கிம்பர்லிகளைக் காணவில்லை

நான் தேடியது அன்று திடீரென்று கிடைத்தது. நைந்த என் பழைய கால் சட்டை. வார் (பட்டை) வைத்து தைத்தது. வால்கள் அறுந்து கிடக்கின்றன. ஒரு தீபாவளிக்கு அது புது ஆடை. எண்ணெய்ப்பிசுக்குடன் அதற்குள் இருந்து அன்று ஊசி வெடி வெடித்தது இன்னும்…

தோரணங்கள் ஆடிக்கொண்டிருக்கட்டும்.

  மூவர்ணம் நட்டு நீருற்றி 66 ஆண்டுகளுக்குப்பின்னும் தெரிந்தது அது நம் கண்ணீர் என்று. போராடிய தலைவர்களின் தியாகங்கள் எல்லாம் சந்தையில் பழைய பேப்பர்கள் போவது போல் கூட‌ போவதில்லை கிலோவுக்கு என்ன விலை? அவர்கள் ரத்தமும் சதையும் இன்று கருப்புப்பண…

நடுங்கும் என் கரங்கள்…

===========================================ருத்ரா வெயில் காய்ந்து கொண்டிருந்தது காதலர்களின் நிலவு போல். கந்தல் துணி நடுவானில் சுருட்டிக்கிடந்தாலும் அதற்குள் இருக்கும் சல்லடைக்கண்கள் எல்லாம் கனவு ஊசிகளின் குத்தல்கள் குடைச்சல்கள். வேப்பமரத்தோப்பின் கோடைகால சருகுகளின் குவியலில் காலடிகள் ஊரும் ஓசை. ரயில் எஞ்சின்கள் தட தடத்து…

மாஞ்சோலை மலைமேட்டில்…..

ருத்ரா தீக்கொளுந்து போல‌ தேயிலைக்கொளுந்து துளிர் பிடிச்சு நிற்கையிலே அங்கே ஓம் மனசுக்குள்ளே துடுக்குத்தனமாய் உடுக்கடிக்கும் என் உள் மனசு கேக்கலையா சொல்லு புள்ளே பூவாயி. கேக்கத்தவங்கெடந்து என் நெஞ்சுக்குள்ள தேடிக்கிட்டு கெடக்கேனே தெரியலையா? ஊர்க்காட்டு சாஸ்தாவும் ஊமையாக நிக்கிறாரு. தாம்ரவர்ணி…

நசுங்கிய பித்தளைக்குழல்

அந்த சுவற்றின் நெற்றியைப்பார்க்கும் போதெல்லாம் என் மனசுரங்கத்தில் நீர் கசியும். கண்கள் இன்றி இமைகள் நனையாமல் கண்ணீரின் விழுதுகள் பாம்பு நாக்குகள் போல் கீழிறங்கும். ஆனால் அது அழுகை அல்ல. அவலம் இல்லை புலம்பலின் ஊதுவ‌த்திப்புகை சுருள்கள் இல்லை. ஆனாலும் அந்த…

உள்ளே ஒரு வெள்ள‌ம்.

உடைக்கவில்லை நொறுக்கவில்லை உள்ளே நுழைந்தேன். துண்டு துண்டாய் உள்ளே வ‌ந்தேன் அப்புற‌ம் ஒட்டிக்கொண்டேன். ச‌துர‌க‌ற்க‌ளில் குளித்து விள‌யாடினேன். க‌ன்ன‌ங்க‌ளில் ம‌ஞ்ச‌ள் பூசினேன். மாட‌த்து காமாட்சிவிள‌க்கின் எண்ணெய்க்குள‌த்தில் தாம‌ரைக‌ள் பூத்தேன் காண்டாமிருக‌ங்க‌ள் க‌ன்றுக்குட்டிக‌ள் மயில் தோகை அசைவுக‌ள் எல்லாம் நிழ‌ல்க‌ளில் வ‌ந்த‌ன‌. ப‌க்கத்தில்…
ஒலியின் க‌ல்வெட்டுக‌ள்

ஒலியின் க‌ல்வெட்டுக‌ள்

  (இன்னிசைச்செல்வ‌ர் டி.எம்.ஸ் அவ‌ர்க‌ள் ம‌றைவிற்கு அஞ்ச‌லி) குர‌ல் த‌ந்து குரல் மூலம் முக‌ம் த‌ந்து இம்ம‌க்க‌ளை ஆட்சி செய்தீர். முருக‌ன் எனும் உந்து விசை அத்த‌னையும் உன்னிட‌ம் தேனின் ம‌ழை. "அன்ன‌ம் இட்ட‌ வீட்டிலே" அந்த‌ முத‌ல் பாட்டிலிருந்து "க‌ணீர்"க்குர‌ல்…

“பொன்னாத்தா”

  எம்புட்டு உசுரு ஓம் மேலெ. ஒனக்கு அது புரியாது. பூப்போட்ட ஏங் கண்டாங்கி பூதோறும் தீப்பிடிக்கும் நான் பொசுங்க‌ பாக்க‌லையா கொண்ட‌யிலெ செருகிவெச்சேன் ச‌ம்ப‌க‌ப்பூங் கோத்தோட‌. ஓ(ன்) நென‌ப்புக் கொத்து தான் என்னெ இப்போ கொத்துக்க‌ரி போடுத‌ய்யா. ஓட‌ ஓட‌…

எச‌க்கிய‌ம்ம‌ன்

  "எலெ சொள்ள மாடா என்னத்தலெ சொல்லுதது? ஓம் மாடு ஏ(ம்) வயப்பக்கம் தாம்லெ வாய வைய்க்கிது. பெரவு ஏங்கிட்ட எதும் சொல்லப்டாதுலெ. ஓம் மாடே கசாப்புக்கு போட்டுரலாமா? இல்ல‌ ஓம் கால ஒடிச்சுடலாமா?" அவ‌ர் உறுமி விட்டு சென்றார். சொள்ள‌மாட‌னுக்கு…

“ஓலைக்கிளிக‌ள்” (அன்னைய‌ர் தின‌ம்)….

  அம்மா உனக்கு ஒரு பரிசு வாங்க‌ கடை கடையாய் ஏறி இறங்கினேன். என்ன வாங்குவது? இறுதியாய் கிரிஸ்டலில் இதயம் வாங்கினேன். உள்ளே பச்சை நரம்புகளில் சிவப்புக்கடல். அந்த‌ உன் கருப்பையை ஈரம் சொட்ட சொட்ட‌ என் கைப்பையில் நான் திணித்துக்கொண்டேன்.…