This entry is part 5 of 9 in the series 19 பெப்ருவரி 2017
முருகபூபதி – அவுஸ்திரேலியா தமிழ் சமூகம் அறியத்தவறிய படைப்பாளுமைகளின் சரிதையை பதிவுசெய்திருக்கும் தொகுப்பு ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் பங்காற்றிய நாற்பது முற்போக்கு ஆளுமைகளின் வாழ்வையும் பணிகளையும் பதிவுசெய்யும் 327 பக்கங்கள் கொண்ட ஒரு நூலை இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் கடந்த (2016) ஆண்டு இறுதியில் கொழும்பில் வெளியிட்டிருக்கிறது. இந்தத் தொகுப்பு நூலிற்கான செயற்திட்டங்கள் சில வருடங்களுக்கு முன்னர் கொழும்பில்தான் மூத்த எழுத்தாளர் நீர்வைபொன்னையன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டதை மின்னஞ்சல் வாயிலாக அறிந்தேன். நீர்வைபொன்னையன், தேவகௌரி, குமரன் […]
மீண்டும் நீண்ட விடுமுறை. இந்த முறை தாம்பரம் சென்று சில நாட்கள் கழித்துவிட்டு சிதம்பரம் செல்ல முடிவு செய்தேன். திருவள்ளுவர் பேருந்து மூலம் சென்னை சென்றேன். மின்சார இரயில் மூலம் தாம்பரம் சென்றேன். என்னைக் கண்ட அத்தை வீட்டினர் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. விடுதி, படிப்பு, தனிமை, தேர்வு என்று இருந்துவிட்டு வந்த எனக்கு அது மாற்றத்தையே உண்டுபண்ணியது. வழக்கம்போல் அத்தை மகள் நேசமணி விழுந்து விழுந்து கவனித்தாள். அவள் பாவம். என்னை வைத்து நிறைய […]
புனித ஜார்ஜ் கோட்டை வரலாற்று சிறப்புமிக்க இடம். பல புனிதர்கள் அங்கிருந்து, நம்மை ஆண்டுள்ளனர். பல நேர்மையான,சிறந்த,அரசியல் அறிவும், நாவன்மையும் கொண்ட பல தலைவர்கள் நாம் பார்த்துள்ளோம். ஓமந்தூரர் முதல், ஜெயலலிதா வரை பல முதன் மந்திரிகள், தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டுள்ளனர். தீடீரென்று, அரசியல் வானில், மன்னார்குடி மங்காத்தா என்ற துர்நட்சத்திரம் ஒன்று தோன்றி, ஒரு ரங்கத்து மாமியை விழுங்கி, முடிவாக தமிழகத்தையும் விழுங்கப்பார்த்தது. இந்த டிவி சீரியலை, பல பெண்கள் பார்த்து, தமிழ் நாட்டு அரசியலை புரிந்துக் […]
அருணா சுப்ரமணியன் அழகிய கவிதை எழுதிட விழைந்தேன்.. நீரூற்றாய் விழுந்த சொற்களை அணை கட்டி தடுத்தனர்……. தடைமீறி வந்த தண்ணீரையும் தடம்மாற்றினர்… வான்தந்த மழைநீரை யாரும் தடுக்க முடியாததால் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சொற்களாக்கி வைத்தேன்… விடுபட்ட வார்த்தைகளுக்காய் வெறும் கோடுகள் வரைந்து வைத்தேன்….. வான்பொய்த்து நீர் வற்றி நிலம் பெயர்ந்து நீயுமற்ற இவ்வேளையில் கோடிட்ட இடங்களை எவற்றைக் கொண்டு நிரப்புவேன்?
பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. +++++++++++++++ [31] இப்புவியில் ஏனென்று, எப்போ தென்று, அறியாது, திக்கற்ற நீரோடை போல் நான் திசைமாறிக், கழிவுமேல் வீசும் காற்றாக, எங்கு போவ தறியேன் குறி நோக்க மின்றி. [31] Into this Universe, and Why not knowing, Nor Whence, like Water willy-nilly flowing: And out of it, as Wind along the Waste, I know not Whither, willy-nilly blowing. […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++ https://youtu.be/iz80BJVDlAM வானை அளப்போம்! கடல் மீனை அளப்போம்! சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்! …… ஆயுதம் செய்வோம்! நல்ல காயுதம் செய்வோம்! ஆலைகள் வைப்போம்! கல்விச் சாலைகள் வைப்போம்! மகாகவி பாரதியார் (பாரத தேசம்) “முன்னேறிவரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள்! இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம். வெண்ணிலவை […]
ஒரு படைப்பு அது சிறுகதையோ அல்லது கவிதையோ எதுவாயினும் எதை அது மையமாக்கி உருவானது என்று பார்ப்போமானால் அதற்கு எந்தவித வரையறையையும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. சாதாரண ஓர் அமாவாசை விரதம் குறித்தும் அது ஒருவரைப் பாடாய்ப் படுத்தி வைப்பதையும் நாஞ்சில் நாடன் ஒரு சிறுகதையாக்கியிருப்பார். ஒரு பெண் எதிர்பாராவிதமாக ஒரு பணக்காரனால் கெடுக்கப்பட்டதை மையமாக வைத்து ஜெயகாந்தன் எழுதியிருப்பார். அப்பாவின் அஸ்தி கரைப்பதை மனத்தைக் கனமாக்கும் விதத்தில் ஜெயமோகன் எழுதியிருப்பார். திருவிழாவில் பொம்மைக்கடை போட்ட […]
எஸ். ஜயலக்ஷ்மி குட்டநாட்டுத் திருப்புலியூர் மலை நாட்டுத் திருப்பதிகளுள் ஒன்று. சோழநாட்டுத் திருப்புலியூரை வேறு படுத்திக்காட்ட, இதைக் குட்டநாட்டுத் திருப்புலியூர் என்று அழைக் கிறார்கள். எம்பெருமான் திருநாமம் மாயப்பிரான் தலைவியும் தோழியும் நாயகியின் நடவடிக்கைகளை அவள் தாய் தெரிந்து கொள்வதற்கு முன்பாகவே தோழி தெரிந்து கொண்டு விடுவாள். சில சமயம் நாயகியே தன் அந்தரங்கங்களைத் தோழியிடம் பகிர்ந்து கொள்வாள். தன்னுடைய காதல், காதலன், தங்களுடைய சந்திப்பு இவற்றையெல்லாம் தாயிடம் பகிர்ந்து கொள்வதை விட தோழியிடம் பகிர்ந்து கொள்வதையே […]