அன்பினிய நண்பர்களுக்கு வணக்கங்கள் கோவை, தமிழ் பண்பாட்டு மையம் வருகிற ஜனவரி 20,21,22 தேதிகளில் « தாயகம் கடந்த தமிழ் » என்ற பெயரில் ஒரு மாநாடொன்றை ஏற்பாடு செய்துள்ளார்கள். நிகழ்ச்சிநிரல்: http://www.webdesignersblog.net/tamil/programme.php பங்களிப்போர் http://www.webdesignersblog.net/tamil/presenters.php வணக்கத்துடன் நா.கிருஷ்ணா 20 ஜனவரி 2013 திங்கள் மாலை 6 மணி: துவக்க விழா 21 ஜனவரி 2013, செவ்வாய் காலை 9:30 மணி-11-30 மணி வரை: அமர்வு 1 தாயகம் கடந்த தமிழ்: ஓர் அறிமுகம் தலைமை: முனைவர்.ரெ.கார்த்திகேசு பேரா. கிருஷ்ணன் மணியம்: மலேசியத் தமிழ் இலக்கியம் முனைவர்: […]
ஜோதிர்லதா கிரிஜா கச்சேரி நாள்கள் தொடங்கிவிட்டன. இந்த சபாக்காரர்கள் ஏன் தான் இப்ப்டி ஒரு நடுக்கும் குளிர் காலத்தில் கச்சேரிகளுக்கு ஏற்பாடு செய்கிறார்களோ தெரியவில்லை. இசை மீதுள்ள ஆர்வத்தால் தங்கள் உடல்நிலை பாதிக்கப்படக் கூடிய சாத்தியக்கூற்றைக் கூடப் பொருட்படுத்தாமல் ஏராளமான மக்கள் மார்கழிக் குளிரில் பாட்டுக் கேட்கக் கூடிவிடுகிறார்கள். கம்பளிச் சட்டை அல்லது போர்வை போன்றவற்றால் தங்களைப் பாதுகாத்துக்கொண்டு நெஞ்சின் குறுக்கே அடக்க் ஒடுக்கமாய்க் கைகளைக் கட்டிக்கொண்டு அமர்ந்து இசையைக் கேட்கிறார்கள். சிலர் தலைகளிலும் கம்பளிச் சால்வைகள் […]
புனைப்பெயரில். லிட்டில் இந்தியாவில் கலவரம், தமிழர்கள் 27 பேர் கைது. வாகன விபத்து. ஒருவர் மரணம். தொடர்ந்த 400 பேர் கலவரம். தொடர்ந்து, அந்த ஊர் நாட்டான்மைகள் சொல்லுகிறார்கள், சிங்கப்பூரியன்ஸ் இதை செய்திருக்க மாட்டார்கள், கூலி வேலை கும்பல் குடிபோதையில் செய்த ரகளையே இதென்று. எந்த ஒரு தேசத்திலும், ஒரு வாகன விபத்து 400 பேரை கலவரம் செய்யத் தூண்டாது… செத்தவர் பத்தோடு பதினொன்றான “ஆம் ஆத்மி”யாக இருக்கும் போது. சிங்கப்பூரில் செத்தவரும் ஒரு ஆம் […]
ஜி. ஜே. தமிழ்ச்செல்வி. பாதை இல்லா மேடு பள்ளத்தில் பயணம் செய்யும் பார்வை மின்சார மில்லா விளக்கின் மையிருட்டுத் துணையோடு ! கருமை போர்த்திய நிழலுருவங்கள் பார்வையில் பென்சில் ஓவியங்களாக. கீற்றாய் துணைக்கு வந்த மஞ்சள் ஒளி நிலவின் கொடையாய் கொஞ்சம் கஞ்சத் தனத்துடன். தனித்திருக்கிறேன் என்று சொல்லிக் கொண்ட போது குளிர் காற்றும், கொசுவும் முணுமுணுக்கும் துணைக்கு நாங்கள் என்று. தனித்தில்லாத நான் தனிமை தனிமை தனிமை என்று நித்தம் பிதற்றுகிறது அர்த்தங்க ளற்று. உணர்வுகள் வேறு படுகிறது சந்திக்கும் உயிரினங்களின் மன ஈர்ப்பிற்கு […]
[சென்ற வாரத் தொடர்ச்சி] சீதாயணம் படக்கதை -11 நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா வடிவமைப்பு : வையவன் ஓவியம் : ஓவித்தமிழ் படம் : 20 & படம் : 21 [இணைக்கப் பட்டுள்ளன] ++++++++++++++++++ காட்சி ஆறு முடிவை நோக்கிச் சீதா [படம் :1] இடம்: வால்மீகியின் ஆசிரமத்துக்கு அருகில் பெரிய மலைகள் சூழ்ந்துள்ள காடு. நேரம்: மாலை வேளை பங்குகொள்வோர்: வால்மீகி, இராமன், சீதா, […]
அத்தியாயம்-13 சிசுபாலவதம் பகுதி -1 யுதிஷ்டிரரின் ராஜசூய யாகம் தொடங்கியது. பல்வேறு தேசங்களிலிருந்து மன்னர்களும் மக்களும் குவியத் தொடங்கினர். சாதாரண குடிமகனிலிருந்து வேள்விக்கு வந்திருந்த முனிவர்கள் வரை அனைவருக்கும் வேள்வி எவ்வித தடங்கலும் இன்றி முடிய வேண்டுமே என்பது கவலையாக இருந்தது. அப்படி ஒரு மகா வேள்வி நடந்து முடிவதற்கு பாண்டவர்கள் தமது நட்பு மன்னர்களுக்கென்று சில பொறுப்புகளை ஒப்படைத்திருந்தனர். துச்சாதனுக்கு விருந்து மேற்பார்வை; வரவேற்புக் குழுவின் தலைவராக சஞ்சயன். கிருபருக்கு பரிசுப் பொருட்களின் மேற்பார்வை.; துரியோதனனுக்கு […]
புகழ் பெற்ற ஏழைகள் (முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத்துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 37.பாரதத்தாயின் தவப்புதல்வராகத் திகழ்ந்த ஏழை………… “வெள்ளிப் பனிமலையின் மீதுலாவும் – அடி மேலைக் கடல் முழுதும் கப்பல்விடுவோம்! பள்ளித் தளமனைத்தும் கோவில் செய்குவோம் நம் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்!” அடடா வாங்க… வாங்க…அற்புதமா பாரதியார் பாட்ட பாடிகிட்டே வர்ரீங்க..ரொம்ப அருமையான பாட்டுங்க…ஆமா போன […]
விஜயலஷ்மி சுஷீல்குமார் “உங்களுக்கு என்னங்க? ராணி மாதிரி உங்கள பாத்துக்கும் புருஷன்! ஏழு தலைமுறைக்கும் இருக்கற சொத்து..ம்ம்ம்..இதுக்கு மேல என்னங்க வேணும்?” என்று பெருமூச்சு விடும் சொந்தத்துக்கு தெரியுமா சுமித்திரையின் வேதனை? “இங்க இவ்வளவு சொத்து இருந்து என்ன பிரயோஜனம்? திருமணமாகி பதின்நான்கு வருடங்கள் உருண்டோடியும் ஒரு குழந்தை அம்மா என்று அழைக்கும் பாக்கியம் இல்லாது போனது எந்த ஜென்மத்து பாவம்? அதுவும் மருத்துவரீதியாக தன்னால் குழந்தையை பெற முடியாது என்று மருத்துவர் கூறிய அன்று; அந்த […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.youtube.com/watch?v=4RAhfoYvfyU http://arxiv.org/abs/1312.1265 [Dec 4, 2013] ஊழி முதல்வன் மூச்சில் உப்பி விரியும் பிரபஞ்சக் குமிழி சப்பி மீளும் ஒரு யுகத்தில் ! விழுங்கிடும் கருந்துளைக் கும்பியில் உயிர்க்கும் ஒளிமீன் கோள்கள் ! விண்வெளி விரிய விண்ணோக்கியின் கண்ணொளி நீண்டு செல்லும்! நுண்ணோக்கி ஈர்ப்புக் களத்தை ஊடுருவிக் காமிரா கண்வழிப் பூமிபோல் தெரியும் பேரளவுக் கோள்கள் பற்பல ! சூரிய மண்டலம் போல் […]
புனைப்பெயரில். ஹோட்டல் தொழில் என்றவுடன் தமிழர்களுக்கு யார் ஞாபகம் வரும்..? சரவணபவன் அண்ணாச்சி தான். அவர் எங்கு போய் படித்தார்..? சுவிஸ்ஸிலா கேட்டரிங் படித்தார்… ஓட்டை சைக்கிள்… தோற்ற முதல் ஹோட்டல் முயற்சி.. ஆனால், அடியில் சுரக்கும் அந்த இலட்சிய வெறி… மீண்டும் அவரை ஹோட்டல் தொழிலுக்கு இழுத்தது…. இயக்குனர் பாலா எந்த பிலிம்மு இண்ஸ்டிடியூட்டில் படித்தார்..? அமெரிக்கன் பிலிம் அக்காடம்மியிலா..? இல்லை லண்டன் பிலிம் ஸ்கூலிலோ, புனோ பிலிம் அல்லது சென்னை பிலிம் இன்ஸ்டிடியூட்டிலா..? ( […]