வாசிக்கும் கவிதை

This entry is part 1 of 25 in the series 27 ஏப்ரல் 2014

அம்பல் முருகன் சுப்பராயன் =============== நேற்று முளைத்த வார்த்தைகளால் சமைத்த கவிதை.. என் மனைவிக்கு உவர்ப்பானது.. மகளுக்கு ரீங்கார இசையானது.. அண்ணனுக்கு கசப்பானது.. அண்ணிக்கு காரமானது.. ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தாயிக்கு மணம் தந்தது.. நண்பனுக்கு இனித்தது.. தோழியின் கண்கள் கசிந்தது.. மண்ணுக்கு உரமானது..  

பிறன்மனைபோகும் பேதை

This entry is part 1 of 25 in the series 27 ஏப்ரல் 2014

  பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்) என்னோடு வந்திருக்கும் நீ எனக்காக வந்தாயா? எனக்காகவும் வந்தாயா? மேடையென்றால் போதும் மின்னிக்கொண்டு வந்துவிடுகிறாய் வெளிச்சத்தில் மின்னும் ஆசை உன்னோடு பிறந்தது கழுத்தை மாற்றுவதும் கைகளைத்தேடுவதும் உன் கைவந்தகலை யாருடனும் போவதற்கும் யார்வீட்டுக்கும் போவதற்கும் நீ தயார் ஒருவீட்டில் வாழ்வதென்பதும் ஒருவரோடு வாழ்வதென்பதும் உன் கையிலில்லை சிலர்மட்டும்தான் உன்னைக் கண்ணியப்படுத்துகிறார்கள் பெரும்பாலும் கலங்கப்படுத்துகிறார்கள் பெட்டிப்பாம்பாய் இருக்கும் உன்னால் பெரும்பயன் ஏதுமில்லை பெறும்பயனும் ஏதுமில்லை ஆதலால் உன்னை அனுப்பிவைத்து அழகுபார்க்கிறார்கள் பெருமைப்படுகிறார்கள் பெருமைப்படுத்துகிறார்கள் […]

புள்ளின்வாய்கீண்டான்

This entry is part 1 of 25 in the series 27 ஏப்ரல் 2014

வளவ. துரையன் புள்ளின்வாய்கீண்டானைப்பொல்லாஅரக்கனைக் கிள்ளிக்களைந்தானைக்கீர்த்திமைபாடிப்போய் பிள்ளைகளெல்லாரும்பாவைக்களம்புக்கார் வெள்ளிஎழுந்துவியாழமுறங்கிற்று புள்ளுஞ்சிலம்பினகாண்போதரிக்கண்ணினாய் குள்ளக்குளிரக்குடைந்துநீராடாதே பள்ளிக்கிடத்தியோபாவாய்நீநன்னாளால் கள்ளந்தவிர்ந்துகலந்தேலோரெம்பாவாய். இஃதுஆண்டாள்நாச்சியார்அருளிச்செய்ததிருப்பாவையின்பதின்மூன்றாம்பாசுரம். இப்பாசுரத்தில்போதரிக்கண்ணினாய்’ என்றுகூப்பிடுவதிலிருந்துதன்கண்ணழகைக்கொண்டுகர்வம்கொண்டும்கிருஷ்ணன்தான்நம்மைத்தேடிவரவேண்டுமேதவிரநான்அவனைத்தேடிச்செல்லவேண்டியதில்லைஎன்றும்உள்ளேகிடப்பவளைஎழுப்புகிறார்கள். கடந்தபதின்மூன்றாம்பாசுரத்தில்  ’மனத்துக்கினியான்என்றுஇராமன்பெருமைபாடினீர்களே’என்றுஅவள்கேட்கிறாள். உடனேஅவர்கள்முன்பு’இராமனையும்சொன்னோம்; கண்ணனையும்சொன்னோம்இப்போதுஇருவரையும்சேர்த்துப்பாடுகிறோம்’என்கிறார்கள். மேலும்கண்ணனும்இராமனும்ஒன்றுதானே? யசோதைகண்ணனைஅழைக்கையில்இராமனைக்கூப்பிடுவதுபோல்; ”வருகவருகவருகவிங்கேவாமனநம்பீ வருகவிங்கேகரியகுழல்செயவாய்முகத்தென் காகுத்தநம்பீவருக’              என்றுதானேஅழைக்கிறாள். ஆயர்சிறுமிகள்  தங்கள்சிற்றிலைக்கண்ணன்சிதைக்கவருகையில், “சீதைவாயமுதம்உண்டாய்எங்கள்சிற்றில்சிதையேல்”  என்றுதானேஇராமன் பெயர்சொல்லிவேண்டுகிறார்கள். பொய்கையில்வஸ்திராபகரணம்செய்தபோதுகோபியர்கள் “இரக்கமேன்ஒன்றும்இலாதாய் இலங்கைஅழித்தபிரானே’  என்றுதானேமுறையிடுகிறார்கள். எனவேநாம்இருவரையும்இணைத்துப்பாடுவோம்எனஎண்ணுகிறார்கள். அதனால்தங்கள்குலதெய்வமானகண்ணனைமுதலில் ‘புள்ளின்வாய்கீண்டான்’ என்கிறார்கள். இங்குகொக்குவடிவில்வந்தஅசுரனின்கதைபேசப்படுகிறது. கம்சனால்ஏவப்பட்டபகன்எனும்அசுரன்கொக்கின்வடிவம்எடுத்துக்கண்ணனைவிழுங்கவந்தான். கண்ணன்அதன்வாயைக்கிழித்துஅவனைமாய்த்தான்.  பெரியாழ்வாரும்இதை, ‘பள்ளத்தில்மேயும்பறவையுருக் கொண்டு கள்ள அசுரன் வருவானைத் தான் கண்டு புள்ளிதுவென்று பொதுக்கோ வாய் கீண்டிட்ட’ என்று அருளிச் செய்வார். பொதுக்கோ […]

வளையம்

This entry is part 1 of 25 in the series 27 ஏப்ரல் 2014

  சிறகு இரவிச்சந்திரன். பால்ய சிநேகிதன் சாரதிதான் சொன்னான்: “ நம்ம கூட படிச்சானே கண்ணன்? அவன் ரொம்ப மோசமான நிலையிலே இருக்கானாம். “ என் நினைவுகள் தன் கோப்புகளைப் புரட்ட ஆரம்பித்தது. சட்டென்று என் நினைவுக்கு வரவில்லை கண்ணன் என்பதை என் முகம் காட்டிக் கொடுத்தது. “ என்னடா முழிக்கறே? நம்ப கண்ணண்டா! பள்ளியிலே படிக்கும்போதே பத்து ரூபாய் செலவுக்கு எடுத்திட்டு வருவானே! அவன்டா!” இப்போது பளிச்சென்று அவன் முகம் ஞாபகத்திற்கு வந்தது. கண்ணன் கொஞ்சம் […]

நீங்காத நினைவுகள் – 43

This entry is part 1 of 25 in the series 27 ஏப்ரல் 2014

ஜோதிர்லதா கிரிஜா அமரர்களாகிவிட்ட அற்புதமான பெண் எழுத்தாளர்களில் “லக்ஷ்மி” (டாக்டர் திரிபுரசுந்தரி) சூடாமணி, அநுத்தமா, குமுதினி, வை.மு. கோதைநாயகி போன்றோர் அடக்கம். இவர்களில் வைமுகோ, குமுதினி ஆகியோர் ராஜம் கிருஷ்ணன், லக்ஷ்மி ஆகியோருக்கும் மூத்தவர். இவ்விருவரையும் பற்றி அதிகம் அறிந்திலேன். இங்கே நினைவுகூரப் போவது நான் அறிந்துள்ள ராஜம் கிருஷ்ணன், லக்ஷ்மி ஆகியோரைப் பற்றி மட்டுமே. அவ்விருவரும் எனது சிறுகதை யொன்றுக்கு வெவ்வேறு விதமாக எதிரொலித்தது இன்னும் மறக்கவில்லை. 1980 இல் அமரர் மணியன் அவர்கள் இந்திரா […]