞ்சீவனி எந்தத் தெருவிலும் யார் வீட்டிலும் உண்டாக்கப்படவில்லை. ஈக்களும். மாட்டு ஈக்களான உண்ணிகளும் சுவர்களில் ஈஷியிருந்தன. பறக்கத் தெரியாதவை போல் அவை சிறகுகளை மெல்லிய ரரரரர ஒலியெழ அதிர வைத்து செவிப்புலன் மூலம் சூழும் போதையில் அமிழ்ந்திருந்தன. தெருவில் சாக்கடை போல் சகல இன சஞ்சீவனியை பிரயோஜனமற்றது என்று பலரும் பானைகளில் ஏற்றி உடைத்து புளிவாடை எங்கும் மூக்கில் குத்த, பாதை வழுக்கச் செய்திருந்தனர். கூட்டம் கூட்டமாக […]
சகல இன சஞ்சீவனி எங்களுக்கு வேண்டாம். அதைக் கொடுத்த பெருந்தேளரசரும் எங்களுக்கு வேண்டாம். காலையில் இருந்து நடுராத்திரி வரை சாரிசாரியாகச் சகல இனங்களும் தேளரண்மனை முன் கோஷம் முழங்கின. மற்ற இனங்களை விடவும் மும்முரமாகத் தேள் இனம் இந்த அரசு எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டது. கரடியின் தலைமையில் துயிலரங்கத்துக்கு முன் பத்து பன்றிகளும், இருபது கழுதைகளும் பத்து நாய்களும் கோஷம் முழக்கி கற்களை விட்டெறிந்தன. கரடியின் பொதுக்கூட்டச் சொற்பொழிவில் இருந்து – குழலன் என்ற […]
பஸ்ஸில் அமர்ந்த கையோடு பையில் வைத்திருந்த சிறு நோட்புக்கை எடுத்து அன்று அலுவலகம் சென்று செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன என்று யோசித்து எழுத ஆரம்பித்தான். தனது இருப்பின் தன்மையில்தான் அதன் பொறுப்புணர்ச்சியில்தான் அலுவலகத்தின் சீரான இயக்கமே உள்ளதாய்த் தோன்றியது. சற்றே நெகிழ விட்டால் ஒரேயடியாய் நெகிழ்ந்து தளர்ந்து முடமாகி ஸ்தம்பித்து விடுகிறது. தான் இருக்கிறோம் என்கிற நம்பிக்கையில்தான் அலுவலர் நிம்மதியாய் முகாம் செல்கிறார். திட்டப்பணிகளைக் கவனமாய்க் கண்காணிக்க முடிகிறது. அந்த வகையில் தனது பங்கு மிக […]
“உங்க ஆபீஸர் பேசினார். வந்தவுடனே உங்களைப் பேசச் சொன்னார்…” “வண்டி பஞ்சராயிருக்கு. நல்ல வேளை அவனை விட்டுட்டுத் திரும்புறபோதுதான் பஞ்சர். இல்லைன்னா அவன் ஸ்கூல் போறதும் லேட்டாயிருக்கும்…” என்றவாறே மெதுவாய் வண்டியை உருட்டி வந்து வராண்டாவில் ஸ்டான்ட் போட்டு நிறுத்தினான். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் தள்ளிக் கொண்டு வந்ததில் மூச்சிரைத்தது. “வழியிலே ஏதாச்சும் ஒர்க் ஷாப்புல விட வேண்டிதானே…?” “ஏழு மணிக்கு எந்த ஒர்க் ஷாப் திறந்து வச்சிருக்கான்…? ஒன்பதாகும்…பாஸ்கரன்ட்டத்தான் விடணும்…” அன்று பஸ்ஸில்தான் […]