+++++++++++++ Posted on February 15, 2020 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா++++++++++++++++++++++++1. https://youtu.be/Jtsm8eG_oX02. https://youtu.be/PIUnR65R4Qs3. https://www.japantimes.co.jp/news/2020/02/06/world/science-health-world/multiple-eco-crises-trigger-systemic-collapse-scientists/#.Xkg8t2hKi704. https://earther.gizmodo.com/interconnected-ecological-threats-could-trigger-global-18415189125. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/the-cost-of-deadly-air-pollution-in-india-rs-3-39-lakh-per-second/the-burning-economy/slideshow/74112776.cms6. https://www.france24.com/en/20200212-global-cost-of-air-pollution-2-9-trillion-a-year-ngo-report7. https://phys.org/news/2020-02-multiple-eco-crises-trigger-collapse-scientists.html8. https://en.wikipedia.org/wiki/Air_pollution_in_India [Februari 14, 2020]++++++++++++++++++++++++++++++ உலக நாடுகளில் விளையும் நச்சு வாயுக்களால் நாள் ஒன்றுக்கு நேரும் நிதி இழப்புகள்1. இந்தியா : விநாடிக்கு நிதி விரையம் : 3.39 லட்ச ரூபாய் [பிப்ரவரி 13, 2020 தேதியில் மேம்படுத்தப் பட்டது]. ஆண்டுக்கு நிதி விரையம் : 10.7 லட்சம் கோடி ரூபாய்.2. இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் அதிகமாகும் ஆஸ்த்மா நோயில் வருந்தும் குழந்தைகள் புதிய […]
சி. ஜெயபாரதன், கனடா [முக்கோணத்தில் ஒன்றுதான் நேர்கோணமாக இருக்க முடியும் என்று சிவாவின் கணக்காசிரியர் பத்தாம் வகுப்பிலே நிரூபித்துக் காட்டினார்! அந்த மெய்யுரை அவனுக்குப் பச்சை மரத்தில் அடித்த ஆணிபோல் இன்னும் நினைவில் இருக்கிறது. எதிர்பாராது அந்த வீட்டில் சந்திக்க நேரிடும் மூவர் தமது புதிய உறவைத் தம்தம் கோணங்களில் திருப்பப் பார்க்கிறார்கள். பிற கோணங்களைப் புறக்கணித்து நேர் கோணப் பாதையில் மலை ஏறும் போது, முள்ளும் கல்லும் குத்தும்! எதிர்த்துப் பனிப்புயல் அடிக்கும்! முடிவில் சிகரத்தை […]
ஆயிரமாயிரம் கரிய இழைகளான கருப்புப் போர்வை நொடிகள் நிமிடங்களாக நிமிடங்கள் மணிகளாக நீளும் காலதேவனின் வினோத சாலை இறந்தகால நினைவுகள் பின்னிப் பின்னி மறையும் பிரம்மாண்டமான கரும்பலகை உப்பைத் தின்னும் கஷ்டத்தை உணர்த்தி ஓடுகின்றன ஒவ்வொரு கணமும் … பசியைத் தலையில் தட்டித் தூங்க வைப்பது எளிதா ? தூக்கத்தை யாசிக்கும் ஏழை மனத்தின் ஏக்க வினாக்கள் பதிலளிக்கப்படுவதில்லை தூங்காத இரவில் … …
கூடை முள்ளங்கியை முதுகில் ஏற்றிவந்து கடைக்குள் இறக்குவார் லோகதீபன் என்கிற தீபன். ‘ட்ராலி’ அவருக்குத் தேவையில்லாத ஒன்று. கடைக்குள் ஒரு தனி அறையை அவரே உருவாக்கியிருக்கிறார். வெட்டுக்கத்தியால் கூடையைத் திறந்து, சரக்கைக் கொட்டிக் கவிழ்ப்பார். அழுகலோ, வெம்பலோ, வாடியதோ இருந்தால் உடன் சரக்கைத் திருப்பிவிடுவார். ஒரே வாரத்தில் கணக்கு பாக்கியை சுத்தமாக செலுத்தும் ஒரே ஆள் காய்கறிச் சந்தையில் தீபன்தான். அலாவுதீன் கடையில் காய்கறிப் பிரிவு மொத்தமும் தீபன் கையில்தான் இருக்கிறது. நாளொன்றுக்கு 1000 வெள்ளி சம்பாதித்துக் […]
பட்டனை அமுக்கு பற்றி எரியும் இலக்கு எண்ணெய் வேண்டாம் எரிக்க தண்ணீரே போதும் இதயமோ ஈரலோ இல்லாமலே வாழ்வோம் வயசுக்கணக்கு இனி விதியிடம் இல்லை முதுமை பறிப்போம் இளமை நடுவோம் ரத்தம் செய்ய எந்திரம் செய்வோம் மழை வேண்டுமா? தருவோம் கருக்கள் வளர்க்க இனி கருப்பை வேண்டாம் உணவுகள் இன்றியே உயிர் வாழ்வோம் ஆக்குவோம் அழிப்போம் பூமியைப் பிழிவோம் ‘இவனுக்கென்ன பைத்தியமா?’ அமைதியாய்க் கேட்டது ‘கொரோனா’ வைரஸ் அமீதாம்மாள்
’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) புதுவீடு செல்கிறேன். வாடகைக்குத்தான் என்றாலும் விரியுலகே நம்முடையதாக இருக்கும்போது வசிப்பிடம் மட்டும் எப்படி வேறாகிவிடும்! வாடகையை மட்டும் மாதாமாதம் ஐந்தாம் தேதிக்குள் கட்டிவிட முடியவேண்டும்! ஒவ்வொரு முறை வீடு மாறும் போதும் வீடு மாறிச்செல்பவர்களும் ஏதோவொரு விதத்தில் மாறுகிறார்கள் போலும். அட்டைப்பெட்டிகளுக்குள் பொதியப்பட்ட இகவாழ்வை ஒரு வீட்டிலிருந்து வழியனுப்பி இன்னொரு வீட்டிற்குள் அதை மீண்டும் வெளியே எடுத்து விரிக்கும்போது காணாமல் போய்விடும் சில சீப்புகளும் புத்தகங்களும்தான் என்று நிச்சயமாகச் சொல்லிவிட முடியவில்லை. இடம்பெயரும் […]