திங்கள் முதல் வெள்ளிவரை நெடுந்தொடர்களின் நாயகிகளின் குடும்பப் பிரச்சினைகளில் ஒன்றிப்போன மனைவி வார விடுமுறையின் துவக்கத்தில் காரணமின்றி கோபித்துக்கொண்டு மகளின் அறையில் படுத்துக்கொள்ள என்னுடன் படுத்துக்கொண்ட சின்னவன் நெடுநேரமாகியும் தூக்கமில்லாமல் என் தோளிலேயே தவித்திருந்தான் டைனோஸர் கதை கேசம் துழாவிய வருடல் என எந்த முயற்சியும் அவனுக்குத் தூக்கம் வரவழைப்பதில் தோற்க சட்டென எழுந்து மேசையின் இழுவரையில் மடித்திருந்த மனைவியின் இரவு அங்கி ஒன்றை எடுத்துவந்து அதன் முன்கழுத்து வளைவில் தொங்கிய நாடாக்களின் குஞ்சத்தினை நெருடிக்கொண்டிருந்தவன் சடுதியில் […]
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா பின்னிருந்து அது என்னை அழைக்கிறது திரும்பி வரும்படி நான் பிரிந்து செல்லும் தருணத்தில் ! மேகத்தின் இடை வெளி களின் ஊடே தெரியும் உதய வேளை ஒளிக் கற்றைகள் ! காலை மழைப் பொழிவைச் சகிக்காமல் ஓலமிட்டுக் கீச்சிடும் பறவை மீளும்படி என்னை அழைக்கும் மரக்கிளை மறைவி லிருந்து. ஆற்று வெள்ளம் பொங்கி நிழல்களுக் கடியிலே யாரைத் தேடிக் கொண்டு வேகமாய்ப் பாய்ந்து ஓடுகிறது […]
பெருநீரைத் தேடாத நதியையும் வசந்தமாய் மாறாத கூதாளிக்கால மனநிறைவையும் நாம் மொழிவது யாதென்று இயற்கையன்னையவள் சிரத்தைகொளல் வேண்டுமோ. கட்டு முகனையைப் பற்றி நாம் கூறுமனைத்தையும் கவனம் கொள்ள வேண்டுமோ, நம்மில் எவரெவர் இவ்வளியை சுவாசிக்கப் போகிறோம்? நீவிர் ஆதவனுக்குப் பின்நோக்கிச் சென்றால் உமது நிழலையேக் காண்பீர் பகற்பொழுதின் கதிரொளியில் சுதந்திரமாக இருக்கிறீர் நீவிர், மற்றும் இராப் பொழுதின் நட்சத்திரங்களின் முன்னாலும் சுதந்திரமாகவே இருக்கிறீர் நீவிர்; மேலும் சூரிய,சந்திரரும் நட்சத்திரமும் இல்லாத போழ்தும் சுதந்திரமாகவே இருக்கிறீர் […]
கே.எஸ்.சுதாகர் நாளாந்தம் பழகும் சில நண்பர்கள், உறவினர்களிடமிருந்து சிலவேளைகளில் சொல்லாமல் கொள்ளாமல் தொலைபேசி அழைப்புகள் நின்றுவிடுவதுண்டு. எங்காவது வெளிநாட்டுக்குப் பயணம் செய்வதற்காகவோ அல்லது தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் பேசும் தருணங்களாகவோ அல்லது இன்னும் ஏதாவது பூடகமான விஷயங்களாகவோ அவை அமையலாம். சில பொழுதுகளில் எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு ஒன்றுமே நடவாதது போல முன் வந்து நிற்பார்கள். அப்படித்தான் ஒருநாள் இராசலிங்கமும் அவர் மனைவி சுலோசனாவும் திடீரென்று, நினையாப் பிரகாரமாக சிறீதரனின் வீட்டிற்கு தரிசனம் கொடுத்தார்கள். சிறீதரனின் மனைவி […]
மலை மங்கை என் மனைவி சுமி போன்செய்திருந்தாள். இன்று கீதனை படசாலையிலிருந்து வீட்டுக்கு கூட்டிச்செல்லும்படி. தனக்கு அலுவலகத்தில் அவசர வேலை இருப்பதால் என்னைத்தான் மகன் கீதனை அழைத்துச்செல்லும்படி அன்புக்கட்டளை இட்டிருந்தாள். இரண்டு மணித்துளிகள் விடுப்பு எடுத்துக்கொண்டு கீதனின் பாடசாலைக்கு விரைந்தேன். கீதன் அங்கு என்னை எதிர்பார்க்கவில்லை என்பது என்னைக்கண்டதும் அவன் முகம் மாறியதிலிருந்து என்னால் உணரமுடிந்தது. “Where is mum? What happened to her? …” அவன் கண்கள் அங்கும் இங்கும் அலைபாய்ந்தன. கீதனுக்குப்பக்கத்தில் […]
(1819-1892) (புல்லின்இலைகள் -1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா வால்ட்விட்மன்வாழ்க்கைவரலாறு: அமெரிக்காவின் உன்னதக் கவிஞருள் ஒருவரான வால்டயர் விட்மன்1819 ஆம் ஆண்டில் வெஸ்ட் ஹில்ஸ், லாங் ஐலண்டு, நியூயார்க்கில் பிறந்தார். தனது 12 வயது வரை புரூக்லினில் வசித்து வந்தார். அவர் 11 வயதினராய் உள்ளபோது வீட்டில் வருவாயின்றி வேலை செய்து பணம் சம்பாதிக்கப் பள்ளி யிலிருந்து தந்தையால் நிறுத்தப் பட்டார். ஆகவே அவர் சிறு […]
கோமதி நடராஜன் அநியாயங்களைச் ,சகித்துக் கொண்டே போனேன் . நல்லவளானேன் . சகிப்பு தொலைந்து , நிமிர்ந்து பார்த்தேன் கெட்டவளாய் ஆனேன் நக்கல்களை ,நல்லவிதமாய், எடுத்துக் கொண்டே நகர்ந்தேன் நம்மவள் ஆனேன். ஏனென்று ஏறெடுத்துப் பார்த்தேன். யாரோ என்றானேன் . பொய்யென்று தெரிந்தும், பொறுத்துப் போனேன் ஏற்றவளானேன் நம்பாத முகம் காட்டினேன் தகாதவளானேன் நல்லவளாய் ஏற்றவளாய் இனியவளாய் என்றுமிருக்க நல்லவை அல்லாதவைகளைப், பொறுத்துப் போனால்தான் சாத்தியமென்றால் , பாதகமில்லை ! நான் ,பொல்லாதவளாகவே இருந்துவிட்டுப் போகிறேன். ————————–
இலக்கிய விசாரம் என்பது சற்றுக் கனமான விஷயம்தான். அதைச் சுவைபடச் செய்ய வேண்டிய அவசியம் ஆரம்பத்தில் இன்றுள்ள நிலையில் உண்டு. கதைகள், நாவல்கள், நாடகங்கள் என்று எழுதும் ஆசிரியன் வாசகனை நினைத்துக்கொண்டு எழுதக்கூடாது. என்கிற கட்சியைச் சேர்ந்தவன் நான். எழுதி முடித்த பிறகு வாசகன் வரலாமே தவிர, அதற்கு முன் இலக்கியாசிரியன் முன் அவன் வரக்கூடாது; வந்தால் அவன் எழுத்துத் தரம் குறைகிறது. ஆனால் இலக்கிய விசாரம் செய்யும்போது மட்டும் எந்த இலக்கியாசிரியனும் வாசகனை மனத்தில் வைத்துக் […]
பெரும்பாலும் வெகுஜனஇதழ்களிலும், கொஞ்சம் இலக்கிய இதழ்களிலும் படித்த தமயந்தியின் சிறுகதைகள் அவரின் பிறப்பு, ஜாதி சார்ந்த அடையாளங்களைக் காட்டியதில்லை. அவரின் நாவல்” நிழலிரவு” படிக்க ஆரம்பித்தவுடன் கிறிஸ்துவ சமூகம் சார்ந்த அவரின் அனுபவங்கள் அவரின் பெயர், கிறிஸ்துவ சமூகம் பற்றிய எண்ணங்கள் அவரின் இன்னொரு முகமாய் வெளிப்படுத்தியது. தமிழ்ச்சூழலில் கிறிஸ்துவ இலக்கியம் பற்றிய யோசிப்பில் எழுத்தாளர் பட்டியல் விடுபட்டுப்போகிறது. சிஎல்எஸ், பூக்கூடை எண்பதுகளில் நடத்திய இலக்கியம் சார்ந்த கருத்தரங்குகள் ஞாபகம் வந்த்து.நண்பர்வட்டம் பத்திரிக்கை சரோஜினி பாக்கியமுத்து மறைந்து […]
அமெரிக்கக் கலாச்சாரத்தில், அமெரிக்காவில் வளரும், பிள்ளைகளின் மொழியிலிருந்து, அன்னியப்படும் தமிழைப் பற்றிய, ஒரு உணர்வுப் பூர்வமான குறும்படம். கிருஷ்ணமூர்த்தி குமாரமங்கலம் ராமசாமி, அமெரிக்காவில் இருக்கும் தன் மகன் சுவாமிநாதன் வீட்டிற்கு, வரும் காலகட்டத்தில் இருந்து ஆரம்பிக்கிறது படம். கிராமத்தில் பிறந்து, நகரத்தில் வளர்ந்த ஒரு தென்னிந்தியனின் மன உணர்வோடு இருக்கும் கிருஷ்ணமூர்த்தி, அமெரிக்காவின் கலாச்சாரத்தோடு ஒப்ப மறுக்கும் காட்சிகள் மிகவும் இயல்பாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. தேக ஆரோக்க்¢யம் என, எந்நேரமும் ஓடிக் கொண்டிருக்கும் அமெர்¢க்கர்கள், குவளையில்லாத “ ஸ்பவுட்” […]