மலாயாப் பல்கலைக்கழகத்தில் ரெ.கார்த்திகேசு கருத்தரங்கு. பினாங்கு அறிவியல் பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியரும் தமிழ்க்கூறு நல்லுலகம் அறிந்த இலக்கியவாதியுமான முனைவர் ரெ.கார்த்திகேசு படைப்பிலக்கிய கருத்தரங்கு மலாயாப் பல்கலைக்கழக மொழி, மொழியியல் புலத்தில் 20.3.2016ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியிலிருந்து மாலை 5.00 மணி வரை முழுநாள் நிகழ்ச்சியாக நடைபெறவிருக்கிறது. மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் மலாயாப் பல்கலைக்கழக மொழி, மொழியியல் புலமும் இணைந்து இந்தக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளன. முனைவர் கார்த்திகேசுவின் சிறுகதைகள், நாவல்கள், விமர்சனங்கள், […]
ஜி.ஜே. தமிழ்ச்செல்வி டர்ர்ர்ர்ரென்று டயர் தேயும் சப்தத்துடன் யு டேர்ன் அடித்துத் திரும்பியது அந்த ஆட்டோ. அதன் டிரைவர் அதிகம் குடித்திருந்தான். அதற்குள் ஒரு மூதாட்டி…தன் சுருக்குப் பையை திறந்து உள்ளே இருக்கும் சில்லறைகளைப் பொறுக்கி, அதிலிருந்து இரண்டு ஐந்து ரூபாய் நாணயங்களை வெளியில் எடுத்து, உள்ளங்கையில் அடிக்கிக் கொண்டு, சுருக்கு பையை இடுப்பில் சொருகிக் கொண்டாள். ஆட்டோ போதை லயத்துடன் சாலையில் அலைந்தாடியபடி சென்றது. அதைப் பற்றி அந்த மூதாட்டி அலட்டிக் கொள்ளாது அமர்ந்திருந்தாள். ஏய் […]
தடிமனான புத்தகங்களில் தான் இருக்கின்றன எல்லாத் தத்துவங்களும் கோட்பாடுகளும் அவற்றைப் படித்தவர்கள் அனேகமாய் எனக்கு அது பிடிபடாது என்பதாகவே காட்டினார்கள் வெகு சிலர் கருணையுடன் சில சரடுகளை இவை எளியவை என்றும் தந்தார்கள் ஆனால் அவை சங்கிலிகளாய் ஒரு கண்ணியில் நுழைந்து சிக்கினேன் அடுத்தது என்னை நுழையவே விடவில்லை லேசாயிருப்பது தினசரி ‘நாட்காட்டித் தாட்கள் மட்டுமே தத்துவப் புத்தகங்களைப் பகடி செய்வதாய் என்னையும் லேசாய் சில முன்னேற்ற நூல்களுண்டு அவை எதையும் விளையாட்டாய் எண்ணி மேற்செல் என்பதாய் […]
1. குட்டை குளம் ஏரி ஆறு கடல் சமுத்திரம் இன்னும் கிணறு வாய்க்கால் நீர்த்தேக்கங்கள் எல்லாமும் மழையுமாய் எங்கெங்கும் நீராகி நிற்கும் நிலத்தில்தான் தண்ணீர்ப் பற்றாக்குறையும் குடிநீர் கிட்டாநிலையும் எனத் தெள்ளத்தெளிவாய்த் தத்துவம் பேசுவோர்க்குத் தெரியுமோ ஒரு துளி நீரில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையும் அவற்றின் அலை-துகள் நிலையும் களி நடனமும் பிறவும்….? 2. ஒன்றிரண்டு மூன்றுநான்கு ஐந்தாறு எட்டுபத்து…. ஏழும் ஒன்பதும் விட்டுப்போனதேன் என்று வாய்ப்பாடு ஒப்பித்தலாய்க் கேட்பதற்கு முன் இரண்டான ஒன்றின் நான்கான மூன்றின் […]
இரா. நாகேஸ்வரன். நேற்று வெளிவந்த பொருண்மையீர்ப்பு அலைகளைப் பற்றியக் கண்டுபிடிப்பை வைத்து ஒரு வெண்பா! ஈரேழ் உலகை சூலகத்தில் இட்டவள் சீராய் விரித்த விஞ்சை ஓதுவோம் கூராய் குறுக்கி, பலகணியில் நோக்கிலும் (அதன்) தீரா அழகே/அறிவேச் சிறப்பு [இரண்யகர்ப்பம் போன்ற பேரண்டம் வெடித்து வந்ததை, தெரிந்தவற்றைக் கொண்டுக் காணும் போதும், அதன் அழகு பீடுடையது.] ஏந்திழையின்பொன்சூல் வெடித்தே விரிய___ _ இழையெங்கும் சூழ்கொண் டுழன்றுப் பொடிக்க _ மழையாய், களிகொண்டத் தூள்கூடி கூட்டுத்தூள் விசைபெற்றே ஆன தணு! […]
நேதாஜிதாசன் புலம்பிகொண்டே இருக்கும் நாக்கை அறுத்தாயிற்று கிறுக்கிக்கொண்டே இருக்கும் கையை அறுத்தாயிற்று நடந்து கொண்டே இருக்கும் காலை வெட்டியாயிற்று மூச்சு விட்டு கொண்டே இருக்கும் இதயத்தை பிளந்தாயிற்று. அமைதியாகவே இருக்கும் மீதியை என்ன செய்வதென்றே தெரியவில்லை Surya V.N (Nethajidhasan) Nethajidhasan.blogspot.in
சிறகு இரவி 0 வெனிஸில் விருதுகளைக் குவித்த படம், வெகு ஜன ரசனைக்கு வித்திடுமா? வலிக்க வலிக்க காட்சிகள் ரணமாக நெஞ்சில் அறையும் நிதர்சனமாக ஒரு திரை அனுபவம். 0 ஆந்திர குண்டூரில் பிழைப்புக்காக குடியேறும் பாண்டி, முருகன், அப்சர், மூவரும் கோவை மாவட்டத்தின் கிராமத்து இளைஞர்கள். ஆந்திர காவல்துறை அநியாயமாக மேலிடத்தின் உத்திரவின் பேரில், இவர்கள் மீது பொய்யான களவுக் குற்றச்சாட்டைச் சுமத்துகிறது. குற்றத்தை ஒப்புக்கொள்ள வைத்து வழக்கை முடிக்க தீவிரம் காட்டுகிறது. நீதிமன்றத்தில் பாண்டி […]
– சிறகு இரவி 0 பெங்களூர் வாழ்வை கனவாக எண்ணி வாழும் மூவரின் வாழ்க்கையை சிலிர்ப்புடன் சொல்லும் சுகமான படம். 0 ஜாதக தோஷத்தால் மேற்படிப்பு சிதைந்து, சிவபிரகாஷுடன் சட்டென்று திருமணமாகும் திவ்யா, சிறு வயதிலிருந்தே பெங்களூரை எண்ணிக் கனவு காணும் இளம்பெண். திருமணத்திற்கு பிறகு அவளது வாழ்க்கை கனவின் நீட்சியாக நிதர்சனமாகி பெங்களூரிலேயே வாழும் வாய்ப்பு கிடைக்கீறது. கூடவே அவளது சகோதர்கள் கண்ணனும், அர்ஜுனும் அங்கேயே வர, சந்தோஷ முக்காடலில் திளைக்கீறாள் திவ்யா. தன் பழைய […]
பாவண்ணன் இந்தியாவின் மிகச்சிறந்த பத்து எழுத்தாளர்களின் பட்டியலில் ஒருவரென அனைவராலும் சுட்டிக் காட்டப்படும் ஒரு பெயர் வைக்கம் முகம்மது பஷீர். நேஷனல் புக் டிரஸ்டு வழியாக ஆதான் பிரதான் திட்டத்தின் கீழ் வெளிவந்த அவருடைய ‘பாத்துமாவின் ஆடும் இளம்பருவத்துத் தோழியும்’ நாவல்கள் அவரை இந்தியாவின் எல்லா மொழி வாசகர்களிடமும் கொண்டு சேர்த்தது. மொழிபெயர்ப்பாளர்களின் தனிப்பட்ட முயற்சியால் வெளிவந்த ‘எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது’ ‘மதில்கள்’ ஆகிய இரு நாவல்களும் இந்திய இலக்கியத்தில் பஷீருடைய இடம் […]
லதா ராமகிருஷ்ணன் [*எனது ’வரிகளின் கருணை’ என்ற தலைப்பிட்ட, நவீன தமிழ்க்கவிஞர்களை முன்வைத்து எழுதப்பட்ட 19 கட்டுரைகளைக் கொண்ட நூலில் ( வெளியீடு: சந்தியா பதிப்பகம், முதல் பதிப்பு ஆகஸ்ட் 2005) இடம்பெற்று கட்டுரை இது.] *இக்கட்டுரை புதிய நம்பிக்கை (1997), கணையாழி ஆகிய இதழ்களில் வெளியான பிரம்மராஜன் கவித்துவம் பற்றிய எனது கட்டுரைகள், பிரம்மராஜன் பற்றி ‘பொருநை இந்தியா’ அமைப்பு நடத்திய ஒருநாள் கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட என் கட்டுரை ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் உருவானது. […]