சீன அரசாங்க ஊடகமான க்ஸின்ஹூவா, இந்த வருடம் சீனாவின் கட்டாய உழைப்புமுகாம் முறையை சீர்திருத்தப்போவதாக அறிவித்திருக்கிறது. சீனாவின் புதிய கம்யூனிஸ்ட் தலைவராக பொறுப்பேற்கும் க்ஸி ஜின்பிங் Xi Jinping தனது உரையில் சட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்ளப்போவதாக வாக்குறுதி அளித்ததன் முதல் படி என்று கூறுகிறார்கள். 1957இலிருந்து சீனாவில் இருக்கும் “உழைப்பு மூலம் மறுகல்வி”re-education through labour அமைப்பு, சாதாரண குற்றங்களுக்கு கூட எந்த விதமான நீதிமன்றம், வழக்குறைஞர் இடையீடு இல்லாமல் நான்கு வருடங்களுக்கு சிறை தண்டனை கொடுக்கலாம் […]
எஸ்.எம்.ஏ.ராம் தொடர்பு சாதனங்கள் பல்கிப் பெருகிய காலத்தில் வாழ்கிற நாம், உண்மையிலேயே சக மனிதர்களோடு தொடர்பு கொண்டிருக்கிறோமா? தொடர்பு என்பது என்ன? தொடர்பு என்றால் தீண்டுதல் என்று பொருள் கொள்ளலாமா? எப்படி என் சக மனிதனை நான் தீண்டுவது? உடலாலா? மனத்தாலா? அரூபமான மனம் எப்படி இன்னொரு அரூபத்தை ஸ்பரிசிக்கும்? முதலில் இந்தத் தொடர்பு நிகழ்ந்தாக வேண்டிய அவசியமே தான் என்ன? தொடர்பே இல்லாமல் போனால் தான் என்ன கெட்டு விடும்? என்னைச் சுற்றி […]
ப குருநாதன் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் செ. முஹம்மது யூனூஸின் ‘எனது பர்மா குறிப்புகள்’ என்ற நூலின் தொகுப்பாளர் நண்பர் மு இராமனாதன் என்னிடம் இந்த நூலைப் பற்றி ஹாங்காங்கில் பிறகு நடக்கவிருந்த அந்த நூலின் வெளியீட்டு விழாவில் பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அப்பொழுது இந்நூல் வெளியிடப்பட்டிருக்கவில்லை. முதல் பதிப்பு அச்சில் இருந்தது. ஆதலால், நூலைப் பற்றி நான் அதைப் படித்துவிட்டு பேசுவதற்காக, நூலின் வரைவுப்பிரதியை மின்னஞ்சல் மூலம் எனக்கு அவர் அனுப்பி வைத்தார். […]
புதுதில்லியில் 23-வயது நிரம்பிய ஒரு மருத்துவ மாணவியின்(physio therapist) மேல் நடத்தப்பட்ட பாலியல் வன்முறை இந்திய சமூகப் பிரக்ஞையில் அதிர்ச்சியையும், அரசுக்கு இனிமேலும் வெறுமெனக் கைகளைப் பிசைந்து கொண்டிருக்க முடியாது என்ற கட்டாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதே சமயத்தில் எத்தனையோ பாலியல் வன்முறைகள் கண்டு கொள்ளப்படாமல் போய் விட்டன என்பதையும் மறக்க முடியாது. அவற்றையும் உள்ளடக்கிய தீவிரம், புதுதில்லியில் நடத்தப்பட்ட பாலியல் வன்முறைக்கெதிரான வலுவான எதிர்வினைகளிலும், போராட்டங்களிலும் உட்கிடையாய் இருக்கிறது என்று அரசு எடுத்துக் கொள்வதுதான் சரியானதாக இருக்கும். […]
Dr. Albert Einsein (1879 – 1955) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=saik4xZU8gI http://www.youtube.com/watch?v=CC7Sg41Bp-U&feature=player_embedded [ஐன்ஸ்டைன் பிண்ட சக்தி சமன்பாடு] ஐன்ஸ்டைன் பளு சக்தி சமன்பாடுக்கு விண்வெளியில் புது சோதனை 2013 ஜனவரி 11 ஆம் தேதியில் அரிஸோனா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பௌதிக விஞ்ஞானி ஆன்ரை லெபெட் [Andrei Lebed] ஐன்ஸ்டைன் பளு சக்தி சமன்பாட்டில் ஒரு வினா எழுப்பி உலகப் பௌதிக விஞ்ஞானிகளின் சிந்தனையைக் கலக்கியுள்ளார். ஆயினும் […]
சிறுகதைத் தொகுதிகள் எவ்வளவோ வந்தாயிற்று. படித்தாயிற்று. தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கின்றன. வரத்தான் செய்யும். படித்துக் கொண்டுதான் இருக்கிறோம். வாசிப்பை உழைப்பாய்க் கருதிப் பழக்கப்பட்டதனால் வந்த வினை இது. அப்படியிருப்பதனால்தான் இன்னொரு வசதியும். கொஞ்சம் படிக்க ஆரம்பிக்கும்போதே இது இப்படித்தான், இவ்வளவுதான் என்று புரிந்துகொள்வதும், ஒதுக்கி விடுவதும், குறிப்பிட்ட சிலதாய்ப் படிப்பதும். இன்னொன்று, பலவற்றிலும் இருக்கும் ஒரு ஒற்றுமை. ஒரு தொகுதியின் மொத்தக் கதைகளில் நான்கு அல்லது ஐந்து மட்டுமே சிறந்த கதைகளாய்த் தென்படுவது. […]
டேபிள் மேலே மாதவி எடுத்துக் கொள்ளாமல் தவிர்த்து விட்டுப் போன வைர நெக்லஸ் அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தது போலிருந்தது ரமேஷுக்கு. அவமானப் படுத்தி விட்டுப் போயிட்டாள் என்னும் கோபத்தோடு அதை எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டே….ஷிட்..! எவ்வளவு துணிச்சல் இவளுக்கு…மதிப்புத் தெரியாமல் தூக்கி எரிஞ்சுட்டுப் போறாள் தான் பெரிய அழகின்னு கர்வம். என்கிட்டயே இவளோடு திமிரைக் காண்பிக்கலாமா? இவளுக்கு…..நான் யார்ன்னு காண்பிக்கணும். அவன் இதயத்தை ஏமாற்றம், இயலாமை, பொறாமை, புறக்கணிப்பு அனைத்தும் ஈட்டிபோல் குத்திக் […]
பெங்களூர் கப்பன் பார்க் ப்ரஸ்கிளப்பில்’ தவிட்டுக்குருவி என்று விளம்பரத்துல போட்ருந்தது, சரி , எதோ புத்தக வெளியீடாச்சே அதனால ப்ரஸ்கிளப்பில வெச்சிருக்காங்க போலருக்குன்னு நினைத்துக்கொண்டு போனேன். கப்பன் பார்க்ல இறங்கினதும் திருஜிய கூப்பிட்டு , பாஸ் எங்க கூட்டம்னு கேட்டேன். நீங்க எந்த ஸ்டேச்சூ கிட்ட நிக்கிறீங்கன்னார், அப்டியே விக்டோரியா ஸ்டேச்சூகிட்ட வந்துருங்கன்னார். சரி இப்ப ,எப்பவும் போல சுத்தத்தான் போகுதுன்னு நினைத்துக் கொண்டு ,நடையா நடந்தேன். பெங்களூர்ல இப்ப கொஞ்சம் வெய்யில் அடிக்க ஆரம்பிச்சுருக்கு, அதனால […]
– முஷாரஃப் முதுநபீன் (முஷாஃபி), அன்று கல்லூரியின ‘பெயார்வெல் டே’. நண்பர்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி பிரியாவிடை பெற்றுக் கொண்டிருந்தனர். எல்லோர் கையிலும் ஒரு ‘ஆட்டோகிராப்’ இருந்தது. ஒரே படபடப்புடன் காணப்பட்டாள் சைந்தவி. அவளின் கண்களோ ஆகாஷைத் தேடியது. ஆகாஷ் சைந்தவிக்கு ரொம்ப நெருக்கமானவன். ஆனால் இவர்கள் இருவருக்குமிடையில் ரொம்ப பெரிய இடைவெளி இருக்கும். ஆகாஷை தூரத்தில பார்த்தாளே சைந்தவி குஷியாகிவிடுவாள். கூடவே பதற்றமும் தொற்றிக் கொள்ளும். ஒரே கல்லூரி என்ற படியால் ஆகாஷும் சைந்தவியும் […]
தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com வாழ்க்கையில் ஒவ்வொருவருமே ஏதோ ஒரு வயதில் உற்சாகத்துடன் ஒரு காரியத்தைச் செய்ய முற்படுவார்கள். அதைத் திருமணம் என்பார்கள். எந்த தகுதியும் இல்லாவிட்டாலும் மனிதனுக்கு திருமணம் பண்ணிக்கொள்ளும் அருகதை மட்டும் உண்டு. அது தெய்வம் தந்த எளிமையான வரம். ஆனால் பந்தத்தை நிலை நிறுத்திக் கொள்வது மட்டும் ரொம்ப கஷ்டம். பந்தம் நீடிக்கலாம். ஆனால் அது… எல்லோரும் என்ன நினைத்துக் கொள்வார்கள் என்றோ, ஒழுக்க நெறிமுறைகளுக்கு […]