Posted inகவிதைகள்
ஆன்மாவின் உடைகள்..:_
வெள்ளுடை தேவதைகளையும் செவ்வுடை சாமிகளையும் மஞ்சளுடை மாட்சிமைகளையும் பச்சை உடை பகைமைகளையும் படிமங்களாய்ப் புதைத்தவற்றை வர்ணாசிர தர்மமாய் வெளியேற்றும் ப்ரயத்னத்தில்.. ப்ரக்ஞையோடு போராடித் தோற்கிறேன்.. விளையாட்டையும் வினையாக்கி வெடி வெடித்துத் தீர்க்கிறேன்.. எப்போது உணர்வேன் வண்ணங்களை.., அழுக்கேறாத ஆன்மாவின் உடைகளாய்..