மதுவந்தி lemon Orzo எலுமிச்சை ஆர்ஸோ இது பொதுவாக எல்லோராலும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு. இதில் உங்கள் விருப்பத்துக்கேற்ப மாறுதல்களையும் செய்து கொள்ளலாம். தேவையான பொருட்கள் ஆலிவ் எண்ணெய் பூண்டு சிக்கன் ப்ராத் அல்லது வெஜிடபிள் ப்ராத் ஆர்ஸோ உப்பு மிளகு தேவையான அளவு ஒரு எலுமிச்சை பார்ஸ்லி மேலே அழகுக்கு தூவ செய்முறை
இரா முருகன் CE 300, CE 5000 கூத்து ஆடி முடித்துப் போகிற பெண்கள் இலைக் கிண்ணங்களில் உதிர்த்த புட்டும், தேன் பொழிந்து பிசைந்த தினையும் எடுத்துக்கொண்டு அரமர என்று சிரிப்பும் பேச்சுமாகப் போனார்கள். ஆடிய தரையில் தேனும் பழமும் புரட்டிய மாவுத் துகள்களைத் தேடிக் கருநீல எறும்புகள் மொய்க்கத் தொடங்கின. சீனர், ஆட்டத்தையும் பாட்டையும் அணுவணுவாக ரசித்துப் பார்த்து அந்த அனுபவத்திலேயே மனம் தொடர்ந்து சஞ்சரிக்கக் கொஞ்சம் கண்மூடி மரத் துண்டில் அமர்ந்திருந்தார். அவர் முன்னும் […]
குரு அரவிந்தன். பேராசிரியர் பசுபதி அவர்களை கனடாவில் தான் முதன் முதலாகச் சந்தித்தேன். அமைதியான, சிரித்த முகத்தோடு எல்லோரோடும் அன்பாகப் பழக்ககூடிய ஆழ்ந்த இலக்கிய அறிவு கொண்ட மனிதராக அவரை என்னால் இனம் காணமுடிந்தது. அதன்பின் அவரை அடிக்கடி ரொறன்ரோ தமிழ் சங்கத்தில் சந்திப்பதுண்டு, அவரது உரைகளையும் கேட்டிருக்கின்றேன். அதுமட்டுமல்ல, அவரோடு ஒருநாள் உரையாடியபோது, அவர் தன்னை எனது வாசகன் என்று சொல்லி என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்திருந்தார். ரொறன்ரோவில் நடந்த ஒரு நிகழ்வில், சிந்தனைப்பூக்கள் எஸ். பத்மநாதன் […]
(கட்டுரை: 6) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அகிலத்தின் மாயக் கருந்துளைகள்அசுரத் திமிங்கலங்கள் !உறங்கும் பூத உடும்புகள் !விண்மீன் விழுங்கிகள் !இறப்பின் கல்லறைகள் !பிரபஞ்சச் சிற்பியின்செங்கல்கருமைப் பிண்டம் !சிற்பியின் கருமைச் சக்திகுதிரைச் சக்தி !கவர்ச்சி விசைக்கு எதிராகவிலக்கு விசை !கடவுளின்கைத்திறம் காண்பதுமெய்ப்பாடு உணர்வது,மூலம் அறிவது,மனிதரின் மகத்துவம் ! கடவுள் எப்படி இந்த உலகைப் படைத்தார் என்று நான் அறிய விரும்புகிறேன். இந்தக் கோட்பாடு அந்தக் கோட்பாடு என்பதைக் கேட்பதில் எனக்கு இச்சையில்லை. அந்தப் படைப்புக் […]
சி. ஜெயபாரதன், கனடா மனிதனுக்குசெவிகள் இரண்டு,கடவுளுக்குகாதுகள் ஏது மில்லை.மனிதனுக்குகண்கள் இரண்டு,கடவுளுக்குகண்கள் ஏது மில்லை.மனிதனுக்குசுவாசிக்க மூக்கும்வாயும் உள்ளன.கடவுளுக்குமூக்கு மில்லை,பேச நாக்கு மில்லை.மனிதனுக்குகாலிரண்டு, கையிரண்டு.எங்கும் நிறைந்தகடவுளுக்குகை, கால்கள் எதற்கு ?மனிதனுக்குஉடல் உண்டு, உணவுண்டு.கடவுளுக்குகால வெளியே உடம்பு.மனிதனுக்குஇருப்பது சிறுமூளை.கடவுளுக்குஉள்ளது பெருமூளை.மனிதருக்குபல்வேறு முகமுண்டு ,அடையாளம் காண்ப தற்கு.கடவுள்முகம் அற்றது.பிறப்பும், இறப்பும்சுழற்சியாய்பெற்றது மனிதன்.கடவுள்பிறப்பு இறப்புஅற்றது.வயிற்றுக்குள் வளரும்யானைக் குட்டிதாயைக் காண முடியாது.கடவுள்உருவைக் காண்ப தற்குபிரபஞ்ச விளிம்யைகடக்க வேண்டும்,நர மனிதன் !
முரளி அகராதி கசந்து போன கடந்த காலத்தையும், வெளுத்துப் போன நிகழ்காலத்தையும் கொண்டிருந்தது. இனியாவது இனித்திருக்க வேண்டி கனத்த கருப்பட்டியை தன்னுள்ளே கலந்து நுனிநாக்கில் அது இனிக்க இனிக்க பேசுகிறது என்னிடம். முரளி அகராதி, அரியலூர்,
ச. இராஜ்குமார் 1) வேகத்தடையில் குலுங்கும் தண்ணீர் லாரி இறைத்துவிட்டுச் செல்கிறது மழை ஞாபகத்தை ……! 2) வைரமாய் ஜொலிக்கிறது இரவு பனித்துளியில் நனைந்த தும்பியின் இறக்கைகள். 3) சுழலும் மின்விசிறி கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது தேனீர்க் கோப்பையின் சூடு …!! ச. இராஜ்குமார் திருப்பத்தூர் மாவட்டம்
குரு அரவிந்தன் 1 – காட்டுப் பன்றிகள் யூன் மாதம் 23 ஆம் திகதி சனிக்கிழமை, காலை நேரம் வானம் வெளித்திருந்தது. பாடசாலை விடுமுறையாகையால், வழமைபோல அவர்கள் தங்கள் துவிச்சக்கர வண்டியை எடுத்துக் கொண்டு பெற்றோரிடம் சொல்லி விடை பெற்றுக் கொண்டு கிளம்பினார்கள். சிறுவர்களாக இருந்தாலும், அன்று பயிற்சி நாள் என்பதால் உதைபந்தாட்டக் குழுவினரான அவர்களின் பயிற்றுநரின் வீட்டிற்குச் சென்றார்கள். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விளையாட்டுப் பிடிக்கும், அதுமாதிரி இவர்களுக்குக் உதைபந்தாட்டம் பிடித்திருந்தது, பிடித்திருந்தது என்று சொல்வதைவிட உதைபந்தாட்டத்தில் […]
முனைவர் என்.பத்ரி ஒரு அரசுக்கு வருமானம் என்பது அந்நாட்டின் மக்கள் செலுத்தும் பல்வேறு வரிகள் மூலம் கிடைக்க கூடிய வருவாயை குறிக்கிறது. அதை கொண்டு தான் அரசு தன்னுடைய மக்களுக்கான நலத்திட்ட பணிகளை சிறப்பாக செயல்படுத்த முடியும்.இந்நிலையில், ஒரு நாட்டின் வரி வருவாய் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒரு நாட்டின் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் உத்தேச வருவாய் எவ்வளவு இருக்கும் என்பது மிகவும் தெளிவாக குறிப்பிடப்படும். அதில் குறைவு ஏற்படின் மக்களுக்கான நலத்திட்டங்கள் […]
மூர் தளபதி ஒத்தல்லோ & பணியாள் புருனோ நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன] ஒத்தல்லோ : வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி] [45 வயது] மோனிகா : செனட்டர் சிசாரோவின் மகள். ஒத்தல்லோவின் மனைவி [25 வயது] புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன் [30 வயது] காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது] ஷைலக் : செல்வந்தச் சீமான் மகன் சிசாரோ : மோனிகாவின் தந்தை.வெனிஸ் செனட்டர் [60 […]