மொகஞ்சதாரோ 

மனிதர்கள்  சந்தித்துக்கொள்ளும்  பாதையில்  சுவர்ண பட்சிகள்  வருவதில்லை. வறண்டு போன  நதிகளின் கண்ணீர்  கதையை  அவைகள் கேட்ட பிறகு  மனித வாடை  துர்நாற்றம் வீசுவதாக  புகார் கூறுகின்றன.  இடிந்து போன  அரண்மனையின்  கடைசி செங்கல்லில்தான்  பட்சி வளர்த்த கடைசி மன்னனின்  சமாதி…
கவிதை

கவிதை

குடைபிடி ஞாபகங்களில்  எச்சரிக்கின்றது  வயோதிகம்.  குழந்தையின்  மழலைப்போல  போய்விடுகின்றது  கால்கள்.  குளிரில்  அணைத்தப்படி செல்லும்  இளசுகளின்  உரசலில்  என் வாலிபத்தின்  விலாச முத்திரை தெரியும்.  எங்கோ  போய்விட்ட  அறுந்த  காத்தாடியின்  நூலை பிடிக்க  அலையும்  மனசு.  பள்ளிக்கூட  மணி ஓசையில்  மகிழ்ந்து…
விலாச குறிப்பு

விலாச குறிப்பு

இறக்கிவிட்ட ரயில்  வெகுதூரம் சென்றுவிட்டது  சில  ஞாபக விலாசங்களோடு.  "ஏதோ நினைவுகள் மலருதே...," பாடிய  குருட்டு பிச்சைக்காரனை  கைத்தடியில்  அழைத்து செல்லும்  சிறுமி . கடலை பர்பி  கைக்குட்டை  விற்று செல்லும்  நொண்டி அண்ணன்.  கைத்தட்டி  உரிமையோடு  காசு கேட்கும்  அனார்…
எழுத்தாளனின் முகவரி

எழுத்தாளனின் முகவரி

முகவரி கேட்டு  அலைந்துக் கொண்டிருந்தார்  தபால்காரர்.  அவரா என்று எளனமாக பார்த்தான்  சந்தைக்காரன்.  அதோ மூலையிலுள்ள  புத்தகக் கடையில் தேடுங்கள் என்றான் மார்வாடி பெண்ணின் மூக்குத்தியை  எடைப்போட்டுக் கொண்டே.  அவரா  நேத்து தான்  அந்த மூலை பழைய  புத்தகக்கட்டை தேடிக்கொண்டிருந்தார்.  நாலு …
நகுலன் பூனைகள்

நகுலன் பூனைகள்

நகுலன்  வீதிகளை மறந்து  வீட்டையும் மறந்த கலைஞன். விலாசம் தெரியா காட்டில் அலையும் தத்துவக்கவி.  கவி, தொலை தூரத்து  பறவைகளின் பாடல் கேட்பதாக  சொல்லும் வயோதிகன்.  பூதக்கண்ணாடிகளை  இலக்கிய பூச்சோலையில்  விட்ட கவிஞன்.  ராமசந்திரன்  வந்து விட்டான என  கேட்டுக்கொண்டே இருக்கின்றார். …
ரகசியம்

ரகசியம்

"ஒன்றுமில்லை ", தெரிந்த பிறகும்  ஒன்றை பற்றிக்கொண்டு வாழ்தல், ஒன்றைத்தான்.  அது எது என்ற தேடுதல்  கடவுளைச்சுற்றியோ,  இஸங்களை சுற்றியோ,  இலக்கியத்தை சுற்றியோ, இசையை சுற்றியோ,  வனங்களை சுற்றியோ,  போர்களை சுற்றியோ எது எது என  அறிதலின் பொருட்டு  வாழ்க்கை நகரும் …

மீளா துயர்

புரண்டு புரண்டு படுத்தார்  தர்மகர்த்தா.  தூக்கம் வரவில்லை,  துக்கம் தொண்டையை அடைத்தது.  யாரிடம் சொல்லி அழுவது.  மனிதர்களிடமா. .., பிரயோசனமில்லை.  அந்த  அனந்த பூரிஸ்வரிடமா? அவரை தான்  நேற்றே தூக்கியாச்சே!! இனி  யாரிடம் சொல்லி அழ.  காலையில்  ஓதுவார் வந்தார்  தொங்கிப்போன…
மெய்யழகன்- தமிழின் யதார்த்த வாத படம்

மெய்யழகன்- தமிழின் யதார்த்த வாத படம்

படம் முழுக்க ஒரு வித பாச உணர்வையும்,  சொந்த ஊர்(தஞ்சாவூர்), சொந்த வீடு போன்ற,  வாழ்வோடு பின்னிய சிக்கல் நிறைந்த மனிதர்களின்  மன உணர்வுகளை வைத்து,  இரண்டு நபர்களின் மேல், கதையின் பாரத்தைப்போட்டு,  வண்டியை இழுத்துச்செல்கின்றார் டைரக்டர்.  திஜாவின் கதைகளில் வரும்…
விலாசமில்லா கடிதங்கள் விலகி போன மேகங்கள்

விலாசமில்லா கடிதங்கள் விலகி போன மேகங்கள்

விலாசமில்லா கடிதங்கள் விலகி போன மேகங்கள்.  --------‐--------------------------------- தர்மராஜா கோவில்  மைதானத்தின்  வடக்கு ஒரத்தில்  கூத்துக்கொட்டகை எப்போதும்  நிற்கும், சித்திரை மாதத்தில்.  மணி மாமா திரெளபதி  ஆட, வர்ண புடவைகளை  வெய்யிலில் உலர்த்துவார்  வாயில் கறீம் பீடியோடு . கட்டியங்காரனுக்கு  பிஸ்மில்லா…
தவம்

தவம்

ஜெயானந்தன் நடைப்பயணத்தில்  எதிர் திசையில் மழலை ஒன்று  கையசைத்து  மழலை பள்ளிக்கு தவழ்ந்தது.   திரும்பிப்பார்க்கையில்  ரோஜா மொட்டவிழ்த்து  புன்னகை பூத்தது. முதல் மாடியில்  சாருகேசி  வீணை வருடினாள். மூன்றாம் மாடியில்  மாலி புல்லாங்குழல்  தவழ்ந்தது.  நேற்று சென்ற  அதே பூங்காவிற்கு சென்றேன்.…