பிறை நிலா

This entry is part 27 of 37 in the series 22 ஜூலை 2012

(நிலாவண்ணன்) செல்வியைக் காணப் போகும் அந்த மகிழ்ச்சியான நினைவோடு பேருந்தை விட்டு நான் இறங்கும்போது உச்சியைத் தொட்டுவிட்டது பொழுது. இருபது ஆண்டு காலத்தில் எவ்வளவோ மாற்றம் அடைந்து விட்டிருந்தது தோட்டமும் சுற்றுப் புறங்களும். காலத்தின் கோலத்தைப் பாத்தியாப்பா…? எப்படி இருந்த இடம். இப்படி மாறிப் போய்க் கெடக்கு. இங்கன ஒரு பெரிய்ய மைதானம் இருந்திச்சு. நாம பந்து வெளையாடுவம். குளிக்க வர்ர வயசுக்கு வந்த பொம்பள புள்ளைங்க நாம வெளையாடறத பாக்கறதே நமக்கு ஒரு தெம்ப கொடுக்குமில்ல. […]

நகர்வு

This entry is part 26 of 37 in the series 22 ஜூலை 2012

சாந்தாதத்     அடுத்து என்ன செய்வது எனும் குழப்பத்துடன் பால்கனியில் நின்று கொண்டிருந்தான் கணேசன். எதிரில் சற்றே முயன்றால் தொட்டுவிடலாம் என்றளவு அருகாமையில் கம்பீரமாகத் தென்பட்டது புதிதாய் எழுந்து கொண்டிருந்தது அக்கட்டடம். அன்றுதான் ஜந்தாம் தளத்திற்குக் கூரை போடப்பட்ட அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு குளுமை கலந்த புத்தம் புது சிமெண்ட் வாசனையைக் காற்றில் அனுப்பிக் கொண்டு சலனமற்ற ஞானி போல் நின்று கொண்டிருந்தது. ஊர்..உத்தியோகம்..பயணம்… போக்குவரத்து.. இப்படி எக்கவலையுமில்லாமல் இது … சிறு பிள்ளைத்தனமாய் ஒரு எண்ணம். […]

தாவரம் என் தாகம்

This entry is part 25 of 37 in the series 22 ஜூலை 2012

துவக்கப் பள்ளியில் தோட்டம் போட்டோம் நான் கத்தரி வைத்தேன் சாணமும் சாம்பலுமாய் சத்துர மிட்டேன் கண்காட்சியானது என் கத்தரிச் செடிகள் வாத்தியார் சொன்னார் ‘செடியைக் குழந்தையாய் வளர்க்கிறாய் சிறந்த தந்தையாவாய் நீ’ பத்தாம்வகுப்பில் வாத்தியார் கேட்டார் ‘பார்த்ததில் ரசித்தது எது?’ ‘பூவோடும் பிஞ்சோடும் கொஞ்சும் கத்தரிச் செடி ‘ என்றேன் ‘நீ ஒரு கவிஞனாய் வருவாய்’ என்றார் அப்பாவுக்கு அரசாங்க வேலை புதுப்புது ஊர்கள் புதுப்புது வீடுகள் எல்லாம் அடுக்கு மாடி தொட்டியில் வைத்தேன் கத்தரி காலை […]

கணினித்தமிழ் வேந்தர் மா.ஆண்டோ பீட்டர் அவர்களுக்கு ஒரு அஞ்சலி

This entry is part 24 of 37 in the series 22 ஜூலை 2012

  ஆறுமுக‌னேரியின் அருந்த‌மிழ‌ச் செல்வ‌! அறிவியல் தமிழின் “கணினியன் பூங்குன்றன்” நீ எளிதாய் இனிதாய் நுட்ப‌ங்க‌ள் ஆயிர‌ம் விள‌க்கிய‌ அற்புதம் ம‌ற‌க்க‌ இய‌லுமோ? அக‌த்திய‌ன் தமிழோ புராணமாய் போன‌து. அக‌ப்பட்ட‌ த‌மிழோ த‌ட‌ம் ம‌றைந்து போன‌து அறு வகை ம‌த‌மும் நால் வகைக் கூச்ச‌லும் ஆழ‌ப் புதைத்த‌பின் த‌மிழ் என்ன‌ மிச்ச‌ம்? க‌ணினித் த‌மிழ் இங்கு க‌ண் திற‌ந்த‌ பின்னே எட்டாத‌ அறிவும் இங்கு எட்டுத்தொகை ஆன‌து. எத்தனை எத்தனை நூல்க‌ள் எழுதி எழுதி குவித்தாய்! இணைய‌த்த‌மிழ் […]

தில்லிகை

This entry is part 23 of 37 in the series 22 ஜூலை 2012

  தில்லிகை – தில்லியில் சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டு இலக்கிய ஆர்வலர்களின் கவனத்தைப் பெற்றுவரும் தமிழ் இலக்கிய வட்டம்.  இது, தில்லித் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவுடன் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை மதியம் 3 மணிக்கு, தில்லித் தமிழ்ச் சங்கத்தில் சந்திப்புகளை நட த்தி வருகிறது. ஒவ்வொரு மாதமும் ஒரு மையக் கருத்தை ஒட்டி இந்தச் சந்திப்புகள் நிகழ்கின்றன.  இதுவரை, ‘மதுரை’, ‘கரு’, ‘போர்’, ‘தில்லியும் தமிழ் இலக்கியமும்’, ‘தமிழும் பிற இந்திய மொழி இலக்கியங்களும்’ ஆகிய மையக் கருத்துக்களை ஒட்டி ஐந்து இலக்கியச் சந்திப்புகள் நடந்தேறியுள்ளன.  உறுப்பினராக […]

பதிவர் துளசி கோபால் அவர்களின் “என் செல்ல செல்வங்கள்” : புத்தக விமர்சனம்

This entry is part 22 of 37 in the series 22 ஜூலை 2012

என் செல்ல செல்வங்கள் – பதிவர் துளசி கோபால் அவர்களின் புத்தகம். எழுதுவதற்கு விஷயங்கள் எத்தனை  எத்தனை   உள்ளன ! தான் வளர்த்த செல்ல பிராணிகள் குறித்து ஒரு தொகுப்பு எழுத வேண்டும் என்று நினைத்த அந்த  எண்ணத்துக்கு முதல் வணக்கம் ! சிறு வயதில் வளர்த்த மணி வாத்து நீரில் மூழ்கி இறந்ததில் துவங்குகிறது பயணம். கிட்ட தட்ட 19  வளர்ப்பு பிராணிகள். நாய்கள், புறாக்கள், பூனைகள் என.. ஒரு உண்மையை சொல்லி விடுகிறேன். எனக்கு புத்தகத்தில் முதல் […]

ஓரு கடிதத்தின் விலை!

This entry is part 21 of 37 in the series 22 ஜூலை 2012

“உங்களுக்கொரு கடிதம். இலங்கையிலிருந்து ஒரு ‘கேர்ள்’ போட்டிருக்கின்றாள்” தந்துவிட்டு அருகில் அதன் வாசிப்புக்காகக் காத்திருக்கின்றாள் மனைவி. பத்திரிகையில் மூழ்கியிருந்த என்னை அந்தக் கடிதம் திசை திருப்பியது. வழமைக்கு மாறான ஒரு கடிதம். கடிதத்தின் ‘கவரில்’ இருந்த பெயரை மட்டும் வைத்துக் கொண்டு பார்த்தால் அது ஒரு இளம்பெண்ணின் கடிதமாகத்தான் இருக்க வேண்டும். ஊகம் சரியானதுதான். வாசித்த நேரத்திலிருந்து மனம் கிளுகிளுப்பாக இருந்தது. உணர்வுகள் ‘வயக்கிரா’வினால் வாரி விடப்பட்டது போன்று தாளமிட்டன. இற்றைவரைக்கும் எனக்கு ஒரு காதல் கடிதம் […]

வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது

This entry is part 20 of 37 in the series 22 ஜூலை 2012

Dear Sir, The Tamil Literary Garden Iyal Virudhu  nomination form is attached. I shall be grateful if you will please please carry this in Thinnai website. Many thanks for your usual cooperation. best regards. anbudan a.muttulingam வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது. கனடாவில், அறக்கொடை நிறுவனமாகப் பதிவுசெய்யப்பட்ட தமிழ் இலக்கியத் தோட்டம் உலகெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். […]

உய்குர் இனக்கதைகள் (3)

This entry is part 19 of 37 in the series 22 ஜூலை 2012

5. செல்வமும் நீதியும் ஒரு நாள் அரசரும் மதியாளர் நசிர்தினும் உரையாடிக் கொண்டிருந்தார்கள். மதியாளரிடம், “நசிர்தின்.. உன்னிடம் செல்வம், நீதி இதில் ஒன்றை தேர்வு செய்யச் சொன்னால், எதைத் தேர்வு செய்யவாய்?” என்று கேட்டார் அரசர். சற்றும் யோசியாமல், “ பணம்..” என்ற பதில் சொன்னார் மதியாளர். “என்ன?” என்று ஆச்சரியப்பட்ட அரசர், “நான் நீதியைத் தான் தேர்வு செய்வேன்.  பணம் எல்லா இடத்திலும் இருக்கிறது.  நீதியைக் காண்பது தான் மிகவும் அரிதானது” என்றார் மிகுந்த கவனத்துடன். […]

சிற்றிதழ் வானில் புதுப்புனல்

This entry is part 18 of 37 in the series 22 ஜூலை 2012

  அம்ரா பாண்டியன் என்பவரை ஆசிரியராகக் கொண்டு மன்னார்குடியிலிருந்து வெளிவருகிறது “ கருக்கல் விடியும் “ இதழ். உயிர்மை, காலச்சுவடு அளவில் ஒரு வணிக இதழாக பரிணாமம் பெரும் முயற்சியில் இருப்பது இதழில் உள்ளடக்கத்திலேயே தெரிகிறது. கலை, இலக்கியம், அரசியல், பண்பாடு என்று அஞ்சறைப் பெட்டியாக அனைத்தையும் உள்ளடக்கி வெளிவந்திருக்கும் இதழின் மே-ஜூன் 2012 பிரதியைக் கண்ணுறும் வாய்ப்பு கிடைத்தது. பல வண்ண பள பள அட்டை, கல்வியாளர் ஆயிசா இரா.நடராசனின் புகைப்படத்துடன், உள்ளே பரிதி பாண்டியன் […]