புலம் பெயர் மனம்

This entry is part 9 of 9 in the series 30 ஆகஸ்ட் 2020

குணா (எ) குணசேகரன் புலம் பெயர்ந்த அந்நாளில் குளிர்பனி பெரிதில்லை என்னவாகும் என்றநிலை இருந்தும் ஒரு எண்ணத்திலே தங்கியது பிழைப்பு தேடி தட்டுத் தடுமாறி வேரூன்றிட நாட்களும் ஓடிட கதைபல கூடிட அடுத்த தலைமுறை அடித்தளம் இட்டது வாழும் தளத்துக்கு அடிவாரம் தேடியது தங்கும் இடத்துக்காய் தன்னையே மாற்றிட குந்தமில்லை குழப்பமில்லை அடுத்த தலைமுறைக்கு அடிவாரம் தேடியதில் அநேக குழப்பங்கள் வடிவமைக்க சிரமங்கள் அங்கிருப்பார் அங்கிருப்பார் இங்குவர தத்தளிப்பார் இங்குவர எத்தனிப்பார் ஒத்துவர முத்தாய்ப்பாய் இன்னதென்பார் ஒத்து […]

கவிதைகள்

This entry is part 6 of 9 in the series 30 ஆகஸ்ட் 2020

                                புஷ்பால ஜெயக்குமார்  1 அவள் ஒருத்தி இறந்துவிட்டாள் என்று சொல்லலாம் தத்துவார்த்தமாக மிக மென்மையான அவள் அழகும் பூ போட்ட அவளது உடையும் என்னோடு சாகும் அல்லது அவளோடு (அவள் மறந்துவிட்டாலும்) இந்த காதல் யாருக்குச் சொந்தம் என்று விசாரணையில் தெரியவரும் அது பிரித்தளித்த இரண்டு வாழ்க்கை கிளைவிட்டுப் பரவுகிறது எல்லாம் மாறிவிட்டது எல்லாம் புதைந்தும் போய்விட்டது ஒன்றிரண்டு நினைவுச்சின்னத்தைத் தவிர என் தலையில் இருக்கும் செல்களின் […]

திருட்டு மரணம்

This entry is part 7 of 9 in the series 30 ஆகஸ்ட் 2020

சீராளன் ஜெயந்தன் வழக்கம் போல் நெற்றியில் நாமம் இட்டு பெருமாள் கோயிலுக்கு கிளம்பும் போது, தடுத்துவிட்டான் மகன். “அப்பா, பதினைஞ்சு நாளைக்குத்தான் அப்பா, பொறுத்துக்கோங்க, வெளியே போக வேணாம்” “ஏண்டா, டிவியில சொன்னான்ட்டு சொல்றியா, எனக்கெல்லாம் ஒண்ணும் வராதுடா, அவன்க கிடக்குறானுக பைத்தியக்காரப் பசங்க….” “இல்லப்பா இது ரொம்பத் தீவிரமா இருக்கு.. உலகம் பூரா ஆயிரக் கணக்குல செத்துக்கிட்டு இருக்காங்க.. இப்ப நம்நாட்டுக்கும் வந்துருச்சு..  டிவி பாக்குறிங்க தானே…வயசானவங்களுக்குத்தான் ரொம்ப பாதிப்பாம்” அவர் யோசிக்கும் முன்னே அடுப்பங்கரையிலிருந்து […]

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் -8

This entry is part 5 of 9 in the series 30 ஆகஸ்ட் 2020

ஸிந்துஜா  ஸ்ரீராமஜெயம்   ஆமாம். ராகவாச்சாரி திருடி விடுகிறார். அச்சாபீஸில் ப்ரூப் ரீடராக அவர் வந்து இருபத்தி ஆறு வருஷமாகிறது. வயது, ஊழிய காலம் இரண்டிலும் முதலாளிக்கு அடுத்த பெரியவர் அவர்தான். அவருடைய திருட்டைக் கண்டுபிடித்து விடுவது காவலாளி வேலுமாரார். அவன் வேலைக்குச் சேர்ந்து இருபது வருஷங்களாகிறது. இந்த இருபது வருஷங்களில் ஒருநாள் கூட ராகவாச்சாரி ஆபீஸ் ஆரம்பிக்கிற எட்டரை மணிக்கு முன்னால் வந்து அவன் பார்த்ததில்லை. ஒரே ஒருநாள் அவர் இரண்டு நிமிஷம் நேரத்துக்கு முன்னால் வந்தார். அன்று ஜப்பான்காரன் சென்னை மீது குண்டு வீசிவிட்டுப் போனான் !   ராகவாச்சாரி எட்டு […]

கவிதை

This entry is part 4 of 9 in the series 30 ஆகஸ்ட் 2020

ப. சுடலைமணி நீண்ட நாள்களாகவேகொல்லையில்டி சிட்டுகளைக்கண்டு மகிழ்கிறேன்.தொடர்ச்சியானஇடைவெளியில்தோதகத்தி மரத்தைஎட்டிப்பார்க்கிறேன்.இன்றும் கூடஜோடி சிட்டுகள்வந்துவிடுமென்றநம்பிக்கைசிறகடிக்கிறது.சிட்டுகள்வருவதும்போவதும்அவற்றின் விருப்பம்என்னால்என்னசெய்துவிட முடியும். ப. சுடலைமணி

பையன் 

This entry is part 3 of 9 in the series 30 ஆகஸ்ட் 2020

எப்போது தூங்கினான்? விழித்தால் தான் அதுவரை தூங்கிக் கொண்டிருந்ததே தெரிகிறது. பளீரென்ற வெளிச்சம். சரவணன் படுத்த இடத்தில் வியர்வை தேங்கி தரைஈரம் உருவமாய் இருட்டுக் கொடுத்திருந்தது. மேற்கிலிருந்து ஜன்னல் வழியே உள்ளே, வெளிச்சத்தைக் காகிதம் போல நாலாய் ஐந்தாய்க் கிழித்துப் போட்டமாதிரி, தரையில் சிதறிக் கிடக்கும் வெளிச்சம். சில பூட்டிய வீடுகளில் தபால் இப்படி வீசிக் கிடக்கும். மணி என்ன? தூங்கியெழுந்ததில் உடம்பும் வாயும் நாறியது. மதியம் வரை அம்மா சோறாக்கவில்லை. கேட்க பயம். எதற்கெடுத்தாலும் அடிக்கிறாள். […]

புதுக்கவிதையின் தந்தையான ந.பிச்சமூர்த்தி

This entry is part 2 of 9 in the series 30 ஆகஸ்ட் 2020

  அழகியசிங்கர்     இந்த வருடம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வந்தவுடன் ந.பிச்சமூர்த்தி ஞாபகம் வந்தது. அதற்குக் காரணம் நான் தொடர்ந்து கவிதைக் கூட்டம் நடத்திக்கொண்டிருப்பதால்.  புதுக்கவிதை தந்தையாகக் கருதப்படுபவர் ந.பிச்சமூர்த்தி.  இவர் ஆகஸ்ட் 15ஆம் தேதி 1900ல் பிறந்தார்.     இவரைப் பற்றிக் குறிப்புகளை இங்கே குறிப்பிடுகிறேன்.  (நடேச) பிச்சமூர்த்தி 15.08.1900அன்று தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கும்பகோணத்தில் பிறந்தார்.     இலக்கியம், நாடகம், மருத்துவம், தாந்த்ரீகம் முதலிய துறைகளில் பரம்பரையாக ஈடுபட்டுள்ளது அவரது குடும்பம்.  தன் […]

மனம்… மனம்…அது கோவில் ஆகலாம்

This entry is part 1 of 9 in the series 30 ஆகஸ்ட் 2020

கோ. மன்றவாணன்       கொவைட் 19 கொள்ளைநோய்க் கொடுமையின் சாட்சியாகத் திகழ்கின்ற தலைமுறை நாம். இமைப்பொழுதும் இடைவெளி இன்றி இரவும் பகலும் இயங்கிக் கொண்டிருந்த நம் நாடு, ஐந்து மாதங்களாக முடங்கிக் கிடக்கிறது. எப்பொழுதுதான் மீட்சி என்று யாருக்கும் தெரியவில்லை. மக்கள் மட்டும்தாம் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள் என்றில்லை. தெய்வங்களுக்கும் அதே நிலைதான். நூற்றாண்டுக்கு முந்தைய கொள்ளைநோய்க் காலத்தில்கூடக் கோவில்கள் மூடப்பட்டதாகக் குறிப்புகள் இல்லை.       அரசுச் சம்பளம் வாங்குவோர், ஓய்வூதியம் பெறுவோர் சமாளித்துக் கொள்கிறார்கள். பணச்செழுமை […]

நம்மாழ்வாரின் அன்னை அவதரித்த திருத்தலம்

This entry is part 8 of 9 in the series 30 ஆகஸ்ட் 2020

                                                                        பன்னிரு ஆழ்வார்களில் நம்மாழ்வார் “வேதம் தமிழ் செய்த மாறன்” என்னும் பெயராலே வழங்கப்படுகிறார். அவர் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்னும் நான்கு பிரபந்தங்களை அருளிச் செய்துள்ளார். அவை ருக், யஜுர், சாம, அதர்வண என்னும் நான்கு வேதங்களின் சாரமாக அமைந்துள்ளதால் அவருக்கு ”வேதம் தமிழ் செய்த மாறன்” என்னும் பெயர் வந்தது. நம்மாழ்வார் திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரியில் வைகாசி விசாக நாளில் அவதரித்தார். அவர் தந்தையார் திருநகரியைச் சேர்ந்த காரி […]