அதுவல்ல நீ

This entry is part 9 of 10 in the series 22 டிசம்பர் 2024

தொலந்து போன  காலடி சுவடுகளை  தேடி அலையும் மனசு.  தேடாமல் தேட  நொண்டியாடி வருவான்  அவ்வப்போது.  தொலைதூர பூங்காவில்  கேட்கும்  ரகசிய பயணிகனின்  வாழ்க்கை ரகசியங்கள்  எந்த குகையில்  தேடினாலும்  உள்ளூக்குள் இருட்டு.  வெளிச்சமேற்றிய  கன்னியோ  காயப்பட்டு போனாள்  தொடர் அறுவை சிகிச்சையால்.  சகியே  சொல்லடி  எந்த சாவியை  எந்த மனதில்  வைத்துள்ளாய்.  உனக்காக நான்  நதியில் நீராகப்போகும்  தருணத்தில்  படகுக்காரன்  கரம் நீட்டி  அலைப்பாயா  சகியே  சொல்லடி.  மீண்டும் மீண்டூம்  பிறந்துன்னை  தொட அலைந்தாலும்  நீண்டூக்கொண்டே […]

திறக்காத கதவின் மன்றாட்டம்

This entry is part 8 of 10 in the series 22 டிசம்பர் 2024

ரவி அல்லது தேவகுமார பாடுகளின்திருப்பலியில்சிதறியோடியமந்தையைசேகரம்பண்ணஜீவிக்கும்பொருட்டு.உயிர்தெழும்உன்னத சுவிசேஷத்தில். ஹிருதய சுத்தியற்றவிசுவாசகீதங்கள்இசைத்த வண்ணமிருக்கிறதுபரலோக சாம்ராஜ்யத்தைபற்ற முடியாதபரிசேய பாங்கில். நித்திய ஜீவியத்தில்நானே வழியெனதட்டும் கதவுகள்போஜனம்பண்ணாதபுதிராகதிறக்கப்படாமல் இருக்கிறதுஎப்பொழுதும்பெலனாகாத ஜெபித்தலில் மட்டும் ப்ரியம் பண்ணி.  -ரவி அல்லது.ravialladhu@gmail.com

முகராத வாசனையின் நோதல்

This entry is part 7 of 10 in the series 22 டிசம்பர் 2024

ரவி அல்லது வழித்தெடுத்த நேசத்தை வாசனை திரவியமாக தடவினேன்.  இக் கமகமத்தலைத்தான்.  இவர்கள் காதலென்கிறார்கள்.  நான் கசிந்துருகும் உயிர்த்தலென்கிறேன்.  இங்குதான் என்னுலகம் வேறாகிப்போனது பித்தனென இவர்கள் பிதற்றுவதற்கும் பிறகென்னை வெறுப்பதற்குமான அந்நியப் போக்கில்.  *** -ரவி அல்லது.  ravialladhu@gmail.com

குலதெய்வம்

This entry is part 6 of 10 in the series 22 டிசம்பர் 2024

                          வளவ. துரையன் இரண்டாம் ஆட்டம் பார்த்துவிட்டு இரவில் வருகையில் சிறு சலசலப்பும் சில்லென்று அடிமனத்தில் அச்சமூட்டும். அதுவும் கட்டைப்புளிய மரம் நெருங்க நெருங்க அதில் ஊசலாடிய கம்சலா உள்மனத்தில் உட்கார்ந்து கொள்வாள். அங்கிருக்கும் சுமைதாங்கிக்கல் அந்த இருட்டில் ஆறு பேர் நிற்பதாகத் தோன்றும். பகலெல்லாம் அதனடியில் பழம்பொறுக்கிச் சீட்டாடும் பாவிகள் எங்குதான் போனார்கள் என்று என்மனம் ஏசும். நடையை வேகமாகப் போட நான் நினைத்தாலும் கால்கள் பின்னலிடும். இத்தனைக்கும் புளியமரம் பக்கத்திலிருக்கும் வேப்பமரம்தான் எங்கள் குலதெய்வம்.

வாக்குமூலம்  

This entry is part 5 of 10 in the series 22 டிசம்பர் 2024

                                —வளவ. துரையன்                   நான் உன்னை முழுதும் மறந்துவிட்டதாக நினைக்கிறேன். ஆனாலும் உன் நினைவுகளெல்லாம் பலாச்சுளைகளை  மொய்க்கப் பறந்து வரும்  ஈக்களாக வருகின்றன. தண்ணீரில் மிதக்கவிட்டக் காகிதக் கப்பல் கவிழ்ந்து விடுமோவெனக் கலங்கும் சிறுவனின் மனமாய்த் தவிக்கிறேன். மலர்த்தோட்டத்தில் எல்லாமே மணம் வீசினாலும் மனத்தில் ஒன்றுதானே வந்தமர்கிறது. இறுதியில் முன்னால் ஓடுபவனை வெற்றி பெற விட்டவனாய்த் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.

வாழ்க்கை

This entry is part 4 of 10 in the series 22 டிசம்பர் 2024

அன்று என் முப்பதுவயதுப் பண்டிகையில் ஆயிரம் வெள்ளியில் எனக்கு உடுப்பு ஐம்பது வெள்ளியில் அப்பாவுக்கு உடுப்பு இன்று  எழுபது வயதில் என் பிள்ளைகளின் பண்டிகையில் ஐயாயிரம் வெள்ளியில் அவர்களுக்கு உடுப்பு ஐம்பது வெள்ளியில் எனக்கு உடுப்பு விட்டெறிந்த கல்லாய் வட்டப் பயணமாய் வாழ்க்கை அமீதாம்மாள்

எனக்கு ஒரு கோப்பை மது கொடுங்கள்

This entry is part 3 of 10 in the series 22 டிசம்பர் 2024

ப.மதியழகன் 1 சிறுசிறு துயரங்கள் என்னை வேதனையின் அடிஆழத்திற்கு இழுத்துச் செல்கின்றன ஒரு கோப்பை மதுவோடு ஒரு துளி விஷத்தைக் கலந்து எனக்குக் கொடுங்கள் என்னை மறந்திருக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் நான் செய்து கொள்கிறேன் எனது பகுத்தறிவு எப்போதும் கடவுளுக்கு இடம் கொடுத்ததில்லை எனது மனதின் அறைகூவல்கள் பிரபஞ்சத்தில் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கின்றன இவர்களையெல்லாம் சந்திக்க வைத்த விதியை நான் நொந்து கொள்வதைத்தவிர எனக்கு வேறு வழியில்லை இறக்கும் வரை பிறரிடம் இரந்து பெறவேண்டிய […]

திருக்குறளும் செயற்கை நுண்ணறிவியலும்

This entry is part 2 of 10 in the series 22 டிசம்பர் 2024

முனைவர் மு.பழனியப்பன், தமிழ்த்துறைத் தலைவர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை மனித சிந்தனை வளத்தின் களஞ்சியம் திருக்குறள். திருக்குறளின் சிந்தனைகள் எக்காலத்திற்கும் ஏற்றவை. தேவையானவை. மனிதனில் உதிக்கும் அத்தனை சிந்தனைகளுக்கும் வழியும், வாய்ப்பும், தெளிவும் திருக்குறளில் உண்டு. தற்காலத்தில் கணினித் துறையின் புதிய சிந்தனை மற்றும் செயல் வளமாக விளங்கும் செயற்கை நுண்ணறிவியல் துறைக்கான  பல கூறுகளும் அத்துறையின் சிந்தனை மற்றும் செயல் நேர்த்திக்கும் வழிவகை காட்டுகின்றது திருக்குறள். திருக்குறளை இன்றைய செயற்கை நுண்ணறிவியல் […]

மொகஞ்சதாரோ 

This entry is part 1 of 10 in the series 22 டிசம்பர் 2024

மனிதர்கள்  சந்தித்துக்கொள்ளும்  பாதையில்  சுவர்ண பட்சிகள்  வருவதில்லை. வறண்டு போன  நதிகளின் கண்ணீர்  கதையை  அவைகள் கேட்ட பிறகு  மனித வாடை  துர்நாற்றம் வீசுவதாக  புகார் கூறுகின்றன.  இடிந்து போன  அரண்மனையின்  கடைசி செங்கல்லில்தான்  பட்சி வளர்த்த கடைசி மன்னனின்  சமாதி இருந்தது.  இரவில்  பட்சிகள் வந்து  மெளன ராகம் பாடி செல்லும்.  வறண்ட நதியின்  கர்ப்பத்தின்  ஆழமான  சதைப்பிண்டங்களை  அள்ளி சென்றனர்  இரக்கமற்ற மனிதர்கள்.  ஒவ்வொரு மணித்துளிகளில்  காசை வலக்கையில் வாங்கி  கஜான ரொப்பினார்கள். மறைந்து […]

நட்சத்திரங்களுக்கு நடுவே ஒலிக்கும் இசை – சாந்தி மாரியப்பனின் “நிரம்பும் வெளியின் ருசி”

This entry is part 10 of 10 in the series 22 டிசம்பர் 2024

ராமலக்ஷ்மி ( இன்று பெங்களூரில் ஆரம்பமாகி 29 டிசம்பர் வரை நடைபெறவுள்ள ‘தமிழ்ப் புத்தகத் திருவிழா’ வில் இந்நூல் வெளியாகவுள்ளது. நூலில் இடம் பெற்ற எனது அணிந்துரை) வாழ்வின் ஒவ்வொரு காலக் கட்டமும் சொல்லப்படக் காத்திருக்கும் ஓர் அனுபவக் கதை. அப்படியான தனித்துவமான சொந்த அனுபவங்களின் மூலமாக வாழ்க்கை, மனிதர்கள் மற்றும் சமூகம் குறித்த தனது பார்வைகளை சிந்தனையைத் தூண்டும் வகையில் முன் வைத்துள்ளார் ஆசிரியர். ‘தமிழ் மணம்’ திரட்டி சிறப்பாக இயங்கி வந்த வலைப் பதிவர்களின் […]