தமிழ் அறிவுஜீவிகளின் பக்கச்சார்பு தலையங்கங்களில் இஸ்ரேல் அரபு பிரச்னை பற்றிய பொய்களின் காரணமென்ன?

This entry is part 19 of 23 in the series 10 ஆகஸ்ட் 2014

  ரத்தம் வழியும் யுத்த பூமி! என்ற தலைப்பில் இரா ஜவஹர் என்ற மூத்த பத்திரிக்கையாளர் எழுதிய கட்டுரையை வாசிக்கப்பெற்றேன். எதை விற்க வேண்டுமென்றாலும் குழந்தைகளை உபயோகப்படுத்தலாம் என்பது நவீன விளம்பர யுக்தி. குழந்தைகள் இறக்கிறார்கள் என்றால், உடனே இரங்குவது மனித இயல்புதானே? அதனை வைத்து கிறிஸ்துவ மதமாற்றத்துக்கு பணம் வசூலிப்பதிலிருந்து, ஹமாஸுக்கு ஆதரவு திரட்டுவது வரை எல்லாமே நடக்கும். ஆகவே கட்டுரையும் இப்படி ஆரம்பிக்கிறது. // “இன்று 10 குழந்தைகள் உட்பட 50 பேர் கொல்லப்பட்டார்கள்” […]

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சனிக்கோளின் துணைக்கோளில் 101 வெந்நீர் எழுச்சி ஊற்றுகள் கண்டுபிடிப்பு

This entry is part 12 of 23 in the series 10 ஆகஸ்ட் 2014

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் !  சனிக்கோளின் துணைக்கோளில் 101 வெந்நீர் எழுச்சி  ஊற்றுகள் கண்டுபிடிப்பு சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா http://www.space.com/10143-surprising-geyser-space-cold-faithful-enceladus.html https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-L2rGwuPjvY http://www.space.com/25328-ocean-on-saturn-moon-enceladus-suspected-beneath-ice-video.html சனிக்கோளின் துணைக்கோளில் பனித்தளம் முறியக் கொந்தளிக்கும் தென் துருவம் ! தரைத்தளம் பிளந்து வரிப்பட்டை  வாய்பிளக்கும் ! முறிவுப் பிளவுகளில் பீறிட்டெழும் வெந்நீர் எழுச்சி ஊற்றுக்கள் ! முகில் மய  அயான் வாயுக்கள் ! பனித்துளித் துகள்களும் எரிமலை போல் விண்வெளியில் வெடித்தெழும் ! புண்ணான […]

பொருள் = குழந்தைகள் ..?

This entry is part 11 of 23 in the series 10 ஆகஸ்ட் 2014

பொருள் = குழந்தைகள் ..? சிறுகதை.ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத். என்…னா ..ங்க….! எ…ன்…ன ..ங்க .. எனக்கு வலி கண்டு போச்சு..பளீர் பளீர்ன்னு…காலெல்லாம் இழுக்குது. முதுகுல என்னவோ சுளீர்னு நெளிஞ்சு மேலுக்கு ஏறுது. இடுப்பு வெட்டி வெட்டி வலிக்குதுங்க…எ..ன …க் க் க் ..கு…எனக்கு ரொம்ப பயம்…மா இருக்குதுங்க. சீக்கிரமா வண்டிக்கு ஏற்பாடு செய்யுங்க….யம்மாவ் ….வலி தாங்கலியே…கயிற்றுக் கட்டிலில் ஒருக்களித்து படுத்த வள்ளி, கண்ணீர் வழியும் கண்களை இறுக்கி மூடிக் கொண்டு பிரசவ வேதனையில் துடிகிறாள். இன்னாடி […]

தினம் என் பயணங்கள் -28 பாராட்டு விழா

This entry is part 5 of 23 in the series 10 ஆகஸ்ட் 2014

தினம் என் பயணங்களைத் தொடர்ந்து எழுத வாய்ப்புக் கிடைத்துக் கொண்டே இருக்க, மொத்த கட்டுரையும் எடுத்து படித்த போது சோர்ந்து போனேன். என்ன செய்து கொண்டிருக்கிறேன் ? என் சோகத்தை உலகம் எங்கிலும் பந்தி வைத்துக் கொண்டிருக்கிறேன். எல்லோரும் வாங்க, கூடி ஒப்பாரி வைப்போம் என்று அழைத்துக் கொண்டிருக்கிறேன். இந்த உண்மை எனக்கு புரிந்த போது, மனம் சோர்ந்தது. நான் எதை செய்யக் கூடாது என்று எண்ணுகிறேனோ அதைச் செய்கிறேன். அதைச் செய்ய முனையும் போது அதை […]

வாய்ப்பினால் ஆனது

This entry is part 4 of 23 in the series 10 ஆகஸ்ட் 2014

  அச்சத்தின் துளிகளால் எனது பெருங்கடல் தளும்பிக்கொண்டிருக்கிறது. எப்போதும் வறண்டுபோகும் வாய்ப்புடன் அமுதம் ஒரு குட்டையில் .. அமுதம் பருகக்கூடிய வாய்ப்பை அலையாடிக் கொண்டிருக்கும் கட்டுமரத்தின் திரைச் சீலையில் முடிந்திருக்கும் சாவி கிட்டியவுடன் திறப்பேன் என்கிறான் அங்கே தூண்டிலோடு திரியும் கிழவன். எனக்கோ அவன் தனது ஓட்டைக் குவளையில் நிரப்பியது போக மீதமிருப்பது அமுதக்குட்டையின் கானல் நீரே என்றஎண்ணம். கட்டுமரம் அசைந்துகொண்டிருக்கிறது அசைவின்றித் தூண்டிலோடு குந்தியிருக்கிறான் கிழவன் -உமாமோகன்

தொடுவானம் 28. திருப்புமுனை

This entry is part 3 of 23 in the series 10 ஆகஸ்ட் 2014

            விமானம் சென்னை விமான நிலையத்தை நோக்கி தரையிறங்க ஆயத்தமானது. உயரம் குறைவது தெரிந்தது. அப்போது இந்திய நேரப்படி காலை ஒன்று முப்பது.            சென்னை நகரத்தை வானிலிருந்து பார்த்து அதிர்ச்சியுற்றேன்!            சிங்கப்பூரை வானிலிருந்து இரவில் பார்த்த போது அது தகதகவென்று கண்களைப் பறிக்கும தங்கத் தகடுபோல் ஜொலித்தது. ஆனால் சென்னையோ ஒளியிழந்து மஞ்சள் நிறத்தில் மங்கிய நிலையில் […]

தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம் மாநாடு

This entry is part 1 of 23 in the series 10 ஆகஸ்ட் 2014

  மதுரையில்…   17.08.2014 ஞாயிறு காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை இடம்: தருமபுர ஆதீனச் சொக்கநாதர் திருமண மண்டபம் வடக்கு மாசி வீதி,  மதுரை தொடர்புக்கு:  பொழிலன் 86080 68002                           திருமலை தமிழரசன்  99621 01000                           உமையர் பாகம்  92458 49999   ​

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 87

This entry is part 6 of 23 in the series 10 ஆகஸ்ட் 2014

  (1819-1892)   ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) (Salute Au Monde) [Salute to World] வையகமே வந்தனம் உனக்கு [3] அடிமை இனத்தின் அணிவகுப்பு   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     வால்ட் விட்மன் ! சொல் உன் காதில் விழுவ தென்ன ? உழைப்பாளி பாடிக் கொண்டி ருப்பது கேட்கிற தெனக்கு ! விவசாய மாது பாடுவதும் கேட்கிறது. தூரத்தில் பிள்ளைகள் […]

வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு புகையிலை பிறந்தகதை(காசி இனத்து பழங்கதை)

This entry is part 7 of 23 in the series 10 ஆகஸ்ட் 2014

கேட்டு சொன்னவர்: கின்பாம் சிங்க்னாங்க்கின்ரிஹோ தமிழில்:எஸ்ஸார்சி இது நேர்மையான நட்பின் கதை. காசி பழங்குடி இனத்துச் சனங்களின் கதை.நட்புக்கு ஒரு எடுத்துக்காட்டென விளங்கிய இரு அன்பு உள்ளங்களின் வெளிப்பாடு.ஒருவரை ஒருவர் மனம் புண்படுத்த ஒப்பாத மனிதர்களின் வாழ்க்கைக்கதை. ஏழை பணக்காரன் என மக்கள் வித்தியாசம் பாராட்டாத காலத்து விஷயம் இது. காசி இனமக்கள் வாழ்ந்த அந்த ஒரு கிராமத்தின் பெயர் ரங்கிர்விட். அங்கே உநிக், உசிங்க் என இருவர்.உசிங்க் மிகவும் வறியவன். அந்த வறியவனின் மனைவி பெயர் […]