ஜெயஸ்ரீ ஷங்கர் , ஹைதராபாத் “கல்யாண மாலை” க்கு வலைவீசித் தேடித் தேடி உள்ளூரில் மருமகள் வேண்டும் என்ற ஆசையை மட்டும் கனவாக வைத்து, திவ்யாவை கண்டுபிடித்தனர் ராஜேஷின் பெற்றோர். ராஜேஷ் ஒரு தனியார் கம்பெனியில் முக்கிய பதவியில் இருப்பவன்.”மனதைப் படிக்கும் கலை அறிந்தவன்”. கோபமும், குணமும் சேர்ந்து குடிகொண்டிருக்கும் நல்லவன். ஆரம்பத்தில், தனக்கு இப்போ கல்யாணமே வேண்டாம் என்று அடம் பிடித்த ராஜேஷ், திவ்யாவின் புகைப்படத்தைப் பார்த்ததும் கோயில் புறாவாக மாறி அமைதிச் சிறகை […]
‘மரைக்காயருக்கு குழாய் வழிதான் எல்லாமுமாம். கடைசியாக தம்பி பார்த்தபோது நான் எப்போ வருவேன் என்று கேட்டாராம். இரண்டு நாட்கள்தான் தாக்குப்பிடிக்குமாம். உறவினர்களுக்குச் சொல்லிவிடுங்கள் என்று டாக்டர் சொல்லிவிட்டாராம்.’ என்று சொல்லி தம்பி தொலைபேசியை வைத்துவிட்டான். மதியம் உண்ட சோறும் காளாமீன் கறியும் நெஞ்சுக்குழியை விட்டு இறங்காமல் மேலே வரவா என்று கேட்கிறது. மரைக்காயரை இந்த நிலையில் போய்ப் பார்க்காவிட்டால் அது மரணதண்டனைக் குற்றம் என்றது மனசாட்சி. மீண்டும் தொலைபேசியை எடுத்தேன். அடுத்த முனையில் தம்பி. ‘நாளைக் […]
முழுக்க முழுக்க தாய்லாந்தில்,, ஓடும் ரயிலில், எடுக்கப்பட்ட தமிழ்படம். ஒரு நுனி சீட்டு திரில்லராக வந்திருக்க வேண்டியது.. திரைக்கதை எனும் சிக்னல் கோளாறால் கொஞ்சம் நொண்டுகிறது. தாய்லாந்தின் அழகிய இயற்கை காட்சிகளையும், வானுயர பாரம்பரிய கட்டிடங்களையும் அள்ளிக் கொண்டு வந்திருக்கிறது பிரசாத்தின் கேமரா. ஒரு திரில்லருக்கு வேண்டிய தடதடக்கும் இசையை தந்திருக்கிறார் தரன் குமார். பாடல்களும் பரவாயில்லை ரகம். ஆனால் அதிக திருப்பங்கள் இல்லாத திரைக்கதை, பட்த்தை காலை வாரி விட்டு விட்டது. ஆனாலும் […]
இலக்கிய வீதி எனும் அமைப்பை, ஐம்பது ஆண்டுகாலமாக நடத்தி வரும் இனியவன், மாதந்தோறும் ஒரு எழுத்தாளரை கவுரவித்து, விருது வழங்கும் விழா ஒன்றினை நடத்தி வருகிறார். ஏப்ரல் மாதம் 4ந்தேதி வெள்ளிக்கிழமை அன்று, மாலை சென்னை திநகரில் உள்ள கிருஷ்ண கான சபையின் சிற்றரங்கில், இந்த விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் க.ந.சுப்பிரமணியம் பற்றிய சிறப்புரை ஆற்ற வந்திருந்தார் மூத்த எழுத்தாளர் சா.கந்தசாமி. ‘ மறுவாசிப்பில் க.ந.சு’ என்கிற தலைப்பில் அவர் கொட்டிய […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா http://www.youtube.com/watch?feature=player_embedded&v=2tjIczIHkkA http://www.youtube.com/watch?v=_YENHB0Im2I&feature=player_embedded http://www.youtube.com/watch?feature=player_embedded&v=qAqubO0R4Z0 http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kg67JKzoXmY http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ERVa7MZP87Y http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=E426goB47kE http://www.bbc.com/news/world-latin-america-26862237 பூமகள் சற்று தோளசைத்தாள் ! தாமாக வீழ்ந்தன மாளிகைகள் ! மாந்தர் மரித்தார் சிதைவு களில் சிக்கினர் ! செத்தனர் ! புதைந்தனர் ! கடற்தட்டு தடம்மாறிக் கால் உதைத்தால் உடனே சுனாமி எழும் ! பூகம்ப நர்த்தனம் நகர்த்திடும் பூகோள அச்சை ! காலம் மாறும் ! […]
[கடந்த பிப்ரவரி மாதம் (16) விருத்தாசலத்தில் நடைபெற்ற திரு வே.சபாநாயகத்தின் 80வது அகவை விழாவை முன்னிட்டு வெளிவந்த மலருக்கு எழுதிய கட்டுரை. கவிஞர் பழமலய் முன்னின்று நடத்திய விழாவில் திரு.வே.சா.வின் நண்பர்களும், மாணாக்கர்களும், எழுத்தாளர்களும் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்டனர்] “கணினி பயன்பாட்டிலொன்று வணக்கத்திற்குரிய திரு வே.சபாநாயகம் அவர்களை எனக்குத் தெரியவந்தது. இக்கட்டுரையை எழுதும் தருணம் வரை அவரை பார்த்ததில்லை ஆனால் பருவப் பெண்கள்(அந்தநாள்) வீட்டில் கதவை அடைத்துக்கொண்டு தொடர்கதை வாசித்த ஆர்வத்துடன் அவரது எழுத்துக்களை நிறைய வாசித்திருக்கிறேன். […]
சத்யம் சிவம் சுந்தரம் ஃபிஸிக்ஸ் ============================================================ருத்ரா இ.பரமசிவன் ஆன்டி டி.சிட்டர் ஸ்பேஸில் குளூபால் ஸ்பெக்ட்ரம். க்யூசிடியில் கருந்துளை சூப்பர் கிராவிடி ட்யூவல் லேட்டைஸ் கணித முடிவுகளின் ஒற்றுமை. வலுவாய் நிகழும் கப்லிங் அப்ராக்சிமேஷன்களில் உள்ள லிமிடேஷன்ஸ் மேலும் ஹேட்ரானிக் மேட்டர் கிராவிடி ட்யூவாலிடி கப்ளிங்க் எஸ்டென்ஷன்ஸ் ப்ரேன் காஸ்மாலஜியில் ராண்டல் சுந்தரம் மாடல். அப்ப்ப்பா.. இதில் சுந்தரம் மட்டுமே புரிகிறது. இது தான் […]
ஆங்கில வகுப்புக்கு பாடமெடுக்க அன்று வரவேண்டியவர் சுந்தரராஜன் சார். அவர் விடுப்பில் இருந்ததால் மாற்று ஏற்பாடாக ராமசாமி சார் வந்தார். ‘குழலூதுபவனும் எலிகளும்’ என்றொரு கதையை எங்களுக்கு அவர் சொன்னபோது, அவர் ஏதோ புதுமையாகச் சொல்கிறார் என்றுதான் முதலில் தோன்றியது. குழலோசை கேட்டதும் கூட்டம்கூட்டமாக எலிகள் குழலூதுபவனின் பின்னாலேயே செல்கின்றன. அவற்றை தந்திரமாக ஆற்றுக்குள் இறக்கி இறக்கும்படி செய்து விடுகிறான் குழலூதுபவன். அவன் எதிர்பார்த்த பரிசுத்தொகை மறுக்கப்படுகிறது. மனமுடைந்த பாடகன் மறுநாள் அந்த நகரத்தின் […]
ஆங்கிலப் பள்ளியில் பயின்றாலும் ஓர் இலட்சியத் தமிழ் மாணவனாகத் திகழ வேண்டும் என்ற வாஞ்சையுடன் செயல்படலானேன். இப்படி ஆக வேண்டுமெனில் நிறைய தமிழ் நூல்களைப் படித்தாக வேண்டும். தமிழின் இனிமை என்னை மயக்கியது. அதோடு தமிழில் எழுதுவது மிகவும் பிடித்தது! திருக்குறள், புறநானூறு, அகநானூறு ஆ கியவற்றை வாங்கினேன். அவற்றில் திருக்குறள் மிகவும் கவர்ந்தது.ஒவ்வொரு குறளும் சுருக்கமாக இரண்டே […]
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து, செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும், குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே, புற்றர வல்குல் புனமயிலே! போதராய், சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்து, முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி,நீ எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்! திருப்பாவையின் பதினோராவது பாசுரம் இது. இந்தப் பாசுரத்திற்கும் இதற்கு அடுத்த பன்னிரண்டாம் பாசுரத்திற்கும் தொடர்பு உண்டு. இப்பாசுரம் கடமையைச் செய்வதைக் காட்டுகிறது என்றால் அடுத்த பாசுரம் தன் கடமையைச் […]