எழுபதுகளின் இறுதியாண்டுகளில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் என் மனம் மரபுக்கவிதைகளில் திளைத்திருந்தது. அதே சமயத்தில் புதுக்கவிதை சார்ந்த ஓர் ஈர்ப்பும் இருந்தது. சி.சு.செல்லப்பா தொகுத்திருந்த புதுக்குரல்கள் என்னும் தொகுப்பின் வழியாக புதுக்கவிதை எழுதும் பல கவிஞர்களின் பெயர்களையும் அவர்களுடைய கவிதைகளையும் பற்றித் தெரிந்துவைத்திருந்தேன். அந்தத் தொகுப்பைத்தான் புதுக்கவிதைக்கு ஓர் அடையாளத்தை உருவாக்கிய தொகுப்பு என்று சொல்வார்கள். அந்தக் கவிதைகளைப் படிப்பதும் அவற்றைப்பற்றி யோசிப்பதுமாக பல நாட்கள் கழிந்ததுண்டு. ஒருநாள் முடிவெட்டிக்கொள்வதற்காக ராஜா திரையரங்கத்துக்குப் பக்கத்தில் இருந்த ஒரு […]
பி.ஆர்.ஹரன் சர்க்கஸ்கள், கோவில்கள், தனியார் வசம் உள்ள யானைகள் அனுபவித்து வரும் துன்பங்களையும் அவற்றுக்கான காரணங்களையும் பார்த்தோம். அந்த அற்புதமான வனவிலங்கைக் கடும் துன்பத்திற்கு ஆளாக்கும் உரிமையாளர்களும் பாகன்களும் எந்த மாதிரியான சட்டமீறல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதையும் நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். சட்டமீறல்கள் சிறைப்படுத்தப்பட்ட யானைகளின் உரிமையாளர்களும், பாகன்களும் பின்வரும் சட்டங்கள், விதிகள், அறிவிப்புகள், கட்டளைகள், வழிகாட்டுதல்கள் ஆகியவற்றை மீறுகிறார்கள். சட்டத்திற்குப் புறம்பாக யானைகளை வைத்திருத்தல்: இந்திய வனவுயிரினங்கள் பாதுகாப்புச் சட்டம் 1972-ன் […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++ https://youtu.be/lc9D738u2YU https://youtu.be/8YiEm_cqlXc https://youtu.be/e1HA8L6Q3_8 +++++++++++++ ++++++++++++++++++ காந்த விண்மீன்கள் தீவிரக் கதிர்கள் வெளியேற்றும் ! இளம்பரிதிக் கனலில் கோள் உருவாக்க நீர்ப்பனி அணிவகுக்கும் ! பூதள விண்ணோக்கி முதன்முறை நீர்ப்பனி காணும். கோள் உருவாகும் போதே நீர்ப்பனி சேரும். அபூர்வக் காட்சி ! உயிரினத் துக்குச் சீர்கேடு உண்டாக்கும் நியூட்ரான் விண்மீன்கள் ! எரிசக்தி தீர்ந்த பின் வறிய விண்மீனாகி சிறிய தாகிப் பரிதிபோல் திணிவு நிறைப் […]
மருத்துவ வகுப்புகளை பொதுவாக டாக்டர் மில்லர் நடத்தினாலும், மனை மருத்துவம் ( Clinical Medicine ) வேறு விதமானது. அது மூன்று பிரிவுகள் கொண்டது. அவை மருத்துவம் ஒன்று, மருத்துவம் இரண்டு , மருத்துவம் மூன்று என்று அழைக்கப்படடன. ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு தலைமை மருத்துவர் இருப்பார். அவரின் தலைமையில் பல மருத்துவர்களும், பயிற்சி மருத்துவர்களும், மருத்துவ மாணவ மாணவிகளும் செயல்படுவார்கள். வார்டுகளும் தனியாக இயங்கும். பயிற்சி மாணவர்களுக்கான நோயாளிகளை அந்தந்த வார்டுகளில் சென்று பார்க்கவேண்டும். […]
சிறுகதை என்றால் என்ன? நாவல் என்றால் என்ன எனும் வினாக்களுக்கு இதுவரை சரியான விடை கிடைக்க வில்லை. பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால் ஒரே ஒரு நிகழ்வை வைத்துக் கொண்டு ஒரு சில பாத்திரங்களுடன் படைப்பது சிறுகதை எனலாம். பல்வேறு சம்பவங்களின் கலவையாக நிறைய பாத்திரங்களுடன் தள வருணனைகள் மிகையாகப் பெற்று வருவதே நாவல் எனலாம். இன்னும் கூடச் சொல்லலாம். தனியாக மணம் வீசுமொரு மலரே சிறுகதை; பலமலர்கள் சேர்ந்து கதம்பமாகிப் பலவித மணங்களைத் தருவதே நாவல் […]
சோம.அழகு இப்படிக் கேட்காமல் எந்தவொரு பிள்ளையும் தன் குழந்தைப் பருவத்தைக் கடந்திருக்காது. அப்பா, அம்மா, ஆச்சி, தாத்தா என அனைவரிடமும் கேட்டிருப்போம். அம்புலி மாமா, பஞ்சதந்திரக் கதைகள் எனக் கேட்டு ஓய்ந்த நேரத்தில்….இல்லை ! இல்லை ! இதையெல்லாம் சொல்லிச் சொல்லி அவர்கள் ஓய்ந்த நேரத்தில் நமக்கு அவர்களின் பால்ய காலத்தைப் பற்றி அறிய ஆவல் எழும். சட்டென நிமிர்ந்து உட்கார்ந்து அவர்கள் தங்கள் இளமைக் காலத்துக்கே சென்று, நேற்று அல்லது அதற்கு முன்தினம் நடந்ததை […]
ஸிந்துஜா 1 முன்னெச்சரிக்கை : இதுதான் என்னால் கொடுக்க முடிந்தசிறிய தலைப்பு இது சிறு அல்லது நெடுங்கதை ? இல்லை ! குறுநாவல், நாவல் […]
—————————– — கவிதை, கவிதை குறித்த உரையாடல்,கவிதை குறித்த கருத்துப் பகிர்வுகள், பார்வைகள், நிகழ்வுகள், கூட்டங்கள் எனஅமைந்த என் இலக்கியச் செயல்பாட்டின் நீட்சியாகவே எனது முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்பையும் ‘ நவீன தமிழ்க்கவிதைகளில் நாடகக் கூறுகள்: காலமும் வெளியும்’, என்பதாக தேர்வு செய்ய நேர்ந்தது. கவிதை ஒரு போதும் என்னை விட்டு விலகுவதில்லை. கவிதை குறித்த அறிமுகம் கிடைத்ததற்குப் பின் கவிதை எப்போதும் உடன் பயணி. அப்பயணத்தில், கவிதை குறித்த வரையறைகள் மாறி மாறி வந்திருக்கின்றன. […]
தே. பிரகாஷ் அவுல் பகிர் ஜெய்னுலாப்தீன் அப்துல் கலாம் அவர் பெயர் ஜெயத்தீயின் அனல் அடிக் கலாம் அடிமைப்பட்ட நெஞ்சத்தினை விடுவிக் கலாம் அக்னிச் சிறகுகள் கொண்டு ஜெயித்து கலக் கலாம் அசரச் செய்யும் தோல்விகளை பொறுக் கலாம் அடிபட்டு வெற்றிக்கனிகள் பறிக் கலாம் அதிகார சிபாரிசுகள் மறுக் கலாம் அதிகாரிகளாய் தொலைநோக்குடையவரை ஏற் கலாம் அசலாம் அலேக்குடன் திருக்குறளை கலக் கலாம் அதர்ம சக்தியை அறிவியல் கொண்டு மடிக் கலாம் அந்நியரின் பலத்தை பலம் கொண்டு […]
சேலம் எஸ். சிவகுமார். வாழையிலை எடுத்து வக்கணையாய்க் குடை பிடிக்க வழிகின்ற மழை நீரு வகிடெடுத்த தலைமீது வாலாட்ட முடியாது வாய்க்காலில் போய்ச் சேர வரப்பின் வழியாக வாகாய்த் தடம் பதிச்சு பாழையூர் பள்ளி போயி பாடமுந்தான் நான் படிச்சேன். ஏழையாயிருந்தாலும் எட்டு மைல் நடந்து போயி எல் கே ஜி, யூ கே ஜி ஏ பி சி டி யெல்லாம் எப்படியோ படிச்சாத்தான் எதிர்காலம் என்றென்னை ஆசையாய்ப் பெத்தெடுத்த ஆத்தா நெனச்சதனால் அம்புட்டுப் பாடமுந்தான் […]