ஞாயிறு மதியம் 3 மணி முதல் சேவ் அலுவலக வளாகம், தாராபுரம் சாலை, கலைஞர் அறிவாலயம் வீதி, திருப்பூரில் நடைபெற்றது.கவிஞர் ஜோதி தலைமை தாங்கினார். – பேராசிரியர் செல்வியின் படைப்புகள் பற்றி கோவை சுபசெல்வி விரிவாகப்பேசினார். பேராசிரியர் செல்வி ஏற்புரையில் தமிழகப்பெண் இலக்கியவாதிகளூடே பெண்ணியத்தின் நிலை பற்றிப் பேசினார். நூல்கள் அறிமுகம்: சேவ் வெளியிட்ட “ களவாடப்பட்ட குழந்தைப்பருவம் “ ( குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் ) ,சுப்ரபாரதிமணியனின் “ சிவப்புப் […]
இரட்ணேஸ்வரன் சுயாந்தன் டிசம்பர் தோறும் பாரதியின் பிறந்த தினம் நினைவு கூறப்பட்டாலும், அவர்தம் கவிதைகள் மீதான கவர்ச்சி என்பது மாதம், நாள், சாதி பாகுபாடின்றி தமிழர்களின் வாழ்வியலுடனும், படைப்பாளிகளின் நவீனத்துவப் புனைவுகள் மீதும் அதீத செல்வாக்கினைச் செலுத்தியே வருகிறது. சமூக சுதந்திரம், தனிமனித சுதந்திரம், பெண்ணியம், விடுதலை வேட்கை, தமிழ்ப்பற்று, அறிவுநிறை முதலான பண்புநலன்களை தனது முற்காலப் படைப்பாளிகளிடமிருந்து தள்ளி அகலக்கால் வைத்தே தனது கவிதைகளின் எடுத்துரைப்பைப் பாரதி கொணர்ந்திருந்தார் எனலாம். இவரின் படைப்புக்களைப் பாமரர் மேலோட்டமாகப் […]
மரணத்திடம் நீ தோற்றாயாம் பொய் மரணத்திடம் தோற்றிருந்தால் ஒரு மனிதச் சுனாமிக்கு நீ மையமானது எப்படி? உன் கரைகளைக் கடக்கும்போதுதான் புல்லாங்குழல் ஊதுகின்றன புயல்கள் பூகம்பங்கள் பூக்களைச் சொரிந்தன உன் பாதங்களில் உன் மின்னல் சொடுக்கில் மௌனித்துப் போயின இடிகள் ஒரு பக்கம் மலைகளைப் புரட்டினாய் மறு பக்கம் மயிலிறகால் மக்களை வருடினாய் கடிவாளமிட்ட சிங்கங்கள் சாத்தியமாக்கினாய் வானவில்லும் வர்ண ஜாலங்களும் தோற்றுப் போயின – உன் […]
இந்த விடுமுறை தெம்மூரில் இனிமையாகக் கழிந்தது. ஊர் மக்கள் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியும் .உற்சாகமும். இதற்குக் காரணம் ஊரைச் சுற்றியுள்ள நிலங்கள். அவை பசுமையாக பச்சைப் பசேலென்று காட்சி தந்தன. ஆம். நல்ல விளைச்சல்! கிராம மக்களுக்கு அதுவே முக்கியமானது. விளைச்சல் நன்றாக இருந்தால்தான் நல்ல மகசூல் கிட்டும். நிலத்தில் போட்டுள்ள பணத்துக்கு மேலாக இலாபம் கிடைக்கும். நிலங்கள் இல்லாதவர்களுக்கும் அறுவடை காலத்தில் தொடர்ந்து வேலையும் கூலியும் கிடைக்கும். ஆனால் எல்லா வருடமும் இத்தகைய மகிழ்ச்சியைக் காண […]
கி.பி. [1044 – 1123] பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. உமர் கயாம் பழம்பெரும் பாரசீகக் கவிஞர்; கணித. வானியல், சித்தாந்த விஞ்ஞானி. அவரது புகழ்பெற்ற ‘ருபியாத்’ என்னும் ஈரடிப் பாக்கள் பல மொழிகளில் பல கவிஞர்களால் மொழி பெயர்ப்பாகி உள்ளன. ஆங்கிலத்தில் பலர் மொழி பெயர்த்துள்ளார். அவற்றுள் தனித்துவம் பெற்றவை எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு [1809 – 1883] ஆக்கிய […]
முருகபூபதி – அவுஸ்திரேலியா தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் ஒருவரின் பணிகளை ஆதரிப்பது ஊக்குவிப்பது முதலான அரிய நற்குணங்கள் கொண்ட மனிதர்களை இக்காலத்தில் காண்பது அபூர்வம். கலை இலக்கிய உலகத்தில் மற்றவர்களின் ஆற்றல்களை இனம் கண்டு ஊக்குவிக்கும் சிறப்பியல்புகொண்டிருந்த நண்பர் – இலக்கிய விமர்சகர் தி.க.சிவங்கரனின் நினைவுகள் சாசுவதமானவை. அவர் பொதுவுடைமை கருத்துக்களினால் ஈர்க்கப்பட்டு முற்போக்கு இலக்கியத்தையும் இலக்கியவாதிகளைப்பற்றிய கருத்துக்களையும் தனது வாழ்நாள் பூராவும் பதிவுசெய்துகொண்டிருந்தவர். ஒரு இலக்கியப்படைப்பை படித்தவுடன் தனது வாசிப்பு அனுபவத்தை நயப்புரையாகவே […]
இயக்குனர் மிஷ்கின் நடத்தும் ஒருநாள் பயிற்சிப் பட்டறை. 18-12-2016, ஞாயிறு, காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. பயிற்சிக்கு கட்டணம்: 2000/- (மதிய உணவு உட்பட) நண்பர்களே மீண்டும் தமிழ் ஸ்டுடியோவிற்காக, அதன் நிதி தேவைக்காக இயக்குனர் மிஷ்கின் அவர்கள் ஒருநாள் சினிமா பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்திக் கொடுக்கவிருக்கிறார். சினிமாவின் உருவாக்கம் சார்ந்து பயிற்சி கொடுக்கவிருக்கிறார். இறுதியில் கலந்துரையாடலும் நடைபெறும். எப்போதும் சொல்வது போல் மிஷ்கினின் சினிமா பயிற்சி என்பது, […]