நான்(?)

This entry is part 12 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

நானெனவும் யாரெனவும் இருமை நிலையடைகிறது மனம் முயன்று செய்த சாதனைகள் நானெனப் பறைசாற்ற இழந்துவிட்ட சந்தோஷம் யாரெனக் கேட்கத் தூண்டுகிறது. நானென நிலைக்கும் போதில் சுயம் வெளிப்படுகிறது நல்ல ஆதரவும் கிட்டாமல் நாங்கூரமும் இட முடியாமல் நடுக் கடலில் தத்தளிக்கிறது படகு யாரெனக் குழம்பும் பொழுதுகளில் கனத்த அமைதி கவிந்து மனச் சலனங்களை மறக்கடிக்கிறது. எத்தனை மூழ்கியும் முத்தெடுக்க இயலாத வறுமையே வாழ்வாய் வசப்படுகிறது. என்னைப் பற்றிய குழப்பத்திற்கு விடை காணாமலேயே உலகக் குழப்பங்களைத் தீர்க்க முற்படுகிறேன் […]

வாக்குறுதியின் நகல்..

This entry is part 11 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

* ஒரு வாக்குறுதியின் நகல் தன்னகத்தே எழுதிப் போகும் சொற்களின் இடைவெளிகளில் உழுகிறது பார்வைகளை அவைச் சொல்லத் தப்பிய தருணங்களை நீட்டும் உள்ளங்கைககள் ஏந்திப் பெற விரும்புவது ஒரு சின்னஞ்சிறிய அறிமுகத்தை மட்டுமே ***** –இளங்கோ

ஐ-போன் வியாதி

This entry is part 10 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

“உள்ள வாங்க”, கண்ணாடி அணிந்து, மூன்று முறை குளித்து, ‘கம கம’வென வந்து உட்கார்ந்த மருத்துவர், தன் முதல் நோயாளியை உள்ளே அழைத்தார். ‘தாய்-சேய்’ என்று அழைக்கும்படியான இருவர் உள்ளே நுழைந்தனர். அந்தப் பெண், தயங்கித் தயங்கி நடக்க, உடன் வந்திருந்த வாலிபன் மட்டும் பயமே இல்லாமல் நுழைந்தான். “என்ன பிரச்சனை?” சிரித்த முகத்துடன் மருத்துவர் கேட்டார். “இவனுக்கு தான் பாக்கணும் டாக்டர்”, என்றார் அந்த பெண். “அவரு ஜாலியா வராரு. நீங்க ஏன் இவ்ளோ டென்ஷனா […]

தமிழ் ஸ்டுடியோ வழங்கும் ‘லெனின் விருது’ – பெறுபவர்: ஆர்.ஆர். சீனிவாசன்

This entry is part 9 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

இந்த லெனின் விருது வழங்கும் விழா எதிர்வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று சென்னை அண்ணா சாலையிலுள்ள மாவட்ட மைய நூலக அறையில் (தேவநேயப் பாவாணர் நூலகம்) LLA Building, மாலை 6 மணியளவில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் கலந்துக் கொள்ளவிருப்பர்வர்கள். தமிழ் ஸ்டுடியோ வழங்கும் ‘லெனின் விருது’ – பெறுபவர்: ஆர்.ஆர். சீனிவாசன் இடம்: தேவநேயப் பாவாணர் நூலகம் (LLA Building), அண்ணா சாலை நாள்: 15-08-2011 நேரம்: மாலை 6 மணிக்கு இயக்குனர் பாலு மகேந்திரா, […]

ஜென் ஒரு புரிதல் பகுதி 6

This entry is part 8 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

சத்யானந்தன் மானூடத்தின் மிக நீண்ட வரலாற்றில் மதங்களின் பங்களிப்பு குறிப்பாக இரு தளங்களில் இருந்தன. ஒன்று சமுதாய ஒழுங்குமுறை – அறநெறிகளை நிறுவியதில். மற்றது அவநம்பிக்கைகும் நம்பிக்கைக்கும் இடையே இடையறாது ஊசலாடும் மனிதனைத் தேற்றி அவன் தொய்வின்றி இயங்கத் துணை நின்றதில். இன்றும் மதம் மற்றும் வழிபாடு இந்த இன்றியமையாத தொண்டைப் புரிகின்றன. இதன் மறுபக்கம் மதங்களின் எல்லைக் கோடு சம்பந்தப் பட்டது. சர்ச்சையே இப்படி ஒரு எல்லைக் கோடு கிடையாது என்பது தான். என் மதம் […]

நினைவுகளின் சுவட்டில் – (74)

This entry is part 7 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

ரஜக் தாஸ் வந்துவிட்டாலே செக்‌ஷன் கலகலப்பாகி விடும். அவன் செய்யும் ஒவ்வொரு காரியமும் தமாஷாகத் தான் இருக்கும். அவன் இதற்காக ஏதும் சிரமப் பட வேண்டியதில்லை. ஒன்றுமில்லாத எதுவும், ஒன்றுமில்லாத சப்பென்று நமக்குத் தோன்றும் எதுவும் அவனிடத்தில் உயிர் பெற்றுவிடும். தமாஷ் செய்வதற்கு, அமைதியாக இருக்குமிடத்தில் கலகலப்பூட்டுவதற்கு ஏதும் சம்பவங்கள், கிறுக்குத் தனமான சேஷ்டைகள், அல்லது சிரிப்பூட்ட வென்றே யோசித்துத் தயார் செய்யப்பட்ட ஹாஸ்யப் பேச்சுக்கள், இப்படியெல்லாம் அவனுக்கு எதுவும் தேவையில்லை.   சாதாரணமாகப் பேசிக்கொண்டிருப்போம். இடையில் […]

ஸிந்துஜா – முப்பது வருடங்களுக்குப் பிறகு

This entry is part 6 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

இரண்டு வாரங்களுக்கு முன் ஸிந்துஜாவின் சிறுகதைகள் 18 கொண்ட முதல் தொகுப்பு கைக்கு வந்தது. வெளியிட்டிருப்பது நன்னூல் அகம், மந்தைவெளி, சென்னை. நன்னூல் அகம் என்று சொன்னால் புரியாது. இது பாவை சந்திரனின் பொறுப்பில் இருக்கும் புத்தக வெளியீட்டு நிறுவனம். அதிகம் தெரியவராத சின்ன அளவிலான தனிமனித முயற்சி. இரண்டு பேரையும் சேர்த்து பிரஸ்தாபிப்பதற்கான காரணம் இருவருக்கும் சற்றுப் பொதுவான ஒன்று உண்டு,. சொல்கிறேன். கடைசியில்.   ஸிந்துஜாவை இந்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தியாக வேண்டும் என்று நினைக்கிறேன். […]

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மீட்சி (The Return) (கவிதை -47 பாகம் -4)

This entry is part 5 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “துயர் அடையும் என் தோழனே ! வாழ்க்கையில் உன்னைத் தோல்வியுறச் செய்த வாய்ப்புக் கேடுகளை நீ சிந்தித்தால் அவைகளே உனக்கு வலுவைத் தந்து உன் இதயத்துக்கு ஒளியூட்டி உனது ஆத்மாவைக் பள்ளத்திலிருந்து உயர்த்தி மதிப்புப் பீடத்துக்கு ஏற்ற உந்தி இருக்கிறது. அதனால் உன் பங்குப் பணி நிறைவேறியது என்று திருப்தி அடையவும் அவையே உனக்கு அறிவு புகட்டி ஞானத்தைப் பெறவும் ஒரு மரபுரிமை […]

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் இருக்கும் போது (காலை இளம் ஒளியில் ரூபி) (கவிதை -43)

This entry is part 4 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா விடிவ தற்குச் சற்று முன்பு பொழுது புலரும் வேளையில் விழித் தெழுந்தாள் காதலி ! ஒருவாய்த் தண்ணீர் அருந்தி அவள் கேட்டாள் : “நீ நேசிப்பது என்னையா ? அல்லது நீ நேசிப்பது உன்னையா ? நிஜத்தைச் சொல் என்னிடம் உண்மை யாக, உறுதி யாக !” +++++++++ ஒருவாய் நீர் அருந்தி ஆடவன் கூறினான் : “என்னிடம் எதுவும் எஞ்சி இருக்க […]

கவிதைகள். தேனம்மைலெக்ஷ்மணன்

This entry is part 3 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

9 குறுங்கவிதைகள்   மரக்கிளைகளின் வழி வெளிச்ச விழுதாய்த் தொங்குகிறது சூரியன்… **************************************** வெளிச்ச விழுதுகளில் குருவிகளாய் ஊஞ்சலாடியபடி இறங்குகின்றன இலைகள் ******************************************** மழையும் எப்போதாவது நீர்விழுதாய் ஊஞ்சலாடுகிறது மரக்கிளையைக் கட்டியபடி.. ******************************************* வெய்யில் புள்ளி வைத்து நாள் முழுக்கக் கோலமிட்டபடி இருக்கிறது மரம். ******************************************** விடியலின் பூக்களாய் பூமியின் மீது பூத்துக் கொண்டிருக்கிறது பனி.. ************************************************ சூரியன்காந்தப்பூ ஈர்க்க அதை நோக்கி முகம் மலர்கிறது பூமி.. ****************************************** மஞ்சள் இறக்கைகளோடு பூமியின் மீது பறக்கிறது சூரியன்.. […]