அசைவற்று கிடந்தது பிணம் அதன்மீது அழுகைஒலிகள் தேங்கியிருந்தன வார்த்தைகளில் சொல்லமுடியாத துயரத்தின் ரேகை படர்ந்திருந்தது. எழுந்து நடந்து செல்ல முடியாதென்பது பிணத்திற்கு தெரிந்திருக்க கூடும் தன்னை எரிப்பதற்கோ அல்லது புதைகுழியில் அடக்குவதற்கோ எதுவாக இருப்பதற்கும் தயாராயிருந்தது. பிணங்களோடு வாழ்தலில் உள்ள ஆர்வம் வற்றிப் போகவில்லை. வானத்திறப்பின் நிகழ்தலில் முடிவற்றதொரு நெடும்பயணம் தேவதைகளைத் தேடி தேடி பிணத்தின் பயணம் தொடர்கிறது. முக்ம்பார்த்து நாளாயிற்று எதிரும் புதிருமாய் கூட சந்திக்கமுடியவில்லை. எதையேனும் வெற்றிக் கொள்ள அல்லது தோல்வியுற உருவாகும் உலகில் […]
முன்பெல்லாம் தேதி மறக்கும் அல்லது மாதம் மறந்து போகும். இப்போதெல்லாம் வருடமே மறக்கிறது. 2011 என்பதை இன்னும் பலர் 2010 என்றுதான் எழுதுகிறார்கள். அப்பப்பா! எவ்வளவு துரித கதியில் பறக்கின்றன நாட்கள். நேற்றுத்தான் சக்கரவர்த்தி தொடக்கநிலை ஆறு படித்ததுபோல் ஞாபகம். இப்போது இன்னும் மூன்று மாதங்களில் ஓ நிலைத் தேர்வு எழுதும் மாணவனாக நிற்கிறான். அப்பா ராகவன், அம்மா சுமங்கலி, கடைக்குட்டி சக்கரா என்கிற சக்கரவர்த்தி. டோர்செட் சாலையில்தான் வாசம். சக்கராவின் பெரியக்கா புவனா வீராசாமி சாலையில் […]
கோவி நேசனின் ‘சிறுவர் அரங்க கோலங்கள்’ மறைந்த கோவிந்தசாமி லோகநேசன் (கோவி நேசன்) எழுதிய ‘சிறுவர் அரங்கக் கோலங்கள்’ என்னும் சிறுவர் நாடகப் பிரதிகளைக் கொண்டமைந்த நூல் வெளியீடு 31.07.2011 ஞாயிறு காலை 8.00 மணிக்கு யாழ்ப்பாணம், வதிரி தமிழ்மன்ற மண்டபத்தில் கவிஞர் வதிரி கண எதிர்வீரசிங்கம் தலைமையில் இடம்பெற்றது. ஆசிரியராக, அதிபராக, பல்துறை ஆற்றல் மிக்க கலைஞனாகத் திகழ்ந்த கோ. லோகநேசன் மறைந்த 31 ஆம் நினைவு நாளிலே இந்நூல் வெளியீடு இடம்பெற்றது. நிகழ்வில் செல்வி […]
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “என் எளிய தோழனே ! துயரை மிகுந்து உண்டாக்கும் வறுமை மட்டுமே நியாய அறிவுக்கு வழிகாட்டும் ஆதாரம் என்றும், வாழ்க்கை முறையை உணர்விக்கும் புரிதல் என்றும் நீ நம்பினால் உன் இனச் சந்தையோடு நீ திருப்தி அடைவாய். செல்வத்தை நிரம்பச் சேமிக்கும் சீமான்களுக்கு நியாய அறிவைப் (Knowledge of Justice) பற்றிச் சிந்திக்க நேரம் கிடைப்பதில்லை.” கலில் கிப்ரான் (அன்புமயமும் சமத்துவமும்) தாரணியில் […]
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா அறுபது ஆண்டுகளாக மறதி எனக்கு ஒவ்வொரு நிமிடமும் ! என் மீதுள்ள இந்த நோக்கம் நின்ற தில்லை ! வேகம் தணிவ தில்லை ! எதற்கும் தகுதி இல்லாதவன் ! புதிரான மனிதர் வரவேற்கும் விருந்தாளி அல்லன் வீட்டு உரிமை யாளிக்கு மீட்டுவேன் இசைக் கருவியை ! என்னிடம் உள்ள அத்தனையும் இன்று சமர்ப்பணம் அவருக்கே ! ++++++++++++ நேற்றிரவுக் கூட்டத்தில் நின் […]
எத்தனை கொடுமையான காலங்கள் அவை இருட்டறையில் தனி கைதியாய். குற்றம் செய்து பிடிபட்ட குற்றவாளிகளுக்கு கூட விலங்குகளை அவிழ்த்து விட்டுத்தான் சிறையில் அடைப்பார்கள். நான் என்ன பாவம் செய்தேனோ நான் மட்டும் விலங்குகள் சுமந்தே இந்த சிறையில் சுற்றி சுற்றி விழுந்து கிடக்கிறேன். அய்யோ பசித்து தொலைக்கிறது! என்னை சுற்றியுள்ள விலங்குகளையே தின்று விடலாம் போல் பசிக்கிறது. எதாவது கொடுத்து தொலைங்களேன் என்று நான் கத்திய பொழுதெல்லாம் வெறும் புளித்த அமிழத்தை என் முகத்தில் தெளித்த அந்த […]
சொந்த இடத்திலிருந்து அருகாமை நகரங்களுக்கு நகர்த்தப்பட்டவர்கள், எத்தனை பிடுங்கல்களை முன்னிருத்தி நகரத்திலேயே உழன்று கொண்டிருந்தாலும் அவர்களை அவ்வப்போது சொந்த ஊரை நோக்கி நகர்த்துபவைகளில் குறிப்பிடத் தகுந்தவை பொதுவான பண்டிகை நாட்களின் விடுமுறைகளும், அப்பகுதி கிராமத்து திருவிழாக்களும்தான்! திருவிழாக்கள் கடவுளை முன்னிருத்தியே என்றாலும் அதில் மிஞ்சி நிற்பது கூடிமகிழும் மனிதர்களின் உறவுகள்தான். எங்கேங்கோ நகர்ந்து போனவர்களும்கூட, பால்யத்திலிருந்து பழகி, சூழலின் காரணமாய் பிரிந்த நட்புகளை சந்திக்க முடியுமோ என்ற சிறு நம்பிக்கையோடு ஏங்கி வருவது உள்ளூர் திருவிழாவிற்குதான். ஒவ்வொரு […]
எனது பொருளாதார வசதிகளை எளிதாக வெளிக்காட்ட இயலுகிறது. ஆனால் எனது அறிவையோ திறமையையோ வெளிப்படுத்த எனக்கு இணையான அல்லது என்னிலும் மிக்கவர் தேவை படுகின்றனர்.அவர்களிடமிருந்து அங்கீகரிப்பும் அரிதாக என்னை மேம்படுத்திக் கொள்ள விஷய தானமும் கிடைக்கின்றன. அவர்களுள் ஒருவனாக நான் அறியப் பட்டவுடன் எங்களை விடவும் விவரமற்றோர் யாவருக்கும் என்னை வணங்கி ஏற்றல் கட்டாயமாகி விடுகிறது. இவ்வாறாக ஒரு புறம் ஒப்பாரும் மிக்காரும் மறுபுறம் கீழ் தளத்தில் வழியிலிகளுமாக ஒரு அறிவுஜீவ வழியில் நான் பயணப்படுகிறேன். காலப்போக்கில் […]
சுவரில் வாசகம் ”நோட்டீஸ் ஒட்டாதீர் மீறினால் தண்டிக்கப்படுவீர்” சூரியன் சுவற்றில் வரைந்த நிழல் ஓவியத்திற்கு யாரை தண்டிப்பது?
வஞ்சிக்க பட்டவரும் வஞ்சித்தவரும் வேடிக்கை மட்டும் பார்த்தவரும் நெருங்கியவர்களே ! சமபந்தி உணவு இவர்களோடு மற்றொமொரு நெருங்கியவரின் திருமணத்தில். ரௌத்திரத்தை இலைக்கடியில் ஒளித்துவிட்டு இலையில் பறிமாற பட்ட “சுமூக உறவு” இலைக்கு இலை எச்சிலாக்க பட்டு கைமாறியது அடுத்த ,அதற்கடுத்த இலையென.. போலி நாகரிகத்தை கிழித்தெரிய சந்தர்ப்பமில்லா துவண்ட என்னிடம் “காண்டிபத்தை” தேடி எடுக்க சொல்ல தேவை எனக்குமொரு பரமாத்மா. – சித்ரா (k_chithra@yahoo.com) http://chithranewblog.blogspot.com/