கிறிஸ்துமஸ் பரிசு!

This entry is part 19 of 29 in the series 25 டிசம்பர் 2011

அந்தச் சாக்கடை முடைநாற்றத்தில் இவர்கள் எப்படிக் குடித்தனம் நடத்துகிறார்களோ? வானமே கூரை!பேருந்து நிலையத்தின் பக்கவாட்டுச் சுவர்தான் ஒரே சுவர்; நான்கு பக்கச் சுவரெல்லாம் இந்தக் குடித்தனத்துக்கு கிடையாது. அந்தச் சுவரில் எப்படியோ போட்ட கள்ளத்தனமான துளையில் ஒரு குச்சியைச் செருகி பழைய கந்தல் சாக்கை ஒட்டுப்போட்டு தைத்து முன் பக்கம் நடப்பட்ட இரண்டு குச்சிகளில் இணைத்துக் கட்டியிருப்பதுதான் அவர்களுக்குரிய இடம் என்பதைத் தெரிவிக்கும் அடையாளம்! இப்போது ஓரளவுக்கு உங்களுக்கு இது யாருக்குச் சொந்தமான குடித்தனம் என்று யூகித்திருப்பீர்கள். […]

அம்மாவும் பூனக்குட்டியின் கனவுகளும்

This entry is part 18 of 29 in the series 25 டிசம்பர் 2011

அம்மா வளர்த்த பூனையும் குட்டி ஈன்றது கருப்பும் வெள்ளையும் கலந்த நிறத்தில் காந்தக் கண்களோடு பளிச்சென்று ஓரே குட்டி பிறிதொரு நாளில்… பாட்டி அனுப்பிய பட்சணங்களோடு என்னருகில் அமர்ந்திருந்தாள் வாஞ்சையோடு தலை கோதியபடி அம்மா விண்ட பட்சணத்தை என் வாய் திணிக்கையில் ’மியாவ்’ என்றதும் தரையில் எறிந்த துண்டத்தை முகர்ந்து மேசையினடியில் உறங்கிய தாய் மடி பற்றி எம்பிப் பார்த்ததும் சாட்சாத் அம்மாவின் பூனைகுட்டியே பூனையின் கனவுகளும் நமக்கானதே! -தம்பி பிர்தோஸ்

அட்டாவதானி

This entry is part 17 of 29 in the series 25 டிசம்பர் 2011

சிலிக்கான் சில்லில் சேமித்து வைக்காத எதுவும் நினைவிலிருப்பதில்லை இரண்டையும் நான்கையும் கூட்ட கை விரல்கள் நீட்டி யாரும் முயற்சிப்பதில்லை மின்தூக்கிக்கென அரை மணி நேரம் காத்திருப்பினும் நான்கே நான்கு படிகள் ஏறிச்செல்ல யாருக்கும் முடிவதில்லை. ஃபேஸ்புக் நினைவூட்டாவிடில் தனது பிறந்தநாளை யாரும் கொண்டாடுவதேயில்லை. தீர்ந்துவிட்ட எரிவாயு உருளைக்கு பதிவு செய்ய செல்பேசி நினைவூட்டாவிடில் இயல்வதில்லை இவையெல்லாவற்றையும் அதிகாலையில் நினைவூட்ட அலாரம் இன்றி எழ முடிவதில்லை – சின்னப்பயல் ( chinnappayal@gmail.com )

எப்போதும் புத்தாண்டே! என்றும் புத்தாண்டே!

This entry is part 16 of 29 in the series 25 டிசம்பர் 2011

கண்ணே என் கண்மணி மனிதனே வாழ்வை அனுசரி இயற்கையைக் கொண்டு! குளிர்ந்து கொண்டே விடியும் பொழுதில் வெப்பம் தேடுவது இயற்கையை மறுப்பதாகும்! வெயில் மொண்டு வரும் பகலில் நீ குளிர் பருக நினைப்பது இயற்கையை எதிர்ப்பதாகும்! மூடிய அறையில் வாடிடும் உடல் கொண்டு தளர்ந்திட நீ பிறக்கவில்லை இருப்பதின் ரகசியம் , இருப்பதிலேயே சிறந்த சொல்லைக் கண்டிடும் மனதுடன் வாழ்தலைக் கண்டிடல்! இறந்தவர் சொல்படி இழந்திடும் கணங்களை – துடித்திடும் நிகழ்வினில் பொருந்தித் தவிப்பதை தவிர்த்திடு ! […]

கடைச்சொல்

This entry is part 15 of 29 in the series 25 டிசம்பர் 2011

கிளையிலிருந்து தரைக்கு வீழ்கிற இலையைப்  போன்றே கணித நுட்பம் தவிப்பு மனிதர்களின் தந்திர வழி என்கிறார்கள் ? தீர வலிக்குச்செய்து கொள்ளும் நித்தியப்பணிவிடை என்கிறார்கள் ? காதல் ஜோடிகளின் கைகளிலிருக்கிற கடைசி துருப்புச்சீட்டுஎன்கிறார்கள் ? போதுமான தொரு வாழ்விலிருந்து மீளும் சுய விலகல் என்கிறான் ஞானி ஒரு வேளை துடித்தடங்கும் இக்கயிற்றை அறுத்து தரையிறக்குகையில் உடைந்த என் குரல்வளையில் எஞ்சியிருக்கலாம் ஒரு தற்க்கொலையின் காரணத்திற்கான கடைசிச்சொல்

ஐம்பதாண்டுகளில் இந்திய அணுசக்தித் துறையகத்தின் மகத்தான விஞ்ஞானப் பொறியல்துறைச் சாதனைகள் (1954 – 2004)

This entry is part 14 of 29 in the series 25 டிசம்பர் 2011

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அணுசக்தி மின்சார உற்பத்திக்கு இப்போதிருந்து [1944] இன்னும் இருபதாண்டுகளில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப் பட்டால், இந்தியா தனக்குத் தேவையான திறமைசாலிகளைத் தனது இல்லத்திலேயே தோற்றுவித்துக் கொண்டு, அன்னிய நாடுகளில் தேட வேண்டிய திருக்காது. டாக்டர் ஹோமி பாபா  [அணுசக்திப் பேரவை  முதல் அதிபதி] ‘சுருங்கித் தேயும் நிலக்கரிச் சுரங்கங்கள், குன்றிடும் ஹைடிரோ-கார்பன் எரிசக்தி சேமிப்புகளைக் கொண்டு, விரிந்து பெருகும் இந்தியாவின் நிதிவளத்தை நோக்கினால், நூறு கோடியைத் தாண்டிவிட்ட மக்களின் தேவைகளைப் […]

முன்னணியின் பின்னணிகள் – 19 சாமர்செட் மாம்

This entry is part 13 of 29 in the series 25 டிசம்பர் 2011

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் திரிஃபீல்ட் தம்பதிகளை மறுபடி சந்திக்கிறதுக்கு ஒரு ரெண்டு வருஷம் முன்னால், நான் திருமதி ஹட்சன் இல்லத்தில் தங்கியிருந்தேன். வாழ்க்கை அப்போது சீராய் ஓடிக்கொண்டிருந்தது. பகலெல்லாம் மருத்துவமனையில் இருப்பேன். ஒரு ஆறு மணிப்போல வின்சென்ட் சதுக்கத்துக்கு நடந்து திரும்புவேன். லம்பத் பாலத்தருகில் ‘ஸ்டார்’ பத்திரிகை வாங்கிக்கொள்வேன். வந்து ராத்திரி சாப்பிட அழைப்பு வரும்வரை வாசிப்பேன் அதை. சாப்பாடு ஆனதும் ஒருமணி, ரெண்டுமணி தீவிர இலக்கிய வாசிப்பு. மனப்பயிற்சி அது. நான் ஒரு கடும் முயற்சி […]

கல்லா … மண்ணா

This entry is part 12 of 29 in the series 25 டிசம்பர் 2011

  என்னவோ  துரத்துகிறது எப்படியோ  தப்பிக்கிறேன்   போயிராத கோயிலிருந்து பிரசாதம் வருகிறது – கடவுள் கொடுக்க சொன்னதாக ..   ஒடி  ஒடி வருகிறேன் ரயில் கிளம்பிவிட்டது ! பகீர் என்றானது – வாழ்க்கை முடிந்து விட்டது  போல் ..   தோளில் தட்டுகிறார்கள் – திரும்புகிறேன் சிறுவயதில் உடன்  படித்த தோழி. சிரிக்கிறாள் , நானும் சந்தோஷமாக   வீடு வாங்கியதை தேவையற்று சொல்லி கொண்டிருக்கிறேன் – அவள் முகம் கோரமாக மாற தொடங்குகிறது […]

விளக்கு விருது 2010 – தேவதச்சன் பெறுகிறார்

This entry is part 11 of 29 in the series 25 டிசம்பர் 2011

விளக்கு விருது 2010 தமிழின் தனித்துவமான கவிஞராக அடையாளப்படுத்திக் கொண்டுள்ள கவிஞர் தேவதச்சன் 2010 -ஆம் ஆண்டுக்கான விளக்கு விருது பெறுகிறார். திரு சபாநாயகம், திரு சிபிச்செல்வன், பேராசிரியர் ராமசாமி ஆகியோர் கொண்ட விளக்கு நடுவர் குழுவால் கவிஞர் தேவதச்சன்தெரிவு செய்யப்பட்டுள்ளார். “அத்துவான வேளை”, “கடைசி டைனோசார்”, “யாருமற்ற நிழல்”, “ஹேம்ஸ் என்னும் காற்று”, “இரண்டு சூரியன்” ஆகிய கவிதைத் தொகுதிகள் கவிஞரது கவிதை வெளியின் பரப்பை அடையாளப்படுத்துகின்றன. ‘அவரவர் கைமணல்’ என்ற முதல் தொகுதி இவரது […]

வருங்காலம்

This entry is part 10 of 29 in the series 25 டிசம்பர் 2011

இப்படியும் சிந்திக்கலாம்..! (சுனாமிஞாபகார்த்தமாக) அதோ – வெகு தூரத்தில்… யாரும் வாழ்ந்திராத தரைகளாக… முருகைக் கற்பாறைகள் ஏதோ ஜெபிக்கின்றன… கள்ளிச் செடிகள் ஏதோ கதை சொல்கின்றன… கடற்கரை மணலில் ஏதேதோ கால் தடங்கள் கண்டு பிடிக்கப் படாமல் உக்கிய என்புத் துண்டுகள்.. 8.31ல் நின்றுவிட்ட கடிகாரங்கள்… என்றோ பசுமை பேசி பாழடைந்த கிராமங்கள்… இன்னும் கண்ணீர் விடுகின்ற சுறாமீன் முட்கள்… இன்னமும் மூச்சுவிடும் கடல் நீர்த்துளிகள்… எல்லாமே என்ன மாயைகள்…? சென்ற தலைமுறையின் சரித்திரத்தைப் புரட்டிப் பார்ப்போம் […]