திருப்பூர் பெருமாநல்லூர் சாலை பாண்டியன்நகர் தாய்த்தமிழ்ப்பள்ளியில் ” கதை சொல்லி .. “ நிகழ்ச்சி சனியன்று மருத்துவர் முத்துச்சாமி தலைமையில் நடைபெற்றது. இலங்கையைச்சார்ந்த குழந்தை நூல்கள் எழுத்தாளர் ஓ கே குணநாதன் கலந்து கொண்டு குழந்தைகளின் மன இறுக்கத்திலிருந்து அவர்களை தளர்த்தும் விதமாய் கதை சொல்லி பழக்க வேண்டியதன் அவசியம் பற்றியும், கதை வாசிப்பின் அவசியம், இலங்கை சிறுவர் கதைகளின் மையம் பற்றியும் விரிவாகப் பேசினார். ( எழுத்தாளர் ஓ கே குணநாதன் 45க்கும் மேற்பட்ட […]
முனைவர் கோட்டி திருமுருகானந்தம் சிங்கப்பூர் thiru560@hotmail.com பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சிங்கப்பூர்த் தமிழ்ப் பத்திரிகை உலகில் கொடிகட்டிப் பறந்தவர்களில் சி.கு. மகுதூம் சாயபு குறிப்பிடத்தக்க ஒருவராவார். இக்காலக் கட்டத்தில் சிங்கப்பூரில் வாழ்ந்த யாழ்ப்பாண வண்ணை நகர் சி. ந. சதாசிவ பண்டிதரிடம் முறையாகத் தமிழ் கற்ற இவர் ஆங்கிலம், அரபு மொழிகளில் புலமையுடையவர். மக்களுக்குத் தரமான செய்திகளைத் தரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர். இவர் தீனோதய வேந்திரசாலை என்னும் அச்சகத்தை 1872 ஆம் […]
தருணாதித்தன் மூர்த்தியின் மேசைக்கு அந்த மொட்டைக் கடிதம் வந்து சேர்ந்தது. “அன்புள்ள அய்யா, தங்களுக்கு ” ராமசந்த்ரா பவன்” தெரியாமலிருக்க சாத்தியம் இல்லை. உங்களுக்கும் ராமசந்த்ரா என்றவுடன் மசால் தோசை ருசி நினைவில் நாவில் நீர் ஊறுகிறதல்லவா ? கூடவே உடுப்பி க்ருஷ்ணன் பூஜையும், சண்பகப்பூ மணமும், புல்லாங்குழல் இசையும், தீவிர பக்திமான் உடுப்பி ராம ராவும் நினைவுக்கு வந்தால், நீங்களும் பெங்களூர் நகரத்தின் லட்சக் கணக்கான ராமசந்த்ரா ரசிகர்களுள் ஒருவர் என்பது உறுதியாகிறது. இவை […]
தூக்கம் கலையாத குழந்தையை அம்மா சீருடை மாட்டி பள்ளிக்கு இழுத்துப் போகிறாள் நாளை ஊடக அதிர்வுகள் அடங்காமல் சாலை நெருக்கடியில் புகுந்து புறப்பட்டு பணியிட பரப்பரப்பை நோக்கி விரைய இது ஒத்திகை வேட்கை வேட்டை துரத்தல் வீழ்த்தல் வழி வெற்றிக்கு விதைகளாய் கல்வி வளாக அடக்குமுறை மிரட்டல் வசவு தண்டனை தேடும் போது வெளிப்படும் கூர் நகம் ஒலியில்லாமல் கிழிக்காமல் ஊடுருவி உருக்குலைக்கும் நுண் ஆயுதம் எது தான் சாத்தியமில்லை […]
அந்த ஒரு வார்த்தையில் செத்தேன் நான். உடம்பெல்லாம் ஆடிப்போனது. எதிர்பார்க்கவேயில்லை அவனிடமிருந்து. இதுக்குப் போய் எதுக்குங்க இப்டி? பதறிப்போனது மனசு. பரவால்ல…விடுங்க…அதனால ஒண்ணுமில்ல…. – உடனே மறுதலித்தேன். அந்த முகம் பச்சென்று மனதில் உட்கார்ந்து கொண்டது. கணத்தில் பார்வையிலிருந்து மறைந்து போனான். லிஃப்ட் இறங்கும் சப்தம். விடுவிடுவென்று படிகளில் தாவிக் கீழே போய் ஒரு முறை மீண்டும் பார்க்கத் துடித்தது மனசு. சமநிலைக்கு வந்துதான் போகிறானா? அறிய அவா. ஒரு சத்தியமான உணர்ச்சி மேலீட்டைக் கண்ட […]
நான் இதுவரை எழுதிய அனைத்து ஐந்து நாடகங்களையும் ஒரே தொகுப்பாகத் தொகுத்து ‘எஸ்.எம்.ஏ.ராம் நாடகங்கள்‘ என்ற தலைப்பில் புத்தகமாகக் கொண்டு வந்திருக்கிறேன். நவீனத் தமிழ் நாடக வளர்ச்சிக்கான ஒரு சிறிய பங்களிப்பாக என்னுடைய நாடக முயற்சிகளையும் பதிவு செய்யும் முகமாக இந்தப் புத்தகம் வெளிவருகிறது. இலக்கிய நாடக ஆர்வலர்கள் இந்தப் புத்தகத்தை வாங்கி எனது முயற்சியை ஊக்குவிப்பார்கள் என்று நம்புகிறேன். புத்தகத்தின் அளவு: டெமிபக்கங்கள்: 208 விலை: ரூபாய்: 150 (நூற்றைம்பது) நேரடியாக எனது மின்னஞ்சலில் தொடர்பு கொள்பவர்கள் ரூபாய் 125/- (நூற்று இருபத்தைந்து) […]
சேயோன் யாழ்வேந்தன் சிறுபிள்ளை விளையாட்டுபோல் எளிதான அந்தச் சிறு உதவியைக்கூட நான் அவளுக்குச் செய்யவில்லை. கண்ணீர் மல்க என் கைகளைப் பிடித்து ஒன்றே ஒன்றைத்தான் அவள் கேட்டாள் “உன் கவிதைகளில் என்னையும் ஒரு கதாபாத்திரமாக்கிவிடாதே” seyonyazhvaendhan@gmail.com
பிரம்மராஜன் [ இயற்பெயர் : ஆ. ராஜாராம் ] 1953 – ஆம் ஆண்டு பிறந்தவர்; சேலம் மாவட்டத்துக்காரர். ஆங்கிலப் பேராசிரியரான இவர் கவிஞர் , மொழிபெயர்ப்பாளர் , கட்டுரையாளர் , விமர்சகர் , ஆகிய தளங்களில் அறியப்படுகிறார். ஃபூஷன் இசையும் இயவருக்குத் தெரியும். ‘ ஜென்மயில்’ என்ற இத்தொகுப்பிற்கு ஆனந்த் , ‘ பிரம்மராஜன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். ” பிரம்மராஜன் கவிதைகளை வாசிக்க […]
ஒவ்வோர் ஆண்டும் புத்தகக் கண்காட்சியை முன்னிட்டுப் பொங்கல் மலராக உதயகண்ணன் இலக்கிய மலர் வெளியிட்டு வருகிறார். கடந்த ஆறு ஆண்டுகளாக இதை ஒரு தவமாகச் செய்து வருகிறார். இந்த ஆண்டும் வெளிவந்திருக்கிறது இருவாட்சி. மொத்தம் 32 படைப்பாளிகளின் பல்வகையான படைப்புகள் கொண்ட இம்மலரை எஸ். சங்கர நாராயணன் தொகுத்தளித்துள்ளார். முதலில் கதைகளைப் பார்ப்போம். பாரதி கூறுவார். ”ஏடுகளில் இலக்கியத்தில் வீதியில், தெருவில், நாட்டில் காதலென்றார் களிக்கின்றார். ஆனால் வீட்டில் என்றால் வெறுக்கின்றார்”. [சொற்கள் மாறியிருக்கலாம்] இதை […]