BAT MAN & BAD MAN பேட் மேனும், பேட்ட் மேனும்

This entry is part 7 of 37 in the series 22 ஜூலை 2012

கோவிந்த கோச்சா “ நான் இருளில் பிறந்தவன், நீயோ இருளாய் இருப்பவன்” இதற்கு மேல் அழகாக இரு எதிர்நிலை கதாபாத்திரங்களைச் சொல்ல முடியாது. இது BAT MAN படத்தின் வரும் உன்னத வசனம். மாண்ரெக், முகமூடி ஃபேண்டம்” மாயாவி, சூப்பர்மேன், விக்ரமாதித்யன், போன்ற கதாபாத்திரங்களில், நம்ம ஊர் படைப்பு என்பதாலோ என்னவோ விக்ரமாதித்யன் தோளில் போட்டுக்கொண்டு ஒரே டயலாக் டயலாக்… அப்புறம் வேதாளம் போய் மரத்தில் மீண்டும் தொங்கி கொள்ளும். அதனால் தானோ என்னவோ இன்றும் நாம் […]

கல்வியில் அரசியல் பகுதி – 2

This entry is part 6 of 37 in the series 22 ஜூலை 2012

  யார் மேய்ப்பர்? தென் தழிழ் நாட்டில் ஒரு சொலவடை உண்டு “எரிகிற கொள்ளியிலே எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?” . கல்வித் துறை மட்டுமல்ல, பொதுவாக நிர்வாகம், நெறிமுறை கடைப்பிடித்தல் இவை மத்திய அரசுத் துறைகளிலும் நிறுவங்களிலும் ஒரு அளவுக்காவது தென்படும். மாநில நிர்வாகம் அனேகமாக எல்லா மாநிலங்களிலும் மோசம் அல்லது சுமார் என்ற அளவே இருக்கும். உயர்கல்வி நிறுவனங்கள் தொட்ங்குவதற்கான ஒப்புதல் மற்றும் அந்தக் கல்வி நிறுவங்களைக் கண்காணிப்பது, தரவரிசைப் படுத்துவது இவை எல்லாமே […]

மாமியார் வீடு

This entry is part 5 of 37 in the series 22 ஜூலை 2012

(திருமதி ஒல்கா அவர்களின் “அத்தில்லு ” என்ற சிறுகதையை ‘மாமியார் வீடு” என்ற தலைப்பில் அனுப்பி உள்ளேன். ஒல்கா வின் புகைப்படத்தை இணைத்துள்ளேன். ‘தொடுவானம் தொட்டுவிடும் தூரம்’ என்ற தொடர் திண்ணையில் வெளிவந்துள்ளது, ஒல்காவின் படைப்புதான்.) தெலுங்கு மூலம் : ஓல்கா தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன் மின் அஞ்சல் : tkgowri@gmail.com இப்போதுதான் செய்தி வந்தது, ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி அன்று அனுப்பி விடுவார்கள் என்று. சுதந்திர தினத்தன்று எனக்கு சுதந்திரம். சிறுவயதில் பார்த்த வண்ண வண்ண […]

மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 35

This entry is part 4 of 37 in the series 22 ஜூலை 2012

40.     மகன் சிக்கம நாயக்கனா, கிருஷ்ணப்ப நாயக்கரா யாரை குற்றம் சொல்வது, ஏதோவொரு அமானுஷ்ய சக்தி ஜீவனுள்ள பொம்மைகளைக்கொண்டு காட்சிகளாக நகர்த்துகிறது. கடந்த சில தினங்களாக தெற்கே யுத்தமென்ற பெயரில் நடந்துகொண்டிருக்கும் கொலைகளுக்கும், உயிர்ப்பலிகளுக்கும், காட்டு விலங்குகளைப்போல மனிதர்கள் ஒருவரை ஒருவர் மூர்க்கமாக வெட்டிமடிவதற்கும் ராஜகிரிபோல, தில்லை கூத்தபிரான்போல, காவற்காட்டு மரங்களைப்போல இவளுமொரு ஊமை சாட்சி. பசியால் வாடும் வீரர்கள் மீது கடும் வெயிலும் தாக்குதலை நடத்துகிறது. வீரர்களில் பலர் கூர் மழுங்கிய வேல்களை ஏந்தியிருந்தனர்.  உடைந்த […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 22

This entry is part 3 of 37 in the series 22 ஜூலை 2012

புறத்தூய்மை நீரான் அமையும் அகத்தூய்மை வாய்மையால் காணப் படும்.   மனிதனின் வாழ்க்கையில் பல பருவங்கள் அவன் உருவாகும் காலத்தில் பிள்ளைப் பருவம் முக்கிய பங்கினை வகிக்கின்றது. உடல் மற்றும் மனம் வலிமை பெறுவது இக்காலத்தில்தான். மனித வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கும் இப்பருவத்தினைப் பற்றி நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். கொஞ்சுவதற்கும் விளையாடு வதற்கும் மட்டுமல்ல.  மனிதன் பொறுப்புடனும் அக்கறையுடனும் பாதுகாக்கப்பபட வேண்டியது , குழந்தைப் பருவம், சிறுவர்களாக இருக்கும் காலம்.  இவைகளில் கவனம் செலுத்தும்  […]

சென்னையில் கழிந்த முதல் ஒரு பகல்

This entry is part 2 of 37 in the series 22 ஜூலை 2012

அன்று 1949 = வருடத்திய ஆகஸ்ட் மாதத்தின் நான்காவது வாரத்தின் ஒரு நாள் முற்பகல். தேதி 27 அல்லது 28 ஆக இருக்கவேண்டும். எது என்று நிச்சயமாக நினைவில் இல்லை. ஜெம்ஷெட்பூருக்குப் போகவேண்டும். வழியில் சென்னையில் கழித்த முதல் முற்பகல் அது. ஜெம்ஷெட்பூரில் இருக்கும் மாமா எழுதியபடி சாயந்திரம் செண்டிரலில் இருந்து புறப்படும் கல்கத்தா மெயில் ஏறவேண்டும். காரக்பூர் வரை. ஒரு நாள் விட்டு மறு நால் காலை கார்க்பூர் போகும். பின் அங்கிருந்து பம்பாய் மெயிலில் […]

நினைவுகளின் சுவட்டில் – 94

This entry is part 1 of 37 in the series 22 ஜூலை 2012

அந்தக் காலத்தில் ஹிராகுட்/புர்லா முகாம்களில் என்ன தமிழ் தினசரி பத்திரிகை வந்தது, எது எனக்குப் படிக்கக் கிடைத்தது என்று நினைவில்லை. அங்கு யாரும், என்னையும் சேர்த்து, தமிழ் தினசரி பத்திரிகை எதுவும் வாங்கியதாக நினைவில்லை. ஆயினும் நான் ஒரு தமிழ் தினசரி பத்திரிகையின் மதிப்புரை பக்கத்தில் தான் இரண்டு புத்தகங்களின் மதிப்புரைகளைப் படித்துப் பார்த்த பின் தான்  அவற்றை வரவழைத்தேன்.என்ற நினைவு என்னவோ மறையவில்லை. இரண்டு சிறுகதைத் தொகுப்புகள். ஒன்று ரகுநாதன் கதைகள். மற்றது, கு. அழகிரிசாமி […]