அக்கரை…. இச்சை….!

இனிமேல் இந்தத் திருநெல்வேலி ஊருக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இருக்காதோ.? எத்தனை ஆசையோடு வந்தாள் விமலா. உள்ளத்தில் அலைபாயும் ஒரேக் கேள்வியோடு பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டு மதுரை செல்லும் பஸ்ஸுக்காகக் காத்திருந்தாள் .அவளது நினைவுகள் மேற்கொண்டு நகர மறுத்து நேற்றிரவு நடந்த…

தில்லையில் கள்ள உள்ளம்…

(இதைப் படித்தபின் எவரது மனமாவது புண்படுமாயின் தயைகூர்ந்து மன்னிக்கவும்..) மனசு பூரா...எதிர்பார்ப்போடு அம்மாவின் வருகைக்காகக் காத்திருந்தேன். நீண்ட மாதங்கள் கழித்து இப்போது தான் மிகவும் பிரயத்தனப்பட்டு ஒரு வழியா....என் தொல்லை தாங்காமல் என் வீட்டுக்கு வர அம்மாவை பெங்களூரில் இருந்து சிதம்பரத்திற்கு…

மணம்… தாங்கும்…..பூக்கூடை…! ஹைக்கூ:

மணம் கரைந்து.... உலர்ந்து உதிர்ந்தது ... செடியில்...பறிக்காத மல்லிகை..! ------------------------------------------ சாமந்தி....முகத்தில்...சந்தோஷம்.. மணத்தாலும்...விதவை தானே... மல்லிகை...! ----------------------------------------- இரும்பென.... கருவண்டு.. காந்தமாக... மகரந்தம்.... பாவம்....தாமரை...! --------------------------------------------- சேற்றில் நான்...! வேலியாய்..நீ ..! நான் மட்டும் பூஜைக்கு..! தாமரை..! ------------------------------------------------ பூக்காட்டில் பாம்பு...!…

காய்க்காத மரம்….

அதோ....அங்க ஒரு பெரிய மாமரம் தெரியுதே ..அந்த வீடு தான்..அங்க போய்... நிறுத்துங்க. வித்யா .ஆட்டோக்காரரிடம் அவள் வீட்டை அடையாளம் காட்டிவிட்டு இறங்கத் தயாராகிறாள். இதோ.......இந்த மரம் தான்... கந்தசாமி...! .அப்போ.....நீ எப்போ.. வருவியோ..என்ன செய்வியோ எனக்குத் தெரியாது...நாளைக்கு இந்த மரம் இங்க இருக்கக் கூடாது...இது காய்க்காத மரம்....வெட்டிப்போடு... ஆமா....…

கானல் நீர்..!

டிடிங்....டிடிங்.....டிடிங் ....அழைப்பு மணி அடித்தது.... யாராயிருக்கும்.....? மனதின் கேள்வியோடு...கதவைத் திறந்தேன்... நீல வண்ண சுடிதாரில்..அழகி....பத்மா நின்று கொண்டிருந்தாள்...ஆனால்....அவள் முகம்....வழக்கத்துக்கு மாறாக வாடி இருந்தது.... இதே பிளாட் ல் ஐந்தாவது மாடியில் வசிக்கும் பத்மா...இந்த நேரத்தில் எதற்காக வந்திருப்பாள்.? . அந்த அடுக்குமாடி…

அச்சாணி…

அச்சாணி... ஜெயஸ்ரீ ஷங்கர், சிதம்பரம். ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு செல்ல சார்மினார் எக்ஸ்பிரசில் ஏறி அமர்ந்து ..வண்டியும் கிளம்பியாச்சு... பிரயாணம் முன்னோக்கி நகர....மனசு மட்டும் லக்ஷ்மி குடும்பத்தை சுற்றி பின்னோக்கி சென்றது .பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னால்....நடந்நிகழ்ச்சிதான்.....இருந்தாலும்...இன்று நினைத்தால்......கூட....எல்லாம்.... நேற்று நடந்தது போல்…

அதையும் தாண்டிப் புனிதமானது…

மெல்லிய குளிர் பரவிய அறையில், டிக்... டிக்... டிக்... கடிகார முள் நகரும் சப்தம் இரவின் அமைதியை கிழித்து பயமுறுத்திக் கொண்டிருந்தது. என்றும் போல விமலாவிற்கு தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்துத் தூக்கத்திடம் தோற்றுப் போனவளாக... வயதாக... வயதாக தூக்கம்…

ஆலமும் போதிக்கும்….!

போகும் வழியில் புரிந்து போனது.. சமுதாயம்..ஜனநாயகம்.. சமத்துவம்..கற்றுத்தந்தது.. வழியிலொரு ஆலமரம்..! சுமை தாங்கும் நிம்மதியில் தான்.. எத்தனை விழுதுத்தூண்கள்..! மரத்தின் விழுதுகளா...? அத்தனையும் மதவிழுதுகள்... தாங்குகிறது இந்தியா..! நடுப்பரப்பை பிடிக்கவென்றே... பறவையாய் விரித்தது கிளைகள்.. அத்தனையும் சாதிக்கிளைகள்... விழுதுகளை தாங்குமா....கிளைகள்..? மரத்தின்…

இப்படியும்… பேசலாம்…..!

உலகம் என்பது என்னுள் சுழல்வது.... ------------------------------- என்னை ... அறியவா... எனக்கு இந்தப் பிறவி..! ------------------------------ இந்த உடல் .. வாடகை வீடு... காலியாகி விடும்.......! உயிரே...புரிந்துகொள்.. இப்படிக்கு.... ஆன்மா..! ---------------------------------- விதை தரும்.... விருக்ஷமும்... மண்ணுக்குள் அன்று.... விதையாகத் தான்..!…

தென்றலின் போர்க்கொடி…

பொற்கொடியாய்... நினைவில் நின்ற தென்றல்... இன்று....தானே....புயலாய் மாறி.... உயர்த்தியது  போர்க்கொடி...! உன் ஆனந்தத் தாண்டவத்தில்....! உன்னோடு சேர்ந்து உன்னை எதிர்த்து... தலைவிரித்தாடி... கைமுறித்தது...தென்னை... முக்கி முனகி ஆடும்போதே... ஒடிந்து விழுந்தது முருங்கை... சளைக்காமல் ஆடியும்... முடிவில் பல கிளைகளைத் தவறவிட்டது அரசு..! தண்டோடு மடங்கியது…