டாக்டர் ஜி. ஜான்சன் பக்கவாதம் என்பது உடலின் ஒரு பக்கம் முகம், கைகள், கால்கள் செயலிழந்துபோவது. இது இன்னொரு நோயின் விளைவே. அந்த நோய்தான் ” ஸ்ட்ரோக் ” என்பது. இதன் பொருள் அடி என்பதுதான். உண்மையில் இது மூளையில் உள்ள இரத்தக் குழாயில் உண்டாகும் திடீர் விபத்து. இதை Cerebrovascular Accident என்பார்கள். இதை மூளை இரத்தக்குழாய் விபத்து என்னலாம். இங்கு இரத்தக்குழாய் என்பது தமனியைக் குறிப்பதாகும். இது 65 வயதுக்குமேல் உள்ளவர்களுக்கு அதிகமாக உண்டாகலாம். […]
டாக்டர் ஜி. ஜான்சன் 216. துரித பயண ஏற்பாடு கடற்கரை வீதியில் பேருந்து விரைந்து சென்றது. சீர்காழி, பூம்புகார், தாண்டி தரங்கம்பாடி சென்றடைந்தது. குளுகுளுவென்று கடற்காற்று வீசியது. கிராமங்கள் அனைத்தும் பசுமையாகக் காட்சி தந்தன. ஆங்காங்கே காவிரி ஆற்றின் கிளை வாய்க்கால்களில் தண்ணீர் நிரம்பிய நிலையில் கடலை நோக்கி ஓடிக்கொண்டிருந்தன.வயல்வெளிகளிலெல்லாம் வரப்புகளை மறைத்து உயர்ந்துவளர்ந்துவிட்ட பச்சைப்பசேல் நிறத்து நாற்றுகள் காற்றில் சலசலத்து அழகூட்டின. வார இறுதி என்பதால் அண்ணனும் அண்ணியும் வீட்டில்தான் இருந்தனர். என்னை மலர்ந்த முகத்துடன் […]
கலாபூஷணம் எம்.எம். மன்ஸுர், மாவனெல்ல பூங்காவனத்தின் 29 ஆவது இதழ் இம்முறை ஆசிரியையாகவும், பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை துணை விரிவுரையாளராகவும் கடமையாற்றும் ஜெஸீமா ஹமீட் அவர்களின் முன்னட்டைப் படத்தோடு வெளிவந்திருக்கின்றது. வழமை போன்று நேர்காணல், கவிதை, சிறுகதை, கட்டுரை, உருவகக் கதை, நூல் மதிப்பீடு, நூலகப் பூங்கா என்ற அம்சங்களைத் தாங்கி இந்த இதழும் வெளிவந்திருக்கின்றது. ஆசிரியர் இவ்விதழில் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றிய கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். ஏனெனில் ஜூன் மாதம் 12 ஆம் […]
அரிசங்கர் காலம் 2098… அதைக் கண்டுபிடிக்கும் வரை வருனுக்கு அந்த எண்ணம் வரவில்லை. முதல் இரண்டு சோதனையில் வெற்றி பெற்றவுடன்அவருக்கு இந்த எண்ணம் வந்தது. அதுவும் இரண்டாவது சோதனையில் அவர் அடைந்த அதிர்ச்சி அவருக்குக் கண்டிப்பாகஇதைச் செய்தாக வேண்டும் என்று தோன்றியது. முதல் சோதனையாக அவர் இரண்டு வாரம் முன்பு அவர் செல்லாமல்விட்ட ஒரு கான்ஃப்ரன்ஸ்க்கு சென்று வந்தார். அந்தச் சோதனை வெற்றி பெற்றவுடன் அடுத்த சோதனையாக ஒரு மாதம்கழித்து நடக்கப் போகும் தன் பேத்தியின் திருமணத்தைக் […]
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அம்மா மடியில் தூக்கம் தோள் தொட்ட குழந்தையின் பிஞ்சு விரல்களும் குறுகுறு பார்வையும்… மலரில் கவிதைகளே இதழ்களாய் … பழுத்த பழத்தின் மஞ்சள் புன்னகை நண்பர்களின் சுவாரஸ்யமான பேச்சு வெளிர் நிறத்துத் துளிர் இலைகளில் மெல்லிய நரம்போட்டம் … செங்குழம்பென செவ்வானத்தின் ஆழ்ந்த கோபம் சிட்டுக்குருவியின் படபடப்பிலும் புரியா மொழியிலும் என என் கவிதைப் பிரவேசங்கள் எத்தனை முறைதான் என்னை மகிழ்வூட்டின ? ஓ ! கவிதைக்குள் வாழ்க்கை மிகவும் ரசமானது !
இல.பிரகாசம் “ஓர்” என்பவற்றிலிருந்து எப்போதும் “ஒரு” தனித்துத் தான் ஒலிக்கிறது மிகச் சுலபமாக தனித்தறியவும் பயன்படுத்துவதிலும் எண்ணிக்கையில் வேறுபடுத்திக் காட்டுவதில் இவைகள் எத்துணைத் துள்ளியத்துடன் செயல்படுகின்றன. “ஒரு மனிதன் ஓர் இனம்” அளவுகோளில்லை எனினும் நான் ஒரு என்ற வார்த்தையில் பிரம்மாண்டத்தை உணர்கிறேன்.
என் செல்வராஜ் 1931 ல் பேச ஆரம்பித்த தமிழ் படம் 87 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. ஆரம்பத்தில் 50 பாடல்கள் வரை இருந்த படங்கள் இப்போது 5 பாடல்களுடன் வெளிவருகின்றன. வருடத்துக்கு 200 படங்கள் வரை இப்போது வெளிவருகின்றன. அவற்றில் வெற்றி பெறும் படங்கள் மிகச் சிலவே. 1931ல் இருந்து இதுவரை வெளிவந்த படங்களின் சிறந்த பட்டியல்கள் இணையத்தில் பலரால் வெளியிடப்பட்டுள்ளன. பல திரைப்பட நூல்களும் சிறந்த திரைப்படங்களைப்பற்றி எழுதியுள்ளன.எனக்கு பிடித்த படங்கள், டாப் […]
-எஸ்ஸார்சி அவர்தான் இன்று உயிரோடு இல்லை மாநிலநிர்வாகம் சிறந்த தமிழ் நூல்களுக்கு ப்பரிசு வழங்குவது என்பதை ஏனோ தானோ என்கிற அளவிலாவது நடத்திக்கொண்டுதான் இருக்கிறது. என் நண்பர் விபாச. அவரது கட்டுரை நூலுக்கு விருது என்று அரசு அறிவிப்பு வந்திருக்கிறது. விபாச என் சஹிருதயர். அப்படித்தான் அவர் என்னை அழைப்பது வழக்கம். தனது இலக்கியப்படைப்புக்களை ஓய்வென்பது கொஞ்சமும்இல்லாமல் தொடர்ந்து வழங்கிக்கொண்டே இருந்தார். பெரும்பாலும் சிற்றிதழ்களில்தான் அவை கம்பீரமாக உலா வந்தன. . தஞ்சாவூரில் இருந்து வெளிவரும் இலக்கியச் […]
சு. இராமகோபால் சிறு தானியங்கள் எங்கள் முப்பாட்டன் விட்டுச் சென்ற தோட்டத்தில் விரும்பி விளையும் பால் கட்டும் பருவத்தில் சோளக்கதிர்களை அறுத்துவந்து உமியின்றி பொன்மணிகளை உதிர்த்து நீராவியில் பக்குவமாக அவித்து குளிரும் மாலைப்பொழுதில் நெய் நறுமணத்துடன் வெதுவெதுவென்று வெள்ளிக் கிண்ணங்களில் குவித்து அம்மா கொடுப்பாள் குக்குள் குக்குளென்று கொங்குநாட்டுச் சுந்தரத் தெலுங்கில் கூவியவண்ணம் நானும் உடன் பிறப்புகளும் உண்டு சுவைத்தோம் இன்று எங்கள் பிள்ளைகள் கூக்குள் கூக்குளென்று உலக மயானத்தில் மொழியிழந்து