தொண்டிப் பத்து

This entry is part 3 of 15 in the series 14 ஜனவரி 2018

தொண்டி என்பது சேர நாட்டின் கடற்கரை நகரமாகும். இது தற்போது குறும்பொறை நாட்டில் ஒரு சிற்றுராய்க் காட்சியளிக்கிறது என்பர். ஒரு சிலர் மலைநாட்டில் உள்ள இந்நாளைய ஆலப்புழைதான் தொண்டி என்பர். இராமநாதபுர மாவட்டத்திலும் தொண்டிப் பட்டினம் உள்ளது. இப்பகுதியின் பத்துப் பாடல்களிலும் தொண்டி சிறப்பிக்கப்படுவதால் இப்பகுதி தொண்டிப் பத்து எனப்பட்டது. ஐங்குறு நூறு நூலில் இப்பகுதிக்கு ஒரு சிறப்பு உள்ளது. இப்பகுதிப் பாடல்கள் எல்லாம் அந்தாதித் தொடையாக அமைந்துள்ளன. தொண்டிப் பத்து—1 திரையிமிழ் இன்னிசை அளைஅ அயலது […]

மனித நேயம்

This entry is part 8 of 15 in the series 14 ஜனவரி 2018

  ரசிப்பு எஸ். பழனிச்சாமி ————————————————————————————————————————————— இரண்டு நாட்களாக ரங்கனின் வாழைப்பழ வண்டியைக் காணவில்லை. ஆபீஸ் முடிந்து வீட்டுக்குப் போகும் வழியில் தினமும் அவரிடம்தான் பழம் வாங்குவேன். அவரைப் போலவே வண்டியில் வாழைப்பழம் விற்பவர்கள் இன்னும் இரண்டு பேர் இருக்கிறார்கள். ஆனால் ரங்கனிடம்தான் எப்போதும் கூட்டம் இருக்கும். அதற்குக் காரணம் அவருடைய தாராளம். இருபது ரூபாய் பழத்தை பதினைந்து ரூபாய்க்கு கொடுப்பார். அப்படியும் சிலர் இன்னும் ஒரு பழம் கொடு என்று கேட்பதுண்டு. அதெல்லாம் வராதும்மா என்று […]

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்

This entry is part 9 of 15 in the series 14 ஜனவரி 2018

    {  1  } வெப்பம் சுவாசிக்கும் மாலைகள்   இருவர் தோள்களிலும் உள்ள மணமாலைகள் வெப்பம் சுவாசிக்கின்றன   நடக்கும்போது அவளை அவள் மனம் பின்னோக்கித் தள்ளுகிறது   வீட்டிற்குத் தெரியாமல் ஓர் அம்மன் கோயிலில் மாலைகள் தோள் மாறின இப்போது அவன் அவள் கைப் பிடித்திருப்பது மட்டுமே ஒரே ஆறுதல்   ” அம்மா என்ன சொல்வாள் … ? ” எரிமலைக் குழம்பை குடித்து முடிக்க அவள் நம்பிக்கையின் வாய் அகலத் […]

மாட்டுப்பால் மூலம் எலும்புக்கு தேவையான சுண்ணாம்பு சத்து (கால்சியம்) கிடைக்கிறதா?

This entry is part 5 of 15 in the series 14 ஜனவரி 2018

துக்காராம் கோபால்ராவ் நான் முன்பு எழுதிய கட்டுரையை பற்றி ஒரு நண்பர் என்னிடம் கேட்டார். அவர் சமீபத்தில் ஒரு சர்ஜரி செய்துவிட்டு ஓய்வெடுத்துகொண்டிருக்கிறார். அவரிடம் அவரது மருத்துவர் நிறைய பால் குடியுங்கள் என்று ஆலோசனை தந்திருக்கிறார். காரணம் அவருக்கு ஆஸ்டியோ ஆர்த்ரிடிஸ் இருக்கிறது (osteoarthritis) https://www.webmd.com/osteoarthritis/default.htm அவரது எலும்புகள் பலவீனமாக ஆகியிருப்பதால், அவர் மாட்டுப்பால் குடிக்கவேண்டுமென்றும், அடிக்கடி எலும்பில் உள்ள அடர்த்தியை அளந்துகொள்ளவேண்டுமென்றும் ஆலோசனை தந்திருக்கிறார்கள். அதனால், அவர் என்னை அழைத்து, நீங்கள் பால் குடிக்காமல் இருந்து, […]

ஆண்டாள்

This entry is part 7 of 15 in the series 14 ஜனவரி 2018

வைரமுத்து எழுதிய “தமிழை ஆண்டாள் கட்டுரை தினமணி [08-01-18] இல் படித்தேன். நம்பிக்கையில்தான் ஒவ்வொருவரும் வாழ்வை நடத்தி வருகிறோம். அதன் அடிப்படையில் ஆண்டாள் கூறும் செய்தியாக நம்பிக்கை மீது நம்பிக்கை வைப்போம் என அவர் கட்டுரையைச் சிறப்பாகவே முடித்துள்ளார். ஆனால் இறைவனையும் இயற்கை இறந்த நிகழ்வுகளையும் கழித்துப் பார்க்க வேண்டும் என்கிறார். ஒரு நூலை அது எழுந்த காலத்தின் சூழலை வைத்துத்தான் ஆராய்ந்து பார்க்க வேண்டும் இப்போதைய கண்ணாடியை அணிந்து பார்த்தல் தகாது. நாலாயிரத் திவ்யபிரபந்த்த்தின் ஒருகூறான […]

ஆண்டாள், அறிவீனம் வேண்டாள்…!

This entry is part 4 of 15 in the series 14 ஜனவரி 2018

குமரன் இச்சமூகம் மொத்தமுமே அறிவற்றும் நேர்மறை சிந்தனையற்றும் போய்விட்டதோ என்ற எண்ணம் தோன்றும் வண்ணம் நடந்தேறி வருகிறது “தமிழை ஆண்டாள்” தோற்றுவித்துக் கொண்டிருக்கும் விவாதங்கள்…இக்கட்டுரையை எழுதிய வைரமுத்து என் பார்வையில் சிறந்த பாடலாசிரியர். மலின வரிகளுக்கிடையிலும் சில மகத்தான வார்த்தை கோர்வைகளை அளித்தவர். ஓரளவுக்கு “ஜனரஞ்சக” கவிஞர். இதுவே, அவர் தன்னை நிறுத்த‌ வேண்டிய, நாம் அவரை பொருத்த வேண்டிய, இடம். இதை விடுத்து, அவரை இலக்கியவாதி என நோக்குவதில் துவங்குகிறது நம் அறிவீனம். எதற்காக நாம் […]

பி.கே. சிவகுமாரின் ”உள்ளுருகும் பனிச்சாலை” கவிதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு

This entry is part 2 of 15 in the series 14 ஜனவரி 2018

ஜனவரி 2018-ல் பிரக்ஞை பதிப்பகம் வெளியிட்ட தி. பரமேசுவரியின் “தனியள்” கவிதைத் தொகுப்பு (இரண்டாம் பதிப்பு) மற்றும் பி.கே. சிவகுமாரின் ”உள்ளுருகும் பனிச்சாலை” (முதல் பதிப்பு) ஆகியவற்றின் வெளியீட்டு நிகழ்ச்சி, தற்போது நடைபெற்று வரும் சென்னைப் புத்தகக் கண்காட்சியில், ஜனவரி 12 – 2018 (வெள்ளி) மாலை, சிக்ஸ்த் சென்ஸ் (புத்தகக் கடை எண்: 700-ல்) சிறப்பாக நடந்தேறியது. தி. பரமேசுவரியின் தனியள் கவிதைத் தொகுப்பைக் கவிஞர் பெருந்தேவி வெளியிட்டு, கிருத்திகா பெற்றுக் கொண்டு சிறப்பித்தனர். பி.கே. […]

அவர்

This entry is part 10 of 15 in the series 14 ஜனவரி 2018

நிலாரவி அதிகாலையில் அந்த மரணச் செய்தியோடு விழிக்க நேர்ந்தது. ‘அவர்’ இறந்து விட்டார். ‘அவர்’ என்றால், அவன் வீடிருக்கும் அந்த தெருவில் “வசிக்கும்” அல்லது “வசித்த” தெருவாசி தான் அவர். மனிதனே இறந்து விட்ட பிறகு அவரின் பெயர் அவ்வளவு முக்கியமில்லை தானே? ” பெயரினை நீக்கி பிணம் என்று பெயரிட்டு …” திருமூலரின் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தது அவனுக்கு. மரணித்தவர்கள் அனைவருக்கும் இறுதியாக இடப்படும் பெயர் பிணம் தான் என்று தோன்றியது. “ஒரு எட்டு […]

கதிரியக்கம் இல்லாத எதிர்கால அணுப் பிணைவு மின்சக்தி உற்பத்திக்குப் போரான் – ஹைடிரஜன் புதிய எரிக்கரு பயன்படும்

This entry is part 11 of 15 in the series 14 ஜனவரி 2018

FEATURED Posted on January 14, 2018 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++ பிண்டமும் சக்தியும் ஒன்றெனக் கண்டார் ஐன்ஸ்டைன் சமன்பாட்டு மூலம் ! அணுப்பிளவு யுகம் மாறி அணுப்பிணைவு யுகம் உதயமாகும் ! கதிரியக்க மின்றி மின்சார விளக்கேற்றும்  ! இயல்பாய்த் தேய்ந்து மெலியும் ரேடியம் ஈயமாய் மாறும் ! யுரேனியம் சுயப் பிளவில் ஈராகப் பிரிந்து பிளவு சக்தி உண்டாகும் ! பேரளவு உஷ்ணத்தில் சூரியனில் நேரும் பிணைவு போல் போரான் […]

எனக்குரியவள் நீ !

This entry is part 1 of 15 in the series 14 ஜனவரி 2018

மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++   பெண்ணே !  நீ என்னை நேசிக்கிறாயா ? நானுனக்குத் தேவை யாயின் என்மேல் நம்பிக்கை வைத்திடு ! என்னவளாய் நீ இருந்திட எனக்குத் தேவை நீ ! “நலம் தானா,” என்று நீ என்னைக் கேட்டால் நலமென்று பதில் சொல்வேன் !   நலமாக நானில்லை என்று நன்கு அறிவேன். நான் உன்னை இழந்திருப்பேன் ! நேரம் எடுத்து நமது தனிமையில் […]